ஆசியப் பசுபிக்குப் பொருளாதார......
243
ஆசியப் பசுபிக்குப் பொருளாதார......
கான ஐக்கிய நாட்டுப் பொருளாதார, சமுதாய நிறுவனம் (ESCAP), தூரக் கிழக்குப் பசுபிக்கு நாடுகளின் ஒத்துழைப்பின் தேவையை வலியுறுத்தியது. ஆகவே, ஆசியத் தேங்காய்க் குழு, பசுபிக்கு நாடுகளையும் உறுப்பினர்களாக்கி, ஆசியப் பசுபிக்குத் தேங்காய்க். குழுவாக (Asia & Pacific Cocanut Community) உருப்பெற்றது.
குழுவின் நோக்கங்கள்:
- 1. தேங்காய் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் விரைவான முன்னேற்றத்தை அடைதல்.
- 2. தேங்காய் சார்ந்த தொழில் முறைகளில் புதிய உத்தியைக் கையாண்டு அவற்றைப் புதுமைப்படுத்துதல்.
- 3. தேங்காய் விற்பனையை மிகுதியாக்கல்.
- 4. கூட்டுறவு முறையில் இத்தொழிலுக்கான ஆராய்ச்சி வசதிகளை உருவாக்கிப் புரட்சிகரமான முறையில் பலன்களைப் பெறுதல் ஆகியன.
இக்குழுவின் தலைமைச் செயலகம் இந்தோனேசியத் தலைநகரான சகர்த்தா (Jakarta) வில் செயற்படுகிறது.
குழுவின் இப்போதைய உறுப்பு நாடுகள்: இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாபுவா (Papua), நியூ கினியா (New Guinea), பிலிப்பைன்சு, சாலோமன் தீவுகள், சிரீலங்கா (Sri Lanka), தாய்லாந்து, மேற்குச் சமோவா ஆகியன.
ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்: இந்நிறுவனம் ஆசியப் பசுபிக்கு மண்டல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்துச் சமுதாய நலனைப் பேணவும், அதற்கான பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும் 1947-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 28-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இது மண்டல நாடுகளுக்கிடையே புதிய தொழில்நுட்ப அறிவியல் கலைகளைப் புகுத்துதலும், பொருளாதார, சமூக முன்னேற்றத் திட்டங்களுக்கான அறிவுரைகளை வழங்குதலும் ஆகிய நோக்கங்களைக் கொண்டது. தலைமைச் செயலகம் பாங்காக்கு (Bangkok) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இந்தியா உட்பட 35 ஆசிய, பசுபிக்கு மண்டல, பொதுவுடைமை. முதலாளித்துவ, சமத்துவ நாடுகள் உறுப்பு நிலை பெற்றுள்ளன. புருணை (Brunei), குக்குத் தீவுகள் (Cook Islands), குவாம் (Guam), ஆங்காங்கு (Hong Kong), கிரிபடி (Kiribati), நியு (New). பசுபிக்குத் தீவுகளின் பொறுப்பாட்சிப் பகுதி (The Trust Territory of the Pacific Islands), துவாலு (Tuvalu), வானாது (Vanuatu) ஆகிய நாடுகள் துணை உறுப்பு நாடுகளாகவும் பங்கு பெற்றுள்ளன.
இந்நிறுவனத்தின் செயலகத்துடன் பல திட்ட வாரியங்களும், செயல்முறைக் கூடங்களும் (Operational Units) இணைந்தும் தனித்தனியாகவும் திட்டங்களின் தேவைக்கேற்றவாறு செயலாற்றுகின்றன. அவற்றுள் உணவு, வேளாண்மை, பன்னாட்டு வாணிகம், தொழில், மக்கள் குடியமைப்பு மற்றும் நுட்ப அறிவு (Human Settlement & Technology), முன்னேற்றத் திட்டமிடல் (Development Planning), தேசியப் போக்குவரத்துக் கழகம் (Trans National Corporation), போக்குவரத்துத் தொடர்புச் சுற்றுலா, புள்ளி விவரம் (Statistics), மக்கள்தொகை, சமூக முன்னேற்றம், உள்நாட்டு நீர்வழி, துறைமுகம் ஆகிய திட்ட வாரியங்களும் குழுமங்களும் சிறப்பானவை.
இந்நிறுவனத்தின் 36-ஆம் கூட்டத்தொடரில், 10 ஆண்டுக்கான திட்டங்கள் 1980 மார்ச்சில் விரிவான கலந்துரையாடலுக்குப் பின் வரையறை செய்யப்பட்டன. பன்னாட்டு முன்னேற்றக் குறிக்கோளுக்காக மண்டல நாடுகளின் பங்கு ஆராயப்பட்டது. திட்ட ஒதுக்கீடுகளுக்காக உடனடியாக 18 மிலியன் தாலர் வழங்க உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன. ஆசிய பசுபிக்கு முன்னேற்ற மையத்துடன் (Asian Pacific Development Centre) இணைந்து செயலாற்ற, ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மண்டல நாடுகளுக்கிடையே மறு காப்பீட்டுக் கழகம் (Re-Insurance Corporation) ஒன்று அமைக்கப்பட்டது. குறுகிய கால எரிபொருள் ஆற்றலின் தேவைக் கொள்கை பற்றிய ஆய்வு இதன் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆசிய பசுபிக்குத் தொலைத் தகவல் தொடர்பு நிலையமும் (Asia- Pacific Tele-Communication) நிறுவப்பட்டது. இந்நிறுவனம், ஐக்கிய நாட்டு முன்னேற்றத் திட்டங்களுடன் இணைந்து 22.5 மிலியன் தாலர் மதிப்புள்ள நுட்ப அறிவியல் ஒத்துழைப்புத் திட்டங்களை 1982 முதல் 1986-ஆம் ஆண்டு வரை செயற்படுத்தவிருக்கும் பணிக்கென மேற்கொண்டுள்ளது. அவற்றைச் செயற்படுத்துவதற்காக 42 பணி மனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மண்டல நுட்ப வல்லுநர்கள் எனப் பதினொருவர் அறிவுரையாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிறுவனத்தின் உணவு, வேளாண்மை பற்றிய வாரியம், உணவைப் பாதுகாக்கும் நுட்ப முறைகளிலும், வேளாண்மை உற்பத்தியைப் பன் மடங்காகப் பெருக்குவதற்கான திட்டங்களிலும் முனைந்துள்ளது. இந்தோனேசியாவில் போகோர் (Bogore) என்னும் இடத்தில் தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்கு, தண்டு வகைகளின் நுட்ப அறிவை வளர்த்து,
வா. க. 2-16 அ