ஆசியா
247
ஆசியா
களை அமைக்கவும், முதல் சட்ட அமைப்புகளை உருவாக்கவும் செய்தனர். வேளாண்மைத் தொழிலும் வாணிகமும் முதன்முதல் செய்யத் தொடங்கினர். ஆசியர்களே முதன்முதலாக எழுதும் முறையைக் கண்டவர்கள்; தொடக்கக்கால இலக்கியங்களை உருவாக்கியவர்கள். உலகில் காணப்படும் பெரும் சமயங்களை தோற்றுவித்தவர்களும் ஆசிரியர்களே. கௌதம புத்தர், கன்பூசியசு, ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்றவர்கள் புதிய சமயங்களை உருவாக்கியவர்கள். காகிதம், வெடிமருந்து, காந்தம் வைத்த திசையறி கருவி, அசையும் எழுத்துகள் போன்றவற்றைக் கண்டுபிடித்தவர்களும் ஆசியர்களே.
ஆசியப் பொருளாதாரம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது. மேலைநாடுகள் விரைந்து முன்னேறத் தொடங்கின. ஐரோப்பிய நாடுகள் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஆசியாவின் பெரும் பகுதிகளை வெற்றி கொண்டன. குடியேற்றப் பகுதிகள் ஆசியாவில் அமைக்கப்பெற்றன. ஆனால், 1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர்ப் பெரும்பாலான ஆசிய நாடுகள் விடுதலை பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆசியாவில் பொதுவுடைமை நாடுகளுக்கும் பொதுவுடைமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளுக்குமிடையே சச்சரவுகள் மூண்டன.
ஆசியாவில் ஏறத்தாழ 266,90,00,000 மக்கள் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் ஆசியாவின் எண்ணிக்கை மட்டும் 59 விழுக்காடாகும். சீனாவில்தான் ஆசியாக் கண்டத்திலேயே ஏன் உலகிலேயே-மிகுதியான மக்கள் வாழ்கிறார்கள். இந்தியா இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. சீனாவிலும் இந்தியாவிலும் மட்டும் உலக மக்கள் தொகையில் 36 விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர்.
மங்கோலியப் பெண்
ஆசியாவின் பல பகுதிகள் குளிர்மிகுந்தும், வெயில் மிகுந்தும் வேளாண்மை செய்ய வசதியான உழுநிலம் குறைந்தும் மலைப்பாங்கான பகுதிகள் மிக்கும் இருப்பதால் அங்கு மக்கள் வாழ இயலாது. எனவே, ஆசிய மக்களில் பெரும்பாலோர் வசதிகள் மிகுந்த ஆற்று வெளியிலோ பள்ளத்தாக்கிலோ மிகுதியாக வாழ்கின்றனர். அங்கு அவர்கள் வேளாண்மை செய்தோ மீன்பிடித்தோ வாழ இயலும்,
கிழக்குச் சீனா, இந்தியா, சப்பான் மற்றும் இந்தோனேசியாவின் சாவாத் தீவு போன்ற பகுதிகள் மக்கள் நெருக்கம் மிகுந்தவை. இந்நாடுகளிலுள்ள பெரிய நகரங்களில் பல இலட்ச மக்கள் வாழ்கின்றனர்.
இனப்பாகுபாடுகள்: ஆசியாவின் மக்கள் இனங்களை மானிடவியல் வல்லுநர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். அவை 1 வெள்ளை நிறத்தவர்களான காகசாயிடுகள், 2 மஞ்சள் நிறத்தவர்களான மங்கோலாயிடுகள், 3 கறுப்பு நிறத்தவர்களான நீக்கிராயிடுகள் என்பன. ஆனால், இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த மானிடவியல் வல்லுநர்கள்
பீகார் (இந்தியா) பழங்குடி