உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்

242

ஆசிய பசுபிக்குத் தேங்காய்க் குழு

கின்றன. இன்றும் ஏராளமான சிற்றூர்களில் பயிர்த் தொழில் முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்த்தல் துணைத் தொழிலாகவும் காணப்படுகின்றன.

கிழக்கிலும் தெற்கிலுமான விந்திய மலைத் தொடர்கள் வறண்ட வடபகுதியையும் வெப்ப மண்டலத் தென்னிந்தியாவையும் பிரிக்கின்றன. சீனாவில் உண்டான வேளாண்மை முறைகள் மற்றப் பகுதிகளிலும் பரவின. இந்தியா, இலங்கை, அந்தமான் தீவுகளில் இன்னும் மையக்கிழக்கு அல்லாத நாகரிகப் பண்புகளின் கூறுகள் காணப்படுகின்றன. கிழக்குப் பகுதியில் காணப்பட்ட வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் போன்ற பொருளாதார முறை படிப்படியாக மாறி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது.

உயர் பகுதித் தாவரங்கள், குறிப்பாக வடசீனப் பகுதியில் யாக் என்னும் மாட்டு வகை சார்ந்த மேய்ச்சல் நிலம் ஆகியவை இமாலய, திபேத்தியப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருந்தன.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மையச் சீனாவின் உட்பகுதியான வெய், மஞ்சள் ஆறுகளின் சந்திப்பு முதலான பகுதிகள், தென்மேற்கு ஆசிய அல்லது நடு அமெரிக்க நாடுகளின் வேளாண்மையைச் சார்ந்த நாகரிகத்தைப் பெற்றிருந்தன. இப்பண்பாடு ‘யாங் சான்’ பண்பாடு எனக் கூறப்பட்டது. இப்பகுதி மக்கள் தினைப் பயிரை விளைவித்து வாழ்ந்து வந்தனர். இத்தகைய பண்பாடு கிழக்குப் பகுதி, தெற்குப் பகுதி, சதுப்பு நிலப்பகுதி முதலான பகுதிகளுக்குப் பின்னாளில்தான் பரவியது. வடகிழக்குச் சீனாவின் கொன் டங்க்குப் பகுதியில் 5000 ஆண்டுகட்கு முன்பே இலுங்தான் நாகரிகம் பரவியது. இது யாங் சான் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தென்மேற்கு ஆசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தானியங்கள், கால்நடைகள் முதலானவற்றை ஏற்றுக் கொண்டதாகும். சோயாபீன்சு என்னும் பயிர்வகை இந்தப் பகுதியில்தான் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 3700 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் மிகத் தொன்மையான சாங் என்னும் அரசர்குடி தோன்றிய இடமாகவும் இது கருதப்படுகிறது.

துருவப் பகுதித் தொழில்நுட்ப முறைகளைக் கொண்ட சைபீரிய மக்கள் சுமார் 10,000 ஆண்டுகட்கு முன்பு கொரியாவிலும் சப்பானிலும் வந்து குடியேறினர் என்பது கூறப்படுகிறது. இவர்கள் கடல் வாழினங்கள் தோட்டப்பயிர், தானியவகைகள், மாமிசம் முதலானவற்றை உண்டனர். அரிசியும் கிழங்கு வகைகளும் இத்தகைய குளிர்ப் பகுதிக்கு ஏற்றனவாக உணரப்பட்டு மலாயாத் தீவுகளில் ஏறக்குறைய 4000 ஆண்டுகட்கு முன்பு பரவத் தொடங்கின. ஆனால், இங்கு மேய்ச்சல் நாகரிகம் காணப்பெறவில்லை. ஏறக்குறைய 3000 ஆண்டுகட்டு முன்பு கொரியா முந்நீரகத்திலிருந்து இடப் பெயர்ச்சியடைந்த மக்கள் பயிர்த் தொழிலின் உயர்ந்த தொழில்நுட்ப முறைகளைத் தென்பகுதித் தீவுகளில் பரப்பினர். பின்னர், இந்தோனேசியாவில் தொன்மையான மக்களையும் அய்னு மக்களையும் வென்று வடபகுதிக்குச் சென்றனர்.

தென் சீனாவிலும், மலேசியா முந்நீரகத்திலும் சுமார் 8000 ஆண்டுகட்கு முன்பு தொல்குடியினர் வந்தேறினர். இவர்கள், வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, எலுமிச்சம்பழம், தேங்காய், நெல் போன்ற வடசீனாப் பயிர்களைச் சாகுபடி செய்யத் தொடங்கினர். வெப்பப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்ற பயிர் வகைகளைத் தோட்டங்களில் விளைவிக்கும் முறைகளை இப்பகுதியில் பரப்பினர். தென்சீனாவின் பெரிய சமூகங்கள் வடபகுதியிலிருந்த அரசாங்கங்களுடன் இணைக்கப்பட்டன.

இந்தக் கடற்கரை முந்நீரகம் தீவுகள் ஆகியவற்றில் வாழ்ந்த மக்கள் கடல் வாழ்க்கைக்குத் தேவையான படகு கட்டுதல் முறைகளைப் பெரிதும் மாற்றியமைத்தனர். இவர்களின் தெற்கு ஆசியத் தோட்ட வாழ்க்கை இச்சூழ்நிலையில் மிகவும் இயல்பானதாக அமைந்தது. அதனால், அடுத்த 6000 ஆண்டுகளில் வெப்பப் பகுதி, மித வெப்பப் பகுதிகளான மடகாசுகர், ஆப்பிரிக்கக் கடற்கரை, கிழக்குத் தீவுகள், சிலித்தீவுக் கடற்கரை ஆகியவற்றில் வசித்தனர், இதன் பாதிப்பு ஆப்பிரிக்காவின் உட்பகுதியிலும் உண்டாகியது. அலைந்து திரியும் கோங்கோ சமுதாயத்தினர் தோட்டப் பயிர்த் தொழிலுக்கான சூழலை மழை ஏற்படுத்தித் தரும் வரை வேட்டை உணவு சேகரித்தலையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.

ஆ.செ.

துணை நூல்கள்:
Linton, Ralph The Tree of Culture, Knopf, New York, 1955.
Murdock. G, P., Outlines of World Cultures. Human Relation Area Files, New Haven, 1972.

ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு: தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசிய நாடுகள், தேங்காய், மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களைப் பெருமளவில் வளர்ச்சியுறச் செய்யும் நோக்குடன் 1969-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30-ஆம் நாள் ஆசியத் தேங்காய்க் குழு என்ற அமைப்பினை உருவாக்கின. இதற்குப் பின் 1975-இல் ஆசிய பசுபிக்கு நாடுகளுக்-