ஆசியா
249
ஆசியா
பாவையும் இணைத்து யூரேசியா என்று கூறுவர். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்றையும் இணைத்து யூராப்ரேசியா என்று கூறுவோருமுண்டு.
மிக உயர்ந்த மலைத்தொடர்கள், பரந்து விரிந்த பாலை நிலங்கள், சமவெளிகள், தலைசிறந்த ஆறுகள் பலவகைப்பட்ட மண்வகைகள் போன்றவற்றால் ஆசியா சிறந்து விளங்குகிறது.
நிலப்பகுதிகள்: ஆசியாவை ஆறு பெருநிலப் பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை 1 தென்மேற்கு ஆசியா, 2 தெற்காசியா, 3 தென்கிழக்காசியா, 4 கிழக்காசியா, 5 வட ஆசியா, (6) மத்திய ஆசியா என்பனவாம்.
மலைத்தொடர்கள்: மற்றெல்லாக் கண்டங்களையும் விட ஆசியாக் கண்டத்தில்தான் மலைத் தொடர்கள் மிகுதி. ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள மலைத் தொடர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ளன. அவை மக்களையும் பிரித்துவைத்து, ஒருவரோடொருவர் பேசிப் பழகுவதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் தடையாகவுள்ளன. ஆனால், அவை பல ஆசிய ஆறுகளின் தோற்றத்திற்கான மலையூற்றுகளையும் கொண்டுள்ளன. பல இலட்சக்கணக்கான உழவர்கள் வேளாண்மை செய்ய இவ்வாறுகளையே நம்பி உள்ளனர்.
யூரல் மலையைத் தவிர்த்து ஏனைய ஆசியாவின் பெரும் மலைத் தொடர்கள் பாமீர் முடிச்சு என்னும் பகுதியிலிருந்து கிளைத்துச் செல்கின்றன. ஆப்கானிசுத்தான், சீனா, உருசியா, பாகிசுத்தான் ஆகிய நாடுகள் சந்திக்குமிடத்தில் பாமீர் முடிச்சு என்னும் இப்பகுதி இருக்கிறது. இதனை உலகின் கூரை என்றும் கூறுவர். பாமீர் முடிச்சில் உள்ள மலையுச்சிகளில் சில கடல் மட்டத்தைவிட 7650 மீ. உயரமானவை.
தியன் சான் (Tien Shan), ஆல்டாய் மலைத் தொடர்கள். பாமீர் முடிச்சிலிருந்து வடகிழக்காக மங்கோலியா வரை நீண்டு செல்கின்றன. இந்த உயர்ந்த மலைத் தொடர்களுக்கப்பால் இசுமனோவாய், யாப்ளோவைாய் போன்ற உயரம் குறைந்த சிறு மலைத்தொடர்கள். சைபீரியாவின் குறுக்கே ஓகாட்சுக் கடல்வரை நீண்டுள்ளன.
பாமீர் முடிச்சுக்குக் கிழக்கில் காரகோரம் என்னும் மலைத் தொடர் திபேத்து வரை நீண்டு செல்லுகிறது. திபேத்தில் காரகோரம், குன்லுன் என்னும் பெயரைப் பெற்றுப் பின்னர் நான்சான் மலைத் தொடராகிறது. நீண்டு செல்லும் இம்மலைத் தொடர்கள், மத்திய சீனாவில் உள்ள சின்லிங்சான் (Tsinlingshan) மலைத் தொடருடன் முடிவடைகின்றன.
உலகப்புகழ்பெற்ற இமயமலை, பாமீர் முடிச்சின் தென்கிழக்கில் உயர்ந்து திபேத்தின் தெற்கு எல்லை வரை நீள்கிறது. தேவர்களின் ஆன்மா என்று பேசப்படும் இமயமலையே உலகில் மிக உயர்ந்த மலையாகும். உலகிலேயே உயர்ந்த மலையுச்சிகள் பலவற்றை இங்குக் காணலாம். நேபாளம் திபேத்து ஆகியவற்றின் எல்லையில் உள்ள இமயமலையில்தான் எவரசுட்டு மலையுச்சி (Mount Everest) 8848 மீ. உயரமுள்ளதாய் வானளாவி நிற்கிறது.
பாமீர் முடிச்சிலிருந்து மேற்கில் ஆப்கானித்தானத்தின் குறுக்காக நீண்டிருப்பது இந்துகுசு மலைத்தொடராகும். அதற்கும் மேற்கில், எல்புருசு. சார்கோசு முதலிய மலைத்தொடர்கள் ஈரான் மேட்டு நிலத்தை உள்ளிட்டுச் செல்கின்றன. பாண்டிக்கு, தாரசு (Taurus) என்னும் மலைத்தொடர்கள், துருக்கி நாட்டிலுள்ள அனடோலியா மேட்டுநிலத்தைச் சுற்றியுள்ளன. இதுவே ஆசியாவின் மேற்குக் கோடியாகும்.
ஆறுகள்: ஆசியாக் கண்டத்தின் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் கழிமுகங்களிலும் பல இலட்சக்கணக்கான ஆசியர்கள் கூடி வாழ்கிறார்கள். மக்களின் வாழ்வில் இவ்வாறுகள் சீரிய பங்கு பெறுகின்றன எனல் மிகையாகாது. வண்டல் மண்ணைக்கொண்டு வந்து பல ஆறுகள் உழவர்களுக்கு மண் வளத்தைக் கொடுத்து உறுதுணை செய்கின்றன. அவை நீர்ப்பாசனத்திற்குத் தேவையான நீரையும் கொண்டு வருகின்றன. வாணிகத்திற்கும் சுற்றுலாப் பயணத்திற்கும் அவை போக்குவரத்துத் தடங்களாகவும் பயன்படுகின்றன.
தென்மேற்கு ஆசியாவில் பாயும் பேராறுகள் இப்பகுதியின் வடபகுதி வழியாகப் பாய்கின்றன. தைகிரிசு, யூபரடீசு ஆறுகள், துருக்கி நாட்டில் தோன்றி, ஈராக்கில் இணைந்து சாட்டல் ஆரபு என்னும் பெயருடன் பாரசீக வளைகுடாவில் கலக்கின்றன. மேற்கில் சோர்டான் ஆறு, இலெபனான் நாட்டின் வழியாகத் தெற்கில் பாய்ந்து இறந்த கடலில் (Dead Sea) வீழ்கிறது.
தெற்காசியாவில் பல ஆறுகள் வடக்குமலைத் தொடர்களில் தோன்றித் தெற்காகப் பாய்கின்றன. சிந்து, பிரமபுத்திரா, கங்கை ஆகியவை சிறப்பான ஆறுகளாம். சிந்து ஆறு, இமயமலையில் தோன்றி பாகிசுத்தானின் வழியாகப் பாய்ந்து அரபிக் கடலில் வீழ்கிறது. பிரமபுத்திராவும் கங்கையும் வட இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் பாய்ந்து வங்காள விரிகுடாவில் விழுகின்றன.
தென்கிழக்காசியாவில் பாயும் நான்கு சிறப்பான ஆறுகள், திபேத்திலோ அதன் அண்மையிலோ
வா.க. 2-32