உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசுக்வித்து

286

ஆசுகார் ஒயில்டு

மொழியிலோ பாலி அல்லது பிராகிருத மொழியிலோ இன்று இல்லை. தமிழ்க் காப்பியங்களான மணிமேகலையிலும் நீலகேசியிலும் பிற்காலத்தே தோன்றிய சமய உரை நூல்களிலுந்தான் இதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன.

ஆசீவக வாதிகள், நில அணு, நீர் அணு, வளி அணு, தீ அணு, உயிர் அணு ஆகிய ஐம்பொறிகளைப் படைப்பின் மூலப் பொருள்களாக எண்ணுகின்றனர். இவ்வணுக்களின் சேர்க்கை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே ஏற்படும். அச்சேர்க்கையின் விளைவாக பிறப்பு இறப்பு, இன்ப துன்பம் ஆகியவை உண்டாகின்றன. பிறப்பு ஆறு வகையானது என்பது ஆசீவகவாதிகளின் துணிபு. அவை கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை எனப்படுவன அவற்றில் தூய வெண்மைப் பிறப்புத்தான் உயர்நிலைப் பிறப்பு. அதை அடைந்தவர் தாம் வீட்டுலகம் எய்துவர்.

உயிர்கள, எண்பத்துநான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பில் பட்டு உழலும். அதன் பின்னரே அவை வீட்டுலகை அடையும். இந்த நியதி எக்காலத்தும் மாறாது. இந்த உலக வாழ்வில் நல்லறிவு பெற்று, கூடவே நற்செயல்களை ஒருவன் செய்வானேயானால் படிப்படியாக உயர்ந்து, பின் தனக்குரிய காலம் வந்ததும் வீடு பேறு அடைவான்.

உயிர்கள் நியதியினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. அவை எக்காலத்தும் தம் விருப்பப்படி செயற்பட முடியாது. எனவே, அவை தாம் செய்யும் நன்மை தீமைகளுக்குப் பொறுப்பல்ல. ஆசீவக வாதம், ஆன்மா உண்டென்றும் அது உணர்வுள்ளதென்றும் உருப்பெற்றதென்றும் கருதுகிறது.

ஜி.வி.ச.

ஆசுக்வித்து (கி.பி. 1852-1928) ஆங்கில அரசியல் வல்லுநர்: மார்லி என்னும் ஊரில் கி.பி. 1852 ஆம் ஆண்டில் பிறந்தவர். இங்கிலாந்தின் தலைமை அமைச்சராக 1908 முதல் 1916 வரை இருந்தவர். ஆசுக்வித்து (Asquith) 1908 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பெற்ற முதியோர் ஓய்வூதியச் சட்டத்தைக் கொணர்ந்தமையால், இவருடைய அமைச்சரவை சீரிய இடத்தைப் பெற்றது. தேசிய ஆயுட் காப்பீட்டுச் சட்டம் (1911). பாராளுமன்றச் சட்டம் (911) ஆகியவை பிற சிறப்பான சட்டங்களாம். பிரபுக்கள் சபையின் அதிகாரத்தைக் கி.பி. 1911 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பெற்ற பாராளுமன்றச் சட்டம் கட்டுப்படுத்தியது. ஆசுக்லித்து 1914 ஆம் ஆண்டில் ஐரிசுத் தன்னாட்சி முன்வரைவைக் கொணர்ந்த போதிலும், அவ்வாண்டில் மூண்ட முதல் உலகப்போரின் விளைவாக, அந்த முன்வரைவு ஒத்திவைக்கப் பெற்றது. ஆசுக்வித்துக்குப் பின்னர் தேவிடு இலாயிடு சார்சு (David Lloyd George) என்பார் 1916 ஆம் ஆண்டில் தலைமை அமைச்சரானார். ஆசுக்வித்துக்கும் இலாயிடு சார்சுக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடுகளினால், முதல் உலகப் போருக்குப் பின்னர் இலிபரல் கட்சி (Liberal Party) நலியத் தொடங்கிற்று. இவர் 1925-ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பிரபுவாக்கப்பட்டார்.

ஆசுகவிராச சிங்கம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர் இயற்பெயர் கவிராச பிள்ளை என்பது. இவரைச் சேறைக் கவிராச பிள்ளை என்றும் கூறுவர். சேறை என்பது இவர் பிறந்தவூராகலாம். கருணீகர் மரபில் வந்த இவர் வண்ணக் கவி வல்லவராதலின் “வண்ணர் களஞ்சியம்” என்றும் சிறப்பிக்கப்பட்டார். “திருக்காளத்தி நாதர் உலா”, “திருவண்ணாமலை யார் வண்ணம்”

“திருவாட் போக்கி நாதர் உலா” என்னும் நூல்களும் இவரால் இயற்றப்பட்டுள்ளன என்பதை, அந்தகக் கவி வீரராகவ முதலியார் தாம் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழில் குறிப்பிட்டுள்ளார். இவர் திருக்காளத்தி வேங்கடாசம் முதலியாரால் ஆதரிக்கப்பெற்றார்.

வி.பா

ஆசுகார் ஒயில்டு (கி.பி. 1856-1900) ஆங்கில இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றவர். ஐரிசுக்காராகிய இவர் கவிஞரும், நாடகாசிரியரும், நாவலாசிரியரும், சிறுகதையாளரும், கட்டுரையாளரும், ஆராய்ச்சியாளரும், அழகியல் வழிபாட்டினருமாவர்.

தப்ளின் நகரத்துத் திரினிட்டி கல்லூரியிலும், ஆக்கபோர்டு மாக்டலின் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். மும்மொழிப்புலவர்; ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளில் தம் இலக்கியம் படைப்புகளைத் தந்தவர்.

திசுரேலியைப் போல் மிக ஆடம்பரமான ஆடைகளை உடுத்துபவர். செரிடனைப் போல் அறிவுக் குறும்பாகவும் வேடிக்கையாகவும் பேசுவதில் வல்லுநர். “வாழ்க்கை எனக்கு ஒரு புதிர், ஆனால் நானும் வாழ்க்கைக்கு ஒரு புதிர்தான்” என்பது போன்ற அறிவார்ந்த முரண் சிந்தனை கொண்டவர்.

இவருடைய முதல் கவிதைத் தொகுதி கி.பி. 1881 இல் வெளிவந்தது. ‘தோரியன் கிரேயைப் பற்றிய சித்திரம்’ என்ற இவர் புதினம் சிறந்தது. இவர்தம் புகழ் பெற்ற நாடகங்கள்: ‘சீமாட்டி விண்டர் மீனின் விசிறி’ ‘முதன்மையில்லாத பெண்’, ‘உண்மையாயிருப்பதன் இன்றியமையாமை’ என்பவை இன்பியல் சார்ந்தவை. இவரது ‘சலோம்’ என்பது புகழ்பெற்ற துன்பியல் நாடகம் ஆகும். இவருடைய