உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்

241

ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்

ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்

.

1. தொன்மை சைபீரியா 2. சைபீரியா 3. யுரேசிய வன்பாலை/மங்கோலியப் பீடபூமி

1. தென் மையம் 2.வடசீனா 3. கொரியா - சப்பான் 4. தென் சீனா 5. இந்தோனேசியா


வடக்கு ஆசியப் பண்பாட்டுப் பரப்பு இசுகாண்டி நேவியா (Scandinavia) முந்நீரகத்தின் பெரும்பகுதியாகும். இது ஆர்க்டிக்குப் பகுதியின் வடபாகத்தில் உள்ளடங்கியதாகும். இது கிழக்கே யூரல் மலைத்தொடர் பகுதியையும், தெற்கே யூரேசியப் பாலைப் பகுதியையும் கொண்டது. இசுடெப்பீசுப் (Steppes) பகுதியை அடுத்து அதன் எல்லை தியான் சாலுக்கு வடக்காகவும். அல்டாய் மலைகள் கோபி பாலைவனம் ஆகியவற்றிற்குக் கிழக்காகவும் விரிகிறது. வடக்கில், சிங்கான் பகுதியும். கிழக்கிலும் தெற்கிலும் சக்காலன் குறில் தீவுகளும் அமைந்துள்ளன.

வடக்கு ஆசிய மக்களிடையே நாடோடி வாழ்க்கை பல்லாயிர ஆண்டுக் காலமாகப் பரவிக் காணப்பட்ட ஒரு பண்பாட்டுக் கூறாகும். ஆர்க்டிக்குக் கடலுக்கு அருகில் வாழும் மக்கள் துருவப் பகுதிக்குரிய பண்பாட்டுத் தகவமைப்புகளைக் கொண்டுள்ளனர். கடல் பாலூட்டி வகைகளை வேட்டையாடுதலையும் மீன்பிடித்தலையும் தங்கள் பிழைப்புத் தொழிலாகப் பேலியோ சைபீரியத் துணைப் பரப்பில் வாழும் மக்கள் கொண்டிருக்கின்றனர். சுக்சி, யாகாகிர், அய்னு ஏனைய வட சைபீரியர் பகுதிகளில் கலைமான்கள் வளர்ப்புக் காணப்படுகின்றது. இப்பகுதிக்குத் தென்பாகங்களில் மேய்ச்சல் நிலம் மிகுந்திருப்பதால் குதிரைகள். ஆடுகள் முதலான கால்நடைகள் வளர்த்தலை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர்.

இசுடெப்பீசுப் பகுதிகளில் இருவகைச் சிறப்புப் பண்பாடுகள் காணப்பட்டன. மேற்குப் பீடபூமிப்பகுதி மிக்க நீர்வளமும் தானிய விளைச்சலும் பால்வளமும் நிறைந்த பொருளாதாரப் பகுதியாகும். இவ்விடத்தில் நாகரிகம் புதிய தற்காலத்திலிருந்தே தொடர்ந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இப்பகுதியை அடுத்து வறண்ட மங்கோலியப் பீடபூமி உள்ளது. இங்கு ஆடுகள், ஒட்டகங்கள். குதிரைகள் முதலான கால்நடைகளை மேய்த்து வாழும் பண்பாடு காணப்படுகிறது. குதிரைகள் நிறைந்த இக்கிழக்குப் பகுதி, வடக்குச் சைபீரியாவின் இடைக் கற்காலக் காலத்தில் மேய்ச்சல் நாகரிகமாகக் காணப்பட்டது என்று கூறப்படுகிறது.

தெற்கு ஆசியப் பகுதி என்பது முன்னர்க் குறிப்பிட்ட பகுதிகள் நீங்கலாக, எஞ்சிய ஆசியக் கண்டப் பரப்பைக் குறிக்கும். இதில் சப்பான், பிலிப்பைன்சு, இந்தோனேசியா. இந்தியப் பெருங்கடலில் உள்ள மடகாசுகர் தீவுக் கூட்டம் ஆகியவை அடங்கும்.

புதிய கற்காலத்தில் தென்மேற்கு ஆசியாவில் நாடோடி மக்களின் நாகரிகம். 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகிறது. மொகஞ்சதாரோ, அரப்பா ஆகிய வளர்ச்சியடைந்த நாகரிகப் பகுதியிலிருந்து தட்பவெப்பநிலை மாற்றத்தாலும், நிலப்பரப்பை மிகுதியாகப் பயன்படுத்தும் தேவையாலும், வடபகுதிகளிலிருந்து பெருமளவு மக்கள் இடப்பெயர்ச்சி அடைந்ததாலும் இந்த நாகரிகப் பரப்பிலிருந்து மற்றப் பகுதிகளுக்கு மக்கள் குடியேறினர். இந்தியாவின் மேற்குப் பகுதியினருக்கும். மையக் கிழக்குப் பகுதியினருக்கும் இடையே 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல்வழி வணிகம் நடந்து வந்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் பண்பாட்டு வேறுபாடுகள் வடபகுதியிலிருந்தும் மேற்குப் பகுதியிலிருந்தும் அடிக்கடி நடந்த கைப்பற்றுதலின் சான்றுகளாக விளங்கு-