ஆசுத்திரியா
297
ஆசுத்திரேலியா
றிருந்த அரசியல் அமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றத் தொடங்கியது. ஆசுத்திரியாவில் 1945 நவம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலை அடுத்து அங்குத் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அவ்வரசாங்கத்தில் இரு கட்சியின் தலைவர்களும் பங்கு கொண்டனர். இவ்விரு கட்சிகளின் கூட்டாட்சி அரசாங்கத்தால் நாட்டில் நிலையான அரசியலுக்கு வழி பிறந்தது. வல்லரசுகளும் 1955-ஆம் ஆண்டு ஆசுத்திரியாவைக் கைவிட்டன. சுதந்திரத்தைப் பெறும் பொருட்டு ஆசுத்திரியா நடு நிலைமை நாடாக இருக்க ஏற்றுக்கொண்டது. ஆசுத்திரியா 1955 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தது.
ஆசுத்திரியாவில் 1966-ஆம் ஆண்டு வரை கூட்டாட்சி அரசாங்கங்களே நீடித்தன. அந்த ஆண்டில் மக்கள் கட்சியின் தலைவரான சோசபு கிளாசு (Josef Klaus) என்பார் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். பின்னர் 1970-ஆம் ஆண்டுத் தேர்தலில் சமதருமக் சுட்சிக்குப் (Socialist Party) பெரும்பான்மை இடங்கள் கிடைக்காவிட்டாலும் வலிமை மிகுந்த கட்சியாக மாறியது. அக்கட்சி, ஆசுத்திரியாவின் முதல் சமதரும் அரசாங்கத்தை நிலைநாட்டியது. புரூனோ கிரிசுக்கி (Bruno Kreisky) தலைமை அமைச்சரானார். சமதருமவாதிகள் 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று கட்சியை நிறுவினர், பின்னர் 1975-1979 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அவர்களே ஆட்சியைப் பிடித்தனர்.
ஆசுத்திரிய தொடர்ந்து நடுநிலை நாடாகவே திகழ்கிறது. அதன் தலைநகரான வியன்னாவில் ஐக்கிய நாடுகளின் இரு அமைப்புகள் இயங்குகின்றன. அவை (1) பன்னாட்டு அணுசக்தி நிறுவனம், (2) ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி நிறுவனம், ஐக்கிய நாடுகளின் மையம் 1979 இல் சொந்தக் கட்டடத்தையே வியன்னாவில் கட்டிக் கொண்டுள்ளது. இங்கு ஐக்கிய நாடுகளின் மாநாடுகள் பல கூடும். குர்ட்டு வால்தைம் (Kurt Waldheim) என்னும் ஆசுத்திரிய நாட்டு அறிஞர் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக 1972 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அண்மையில் அப்பதவியிலிருந்து ஒய்வுபெற்றார், சமதருமக்கட்சி 1982 இலும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு இன்று தொடர்ந்து பதவியில் உல்ளது.
துணை நூல்கள்:
Leeper, Alexander W.A., A History of Mediaeval Austria. New York and London, 1941.
Taylor, Alan J.P., The Habsburg Monarchy. 1809,1918, London, 1948.
Taylor, Alan J.P, A History of the Austrian Empire and Austria Hungary, London, 1948.
Graf, Max., The Legend of a Musical City, New York, 1945.
ஆசுத்திரேலியா ஒரு கண்டம். உலகில் ஒரு கண்டமே ஒரு நாடாக இருப்பது ஆசுத்திரேலியா (Australia) மட்டும்தான். பரப்பளவில் இது உலகில் ஆறாவது பெருநாடாகும். ஆனால், கண்டங்களில் மிகச்சிறியது இதுவே. இந்தியப் பெருங்கடலுக்கும் தென் பசிபிக்குப் பெருங்கடலுக்கும் இடையில் ஆசுத்திரேலியா அமைந்துள்ளது. ஆசுத்திரேலியா என்னும் பெயர் ஆசுட்ராலிசு (Australis) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ‘ஆசுட்ராலிசு’ என்றால் தெற்கு என்று பொருள். உலக உருண்டையின் தென்பாதியில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது போலும்.
ஆசுத்திரேலியா வறண்டதும், மக்கள் தொகை மிகக் குறைந்ததுமான நாடாகும். இக்கண்டம் தெற்கு வடக்காக 3153 கி.மீ. கிழக்கு மேற்காக 4005 கி.மீ. பரந்துள்ளது. தாசுமேனியாவை (Tasmania) உள்ளிட்ட இக்கண்டத்தின் பரப்பளவு 76,85,413 கி.மீ.
ஆசுத்திரேலியா-அரசியால் பிரிவுகள்
இயற்கைப் பிரிவுகள்: ஆசுத்திரேலியாவை மூன்று பெரும் இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
வா.க. 2-38