ஆசுத்திரேலியா
302
ஆசுத்திரேலியா
யாவிலும் கோதுமை மிகுதியாகப் பயிராகிறது. குயின்சுலாந்தின் கிழக்குக் கடற்கரைப் பண்ணைகளில் கரும்பு வாழை, அன்னாசி, போன்றவை உற்பத்தியாகின்றன, ஆப்பிள், பியர்சு (Pears) போன்ற பழவகைகள், அனைத்து மாநிலங்களிலும் பயிராகின்றன. நியூசௌத்வேல்சிலும், தென் ஆசுத்திரேலியாவிலும் கிச்சிலிப் பழங்கள் பயிராகின்றன. திராட்சைச் சாற்றிலிருந்து சாராயம் உண்டாக்கும் தொழில் தென் ஆசுத்திரேலியாவில் நடைபெறுகிறது. அங்கு மிகுதியாகத் திராட்சை பயிராவதே இதற்குக் காரணம்.
சுரங்கத் தொழில்: இந்நாட்டில் மிகுதியான கனி வளங்கள் உள்ளன். ஆனால், கனிமப் படிவங்கள் மக்கள்தொகை குறைந்த - வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றைத் தோண்டியெடுக்கப் பெருஞ் செலவாகிறது. அச்சுரங்கப் பகுதிகளுக்கு இருப்புப் பாதைகளையும் சாலைகளையும் போட வேண்டியுள்ளது. சுரங்கத் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் புதிய நகரங்களை அமைத்தாக வேண்டும். கனிமப் பொருள்களைத் தோண்டியெடுக்கத் தேவையான முதலீட்டை வெளிநாட்டு நிறுவனங்கள் செய்துள்ளன. இத்தொழிலில் அறுபது விழுக்காடு நிறுவனங்கள், அயல்நாட்டினர் வசம் உள்ளன. ஆசுத்திரேலிய அரசு 1975-ஆம் ஆண்டு அத்தகைய நிறுவனங்களில் குறைந்தது ஐம்பது விழுக்காடாவது ஆத்திரேலியர்களின் கைகளிலேயே இருக்க வேண்டுமெனச் சட்டம் இயற்றியுள்ளது. இருப்பினும் இச்சட்டத்தை அரசினால் செயற்படுத்த இயலவில்லை.
ஆசுத்திரேலியா கி.பி. 1800-ஆம் ஆண்டளவில் அதன் கனிச் செல்வத்தைப் பெருக்க முனைந்தது. அது கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் செம்பு, தங்கம், ஈயம், வெள்ளி, தகரம், துத்தநாகம் போன்ற கனிமங்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்ய முற்பட்டது. மேற்கூறிய கனிமங்கனே கி.பி. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிறந்த சுரங்கப் பொருள்களாய் இருந்தன. மண்ணியல் வல்லுநர்கள் 1950க்குப் பின்னர் ஆசுத்திரேலியாவில் பெருமளவில் பாக்சைட்டு, நிலக்கரி, இரும்புத் தாதுகள் இருப்பதைக் கண்டறிந்தனர், அவர்கள் 1960-ஆம் ஆண்டளவில் மாங்கனீசு, நிக்கல், பெட்ரோலியம் போன்றவை இருப்பதையும் ஆய்ந்து கண்டனர். இக்காலத்தில் சுரங்கப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் தலைசிறந்த நாடுகளுள் ஒன்றாக ஆசுத்திரேலியா திகழ்கிறது. பாக்சைட்டு உற்பத்தியில் இது முதலிடத்தில் உள்ளது. நிலக்கரி, செம்பு, பொன், இரும்புத்தாது, ஈயம், மாங்கனீசு, நிக்கல், வெள்ளி, தகரம், தங்சுடன், துத்தநாகம் போன்ற கனிமப் பொருள்களை உற்பத்தி செய்யும் தலைசிறந்த நாடாகக் கருதப்படுகிறது. பலநிறங்களைக் காட்டும் ஓபல் எனப் பெறும் இரத்தினக் கற்களை வெட்டி எடுப்பதில் ஆசுத்திரேலியா உலகிலேயே முதலிடம் பெறுகிறது.
மேற்கு ஆசுத்திரேலியா, குயின்சுலாந்து, நியூசௌத்வேல்சு மாநிலங்களில் சிறந்த சுரங்கங்கள் அமைந்துள்ளன.
வடக்குப் பகுதியில் வளர்ச்சி பெறாத நிலையில் உரேனியப் படிவங்கள் உள்ளன. இதுவும் உலகின் முதலிடத்தைப் பெறுகிறது.
மீன் பிடித்தல்: ஆசுத்திரேலியாவைச் சுற்றிலும் கடல்கள் சூழ்ந்திருந்தாலும் மீன் பிடிக்கும் தொழில் ஓரளவுதான் நடைபெறுகிறது. கரையை அடுத்துள்ள கடல்களில் ஆயிரக்கணக்கில் வகைவகையான மீனினங்கள் வாழ்ந்தாலும், சில வகை மீனினங்களே மிகுதியாக, நல்லுணவாகப் பயன்படுகின்றன. இங்கு மீன் பிடிக்கும் தொழில் சிறிய அளவினதுதான்; எனினும் இந்த நாடு மீன் பண்ணையால் பெரும் பொருள் ஈட்டுகிறது. கிளிஞ்சல் தொழிலால் பெரும் ஆதாயம் கிடைக்கிறது. முல்லட்டு, சாலமன், துனா என்னும் மீன்வகைகள் சிறப்பானவை. கிளிஞ்சல், சிப்பி, மீன் ஆகியன ஏற்றுமதியாகின்றன.
சுற்றுலாத் துறை: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதவிதமான கவர்ச்சிப் பொருள்கள் ஆசுத்திரேலியாவில் மிகுதியாக உள்ளன. வனவிலங்குப் புகலிடங்கள், மணற் பாங்கான கடற்கரைகள், பிரிக்கும் பெரிய மலைத்தொடர், ஆசுத்திரேலிய ஆல்ப்சுமலைத்தொடர், இன்னும் எண்ணற்ற வரலாற்றுச் சிறப்பு மையங்கள் போன்றவை பயணிகளைக் கவருகின்றன. எனினும் சுற்றுலாப் பயணிகள் போதுமான அளவில் வருவதில்லை. ஆசுத்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுலா செய்யுமளவில், பாதியளவினர் கூட ஆசுத்திரேலியாவுக்கு வருவதில்லை. அதற்குக் குறிப்பிடத்தக்க காரணங்கள் இரண்டு. முதலாவது தூரம்; இரண்டாவது பெருஞ்செலவு. ஆசுத்திரேலியாவைச் சுற்றியுள்ள நியூசிலாந்து, பசிபிக்குப் பெருங்கடல் தீவுகள், சப்பான், தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலிருந்தே பயணிகள் வருகிறார்கள்.
அயல் நாட்டு வாணிகம்: இந்நாட்டிலிருந்து 1950-ஆம் ஆண்டில் ஏற்றுமதியாகிய பொருள்களில் எண்பத்தைந்து விழுக்காடு, பண்ணைப் பொருள் வாணிகத்தின் வழியாகவே வந்தது. இன்றும் பண்ணைப் பொருள்கள் ஏற்றுமதி வருவாயே நாட்டு வருமானத்தின் பெரும் பங்காக விளங்குகிறது. ஆனால், 1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர்க் கனிமப்