உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிய முன்னேற்ற வங்கி

245

ஆசிய முன்னேற்ற வங்கி

ஆசிய முன்னேற்ற வங்கி: ஐக்கிய நாட்டுப் பொருளாதாரச் சமுதாயத் திட்டக் குழுவின் ஆதரவில் 1966-ஆம் ஆண்டு திசம்பர் 19-இல் ஆசிய முன்னேற்ற வங்கி (Asian Development Bank-ADB) உருவாகிச் செயற்படத் தொடங்கியது. இவ்வங்கி 31 உறுப்பு நாடுகளுடன் தொடங்கி இப்போது 29 மண்டல நாடுகளுடன் 43 உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது.

பல்வகைச் சிறப்பு நிதி, வேளாண்மைச் சிறப்பு நிதி போன்றவற்றின் பொறுப்புகளும் 1974 சூன் திங்களிலிருந்து இல்வங்கியின்கீழ்க் கொண்டுவரப்பட்டன. இவற்றுடன் மென்மைக் கடன்களையும் (Soft Loans) இவ்வங்கி வழங்குகிறது. வங்கியின் நிதி, தொழில் வளர்ச்சியடைந்த உறுப்பு நாடுகளின் உதவித்தொகையைக் கொண்டே அமைகிறது. உறுப்பு நாடுகளின் உறுப்பினர் கட்டணம், உலக மூலதன அங்காடியில் இருந்து கிடைக்கும் பெரும் கடன்கள் ஆகியவை இவ்வங்கியின் பொதுவான மூலதன வளத்தைப் பெருக்குகின்றன.

வங்கி ஒப்புதல் பெற்ற மொத்தக் கடன் மதிப்பு (1980-ஆம் ஆண்டின்படி) 15,000 மிலியன் உரூபாய் (1044 பிலியன் தாலர்) ஆகும். அத்தொகையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடனின் மதிப்பு 6369 மிலியன் உரூபாய் (579 மிலியன் தாலர்) ஆகும். அத்தொகையானது இதற்கு முந்தைய கடன் மதிப்பைக் காட்டிலும் 15 விழுக்காடு மிகுதியாகும். மொத்தக் கடன் அளிப்பில் மூன்றில் ஒரு பங்கு வளர்ந்து வரும் உறுப்பு நாடுகளுக்குச் சலுகையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. கடன் அளிப்பில் உச்ச நிலையைத் தாண்டி விட்டது மட்டுமன்றிப் பல புதிய கடன் வழி முறைகளிலும் முன்னேற்ற நிதி ஈடுபாடுகளிலும் முனைந்து செயற்படுகிறது. தனிப்பட்ட திட்டங்களுக்கு என ஒதுக்கப்படாமல் பொது முன்னேற்றத்கிற்காக ஒதுக்கப்பட்ட துறைக் கடன்கள் இப்போது இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அடிப்படைப் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மூல வளத்தைப் பயன்படுத்துதற்காகவும் வழங்கப்படுகின்றன. இவ்வங்கியின் சார்பில் மண்டல அளவிலான எரிபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, உறுப்பு நாடுகளின் எரிபொருள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நுண்ணியல் (Technical) மற்றும் கடன் வசதிகளுக்கான உதவிப் பணியையும் இவ்வங்கி ஏற்று நிறைவேற்றுகிறது. எரிபொருள் நெருக்கடியின் காரணத்தால் வணிக வங்கி மூலம் ‘துணை நிதியம்’ என்ற கோட்பாட்டின் கீழ், 179.3 மிலியன் உரூபாய் (16.3 மிலியன் தாலர்) மதிப்பிற்கு மின் உற்பத்தித் திட்டங்களுக்காகத் தாய்லாந்து, கொரியாக் குடியரசு போன்ற நாடுகளுக்கு நிதி வழங்கியுள்ளது.

இவ்வங்கி 1980-ஆம் ஆண்டில் மட்டும் 17 உறுப்பு நாடுகளுக்கு 2 துறைக் கடன்களும், 2 திட்டக் கடன்களும், 50 திட்டங்களுக்கான ஒரு பல்வகைக் கடனும் உட்பட மொத்தம் 58 கடன்கள் வழங்க அனுமதி அளித்தது. மூன்றில் ஒரு பங்குக் கடன் வங்கியின் ஏழ்மை நாடுகளுக்கும், வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கும் என ஒதுக்கப்படுகிறது.

இந்நிறுவனம் மூலதன வளத்திலிருந்து இந்நாள் வரை அளிக்கப்பட்ட கடனின் மதிப்பு 10,494 மிலியன் உரூபாய் (959 மிலியன் தாலர்) ஆகும். மேலும் 56 நாடுகளுக்குத் திட்டங்கள் மற்றும் செயல்முறைகளுக்கெனக் கூட்டுறவு வகை உதவி 156.2 மிலியன் உரூபாய் (14.2 மிலியன் தாலர்). தொழில் நுட்ப அறிவைப் பெறுவதற்கான வசதியும் செய்து தரப்படுகிறது.

துறைக் கடன்கள்: வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில் துறை, எரிபொருள் வளர்ச்சித் துறைகளின் முன்னேற்றம் ஆகிய பொறுப்புகளை இவ்வங்கி மேற்கொண்டுள்ளதால், இத்துறைகளுக்கு மிகுதியாகக் கடன்களை வழங்குகிறது. இவ்வங்கி 1980-ஆம் ஆண்டில் 33 விழுக்காடு வேளாண்மைத் துறைக்கும். 27 விழுக்காடு மூல எரிபொருள் துறைக்கும், 15.6 விழுக்காடு போக்குவரத்துத் துறைக்கும் கடனாக வழங்கியுள்ளது. கல்வி, நகராண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு முதன்மை அளித்துச் ‘சிறப்பு நிதி’ என்ற வகையில் கடன்களும் வழங்குகிறது.

ஆசிய முன்னேற்ற வங்கி அளிக்கும் கடன் வசதிகள் நல்ல பயன் விளைவித்தல் வேண்டும் என்ற நோக்கத்துடன் இதன் ஒழுங்குமுறைகள், மற்றைய நிதி நிறுவனங்களின் மூலமாகவும் கூட்டாகவும் அமைகின்றன. இதனால், மேற்கொண்டு கடன் இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. மற்றைய நிதி நிறுவனங்கள் 1980-ஆம் ஆண்டு 4,301 மிலியன் உரூபாய் (391 மிலியன் தாலர்) கடனாக வழங்கிய போது இவ்வங்கி மட்டும் தனியே. 6,600 மிலியன் உரூபாயை (600 மிலியன் தாலர்) 22 நாடுகளுக்கு வழங்கியுள்ளது. காலப்போக்கில் நாடுகள் மற்ற நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நேரடித் தொடர்பின் மூலம் பெறும் உதவி முறையினால் இவ்வங்கியின் நிதி உதவி குறைந்து வருகிறது.

ஆசியப் பொருளாதார வங்கியின் கடன் விகித முறையைச் சீர்தூக்கும் திட்டத்தின் கீழ் 1981 இல் கடன் வீதம் 9.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. சிறப்பு நிதிக் கடன்களுக்கு வட்டியின்றி ஒரு விழுக்-