உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் மையங்கள்

282

ஆசிரியரும் சமுதாயமும்

::5. ஆசிரியரின் மேம்பட்ட கற்பித்தல் (Effective Teaching) மாணவர் நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது.

எஸ்.மோ.

துணை நூல்கள்:
Amos R., Teacher's Attribution of Responsibility, Unpublished Doctoral Disertation, Indiana University, 1973.
Drophy J. E., and Thomas L. Good, Teacher Students Relationships, Holt, Rinehart & Winston, New York, 1974.

ஆசிரியர் மையங்கள்: முதலில் ஆசிரியர் மையங்கள் இங்கிலாந்து நாட்டில் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர்த் தோன்றியது. அரசாங்கக் கையேடு 1976-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொன்று இங்கிலாந்து நாட்டில் மட்டும் 560 ஆசிரியர் மையங்கள் உள்ளனவென்று கூறுகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இத்தகைய மையங்கள் தோன்றலாயின. தமிழ் நாட்டில் 1983 ஆம் ஆண்டிலிருந்து ஏழு ஆசிரியர் மையங்கள் செயற்படுகின்றன.

இவை ஆசிரியர்களுக்காக ஆசிரியர்களாலேயே நடத்தப்படும் அமைப்புகளாம். இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தாலும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளவும் தங்கள் தொழில் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தேவையான வாய்ப்புகளை வழங்குவதே இம்மையங்களின் இன்றியமையாத நோக்கம், கல்விக்குத் தேவையான கையேடுகள், துணைக்கருவிகள் போன்றவற்றை ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியால் உருவாக்கிக் கொள்ளத் தேவையான வசதிகள் இம்மையங்களில் உள்ளன. இதைத் தவிர ஆசிரியர்களது தொடர் கல்விக்குத் தேவையான நூல்கள். படங்கள் போன்றவை இங்கு இடம் பெறுகின்றன. அவர்களது தேவைக்கு ஏற்பப் பணியிடைப் பயிற்சிகளையும் இம்மையங்கள் வழங்குகின்றன. ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியாலேயே தங்கள் தொழில் தொடர்பான தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இம்மையங்களில் உள்ளன பிற இடங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் சில நாட்கள் தங்குவதற்கும் இம்மையங்கள் இடமளிக்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு அமைக்கப்படும் கண்காட்சிகளுக்கு இம்மையங்கள் ஊக்கமளிக்கின்றன.

குறிப்பிட்ட ஓர் இடத்திலுள்ள ஆசிரியர்கள் அதிக இடர்ப்பாடின்றி வந்து பயன்படுத்தக்கூடிய இடங்களில் இம்மையங்களை அமைத்திருக்கிறார்கள். இதன் வெவ்வேறு பணிகளைக் கவனிக்கப் பணியாளர்கள் இருந்தாலும் இதனை மேற்பார்வை இடும் பொறுப்பு ஆசிரியர் குழுக்களிடம் இருக்கிறது. இம்மையங்களை நடத்துவதற்குத் தேவையான பண உதவியைப் பெரும்பாலும் அரசாங்கமே தந்து உதவுகிறது.

ஜி.எம்.ஜா.

ஆசிரியரும் சமுதாயமும்: ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், அமைதி, ஆக்கப் பண்பு ஆகியன அச்சமுதாயத்தில் பரவியுள்ள கல்வி முறையினைச் சார்ந்து அமைவனவாம். இவ்வுண்மையினைக், கோத்தாரி தலைமையில் 1964-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வி ஆய்வுக் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், “இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது”, என்றும் அது குறிப்பிட்டுள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலையும் வேகத்தையும் வழிமுறையையும் தோற்றுவிப்பவர்கள் ஆசிரியராவார்கள். இவ்வாசிரியர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை நெறிப்படுத்தி, அவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிக் கொணர்ந்து முழுமையாக்கத் தக்கவர்கள்; மேலும் சமூகப் பண்புகள் சமுதாய மதிப்புகள் ஆகியன தோன்றி வளர வித்திட்டு, அவர்களின் நல்வாழ்வினையும் சமுதாயத்தின் நலத்தினையும் பேணுபவர்கள். ஆசிரியர்கள் சமுதாயச் சிற்பிகளாகச் செயலாற்றுகிறார்கள். சீராக இயங்கும் சமுதாயத்தில்தான் நல்லாசிரியர்கள் உருவாகிறார்கள். பள்ளிகள் சமுதாயத்திற்கப்பாற்பட்ட - தனித்தியங்கும் நிலையங்கள் அல்ல; அவை தேவைகளை நிறைவு செய்வதற்கெனச் சமுதாயத்தினால் உருவாக்கப்பட்டு, அதன் தொடர்ந்த ஆதரவுடன் செயற்படும் சமூக நிலையங்கள் (Social Institution) ஆகும். ஆசிரியர்கள் சமுதாயத்தின் மதிப்பு மிக்க பணிப்பிரிவினருள் ஒரு வகையினர். எனவே, ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்குமிடையே காணப்படும் தொடர்பு நெருக்கமானதாகவும் இருபுறச் சார்புடையதாகவும் அமைகிறது.

ஆசிரியர்கள் தங்கள் பணியினை நேரிய மனப்பான்மையுடன் அணுகினால், அவர்களால் தம் மாணாக்கர்களின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சியினையும் புரட்சியினையும் தோற்றுவிக்க முடியும். இம்மனம் புரட்சி சமுதாய முன்னேற்றத்திற்கும் நாட்டு வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும். தங்களது செல்வாக்கினைப் பயன்படுத்திச், சுதந்திரப் பண்பும் சமூக நுண்ணுணர்ச்சியும் உடைய ஆளுமையினை (Personality) ஒவ்வொரு மாணாக்கனும் பெற ஆசிரியர்கள் பாடுபடுவார்களாயின், தம்