உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசுத்திரேலியா

303

ஆசுத்திரேலியா

பொருள்களையும் பிறஆலை உற்பத்திப் பொருள்களையும் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்கும் முறையால் பெரும் வருவாயைப் பெற்று வருகிறது. இன்று பண்ணைப் பொருள்கள் ஏற்றுமதியால் 30 விழுக்காடு வருவாயும், ஆலை உற்பத்திப் பொருள்களால் 20 முதல் 25 விழுக்காடு வரை வருவாயும் கிட்டுகிறது. ஆசுத்திரேலியாவின் 75 விழுக்காடு இறக்குமதிப் பொருள்கள் ஆலை உற்பத்திப் பொருள்களாகும். இந்நாடு பல்லாண்டுகளாக இங்கிலாந்துக்கே தன் உற்பத்தியின் பெரும் பகுதிப் பொருள்களை அனுப்பி வந்தது. இக்காலத்தில் இங்கிலாந்து மேலை ஐரோப்பிய நாடுகளுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளமையால் ஆசுத்திரேலிய வாணிகம் சுருங்கிவிட்டது. இந்த நாடு இன்று சப்பானுடன் பெரும் வாணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

போக்குவரத்து: ஆசுத்திரேலியாவின் போக்குவரத்து, சிறப்பாகப் பேருந்துப் போக்குவரத்தின் வாயிலாக நடைபெறுகிறது. பெரும்பாலான குடும்பங்கள், சொந்த மகிழ்வுந்துகளை உள்ளூர்ப் பயணங்ககளுக்குப் பயன்படுத்துகின்றன. இந்நாட்டில் 8,21,000 கி.மீ. தொலைவிற்கு இருப்புப் பாதைகன் போடப்பட்டுள்ளன. இப்பாதைகள் மாநிலத் தலைநகரங்களையும் உள்நாட்டுப் பெருநகரங்களையும் இணைக்கின்றன. ஆசுத்திரேலியாவில் திரான்சு-ஆசுத்திரேலிய விமான வழியென்றும், ஆன்செட்டு ஆசுத்திரேலிய விமான வழி என்னும் இரு பெரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைப்புகள் உள்ளன. நடுவண் ஆட்சி முந்தைய அமைப்பையும், தனியார் நிறுவனங்கள் பிந்தியதையும் இயக்குகின்றன. நடுவண் அரசு, குவாண்டாசு (Quantas Airways Limited) என்னும் வானவழி அமைப்பினை நடத்துகிறது. உள்நாட்டு நகரங்களுக்குக் கொண்டு செல்லும் பொருள்களை இருப்புப் பாதைகளும் வானூர்திப் பேருந்துகளும் (Air Bus) எடுத்துச் செல்கின்றன.

செய்திப் போக்குவரத்து: அஞ்சல், தொலைபேசி, தொலை வரி (Telex) அமைப்புகள் இங்கு நடுவண் அரசின் கண்காணிப்பில் உள்ளன. இங்கு 225 வானொலி நிலையங்களும், 135 தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. பெருநகரங்களில் குறைந்த அளவு ஒரு நாளிதழாவது அச்சிடப் பெறுகிறது. தேசிய நாளிதழ்களும் உள்ளன.

வரலாறு: ஆசுத்திரேலியாவின் பழங்குடிகள் இக்கண்டத்திற்கு 40,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருக்க வேண்டும். ஆசியாக் கண்டத்திலிருந்து நியூகினி வழியாக அவர்கள் இங்கு வந்திருக்கக்கூடும். வெள்ளைக்காரர்கள் கி.பி. 1700-ஆம் ஆண்டளவில் முதன்முதலாக இங்கு வந்தபோது. ஏறத்தாழ 3,00,000 பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது.

ஆசுத்திரேலியா கண்டுபிடிக்கப்படல்: போர்ச்சுகீசிய, இசுபானிய ஆய்வாளர்கள், நியூகினியைக் கி.பி. 1500-ஆம் ஆண்டளவில் கண்டுபிடித்தபோது ஆசுத்திரேலியாவை ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கத் தொடங்கினர். ஆசியாவிற்குத் தெற்கே புரியாத புதிரானதொரு கண்டம் இருப்பதாக நம்பி, புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க முனைந்த மேற்கூறிய ஐரோப்பிய நாட்டினர் ஆசுத்திரேலியாவை ‘ஒருவருக்கும் தெரியாத தென் நிலம்’ என்றனர்.

இலூயி வாசு-டி-தோரசு (Luis Vaez De Torres) என்னும் பெயர் கொண்ட இசுபானிய ஆய்வாளர் நியூகினி, ஆசுத்திரேலியா அன்று என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார். அவர் நியூகினிக்கும், 1606-ஆம் ஆண்டில் ஆசுத்திரேலியாவுக்கும் இடையிலிருக்கும் நீர்ப்பிரிவின் வழியாகப் பயணம் செய்து. நியூகினி ஒரு தீவு என்பதைக் காட்டினார். இருப்பினும், 160 கி.மீ.க்குத் தென்பால் பெரியதொரு கண்டம் இருப்பதைத் தோரசு அறியவில்லை. அதே ஆண்டில் வில்லியம் சேன்சு (William Janes) என்னுந் தச்சு (Dutch) ஆய்வாளர் கடற்பயணம் செய்து நியூகினி கடற்கரையைக் கண்டார். உண்மையிலேயே அவர் கண்டது, வடகிழக்கு ஆப்பிரிக்காவின் கோடியில் இருக்கும் யார்க்கு முந்நீரக முனையாகும். ஆசுத்திரேலிய மண்ணில் காலடி வைத்த முதல் ஐரோப்பியர்

ஆசுத்திரேலியப் பாராளுமன்றம் கான்பொரா