உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசுத்திரேலியா

298

ஆசுத்திரேலியா

அவை 1. கிழக்கு மேட்டு நிலங்கள், 2. மத்திய தாழ்நிலங்கள், 3. மேற்குப் பீடபூமி என்பனவாம்.

கிழக்கு மேட்டு நிலங்கள் ஆசுத்திரேலியாவின் மிக உயர்ந்த மலைத்தொடர்களைக் கொண்டுள்ளன. வடக்கே யார்க்கு முந்நீரக முனையிலிருந்து தெற்கே தாசுமேனியாக் கடற்கரை வரை நீண்டுள்ளது இப்பிரிவு. இப்பிரிவின் தென்கிழக்கு மூலையில், பிரிசுபேனிலிருந்து மெல்போர்ன் வரையிலுள்ள பகுதியில் தான் ஆசுத்திரேலியாவின் பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். கிழக்கு மேட்டுநிலங்களைப் பெரும் பிரிவு மலைத்தொடர்கள் (Great Dividing Range) என்றும் குறிப்பர். மேட்டுநிலங்கள் என்று குறிக்கப்பட்டாலும் இது ஒரு மலைத்தொடராகவோ மலைப் பாங்கானதாகவோ இல்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். இப்பிரிவில்தான் ஆசுத்திரேலியாவின் மிக உயர்ந்த மலையான காசியசுகோ 2228 மீட்டர்) அமைந்துள்ளது.

ஆசுத்திரேலியா - இயற்கைப் பிரிவுகள்

மத்திய தாழ்நிலங்கள் ஆசுத்திரேலியாவில் மிகக்