உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டனத்தி

339

ஆட்டோ, முதலாம், மகா

கூறவும் ஆட்டத் தந்திரக் கோட்பாடு துணை புரிகிறது. பேரங்கள் நிகழும் நிலைமைகன் எங்கெங்கே காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் ஆட்டக் கோட்பாடு பயன் படக்கூடும். ஒரு நாட்டின் பொருளாதாரம் முழுவதிலும் காணப்படும். எல்லாப் பண்ட அங்காடிகளையும் ஒன்றாக இணைத்து, அவற்றில் நிகழும் வாங்குவோர் விற்போர் போட்டி முழுவதற்கும் பொருந்தும் ஒரு பொதுச் சமநிலை (General equilibrium) ஒன்றை ஆராயவும், அப்போட்டியின் முடிவுகளை முன்னறியவும் ஆட்டக் கோட்பாடு பயன்படும்.

தி.சு.மோ.

துணை நூல்கள்:
Banmol William J., Economic Theory and Operations Analysis, Prentice-hall of India Limited, Delhi, 1968.
Koutsoyiannis., Modern Micro Economics. The Macmillan Press Limited, London, 1975.
Thomas Schelling, The Strategy of Conflict, Oxford Galaxy, New York, 1961.
Von Neumann, John & Morgenstern, Oskar, Theory of Games and Economic Behaviour, Willey, New York, 1964.

ஆட்டனத்தி வஞதி நகரிலிருந்து அரசுபுரிந்த சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். ஆடற் கலை பயின்று ஆடவல்லான் என விளங்கியதால் கலைத்தொழில் சிறப்புப் பற்றி ‘ஆட்டன் அத்தி’ என்றும், ‘பொருநன்’ என்றும் இவன் பெயர் பெற்றான். இவன் மிக்க அழகினன்; திரண்ட தோளினன்.

ஆடற்கலையில் சிறந்தவனாகிய அத்தி எழுதெழில் சிறப்புடைய கரிகாலன் மகள் ஆதி மந்தியைக் காதலித்து மணந்து இல்வாழ்க்கை இனிது நடத்திக் கொண்டிருந்தான். இடர் அதிகம் நேரினும் உள்ளம் கலங்காதவன். கழார் நகரினை அடுத்த காவிரித் துறையில் ஒரு சமயம் புது வெள்ளப் பெருக்கு விழா ஒன்று நிகழ்ந்தது. ஆட்டனத்தி விழாக் காலத்தில் கரிகாற்சோழன் கண்டிருப்ப, காலில் கழல் புரள, அரையில் கட்டிய கச்சையின் மேல் பொன்னால் செய்த பாண்டில் மணிகள் ஒலிப்ப, அழகுபெற ஆடிக் கொண்டிருந்தான், மிகுதியாகவும் விரைவாகவும் வந்த வெள்ளம் ஈர்த்துச் சென்றது. இவன் சிறிதும் கலங்காது கடல் வரை நீந்திக் கொண்டு சென்றான். பிறகு ஒருவாறு கரை சேர்ந்து மருதியின் உதவியால் தன் மனைவியிடம் வந்து சேர்ந்தான். இவன் காவிரிக்கு இரையானான் என்று கலங்கியிருந்த ஆதிமந்தி இவனைக் கண்டதும் கரை காணாத மகிழ்ச்சி அடைந்தாள். (அக.222, 236, 376, 396: குறு. 31; சிலப். 21: 11-15).

த.கோ.

ஆட்டோ, முதலாம், மகா (கி.பி. 912-973) இடைக்கால ஐரோப்பாவை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுள் ஒருவர். இவர் இடைக்காலத்தில் செருமனியை ஐரோப்பாவிலேயே தலைசிறந்த நாடாக்கினார். சார்லமேன் என்பவரால் கி.பி. 800-இல் தோற்றுவிக்கப்பட்ட புனித உரோமானியப் பேரரசு பல ஆண்டுகளுக்குப் பின் சிதைவுறத் தொடங்கியது. அவ்வாறு சிதறியிருந்த அப்பேரரசுக்குப் புத்துயிர் அளித்த பெருமை முதலாம் ஆட்டோவைச் சாரும்.

முதலாம் ஆட்டோ கி.பி. 912-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 23-ஆம் நாள் என்றி பௌலருக்கும் மாடில்டாவுக்கும் பிறந்தார். இவர் கி.பி 936-இல் செருமனிக்கும், கி.பி. 962 முதல் 973 வரை புனித உரோமானியப் பேரரசுக்கும் மன்னராகத் திகழ்ந்தார்.

முதலாம் ஆட்டோ மூன்று தலையாய குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். அவை: (1) தம் அதிகாரத்தை அண்டைய கோமகனார் நாடுகள் மீது செலுத்தி அவற்றைத் தம் ஆட்சியின்கீழ்க் கொண்டு வருதல், 2) புனித உரோமானியப் பேரரசுக்குப் புத்துயிர் அளித்தல், 3) செருமனியை ஒரு வலுவுள்ள நாடாக ஆக்கி, அங்கேரியர்களின் தாக்குதல்களை முறியடித்தல்.

முதலாம் ஆட்டோவின் ஆட்சிக்காலத் தொடக்கத்தில் அவருக்கும், பிரபுக்களுக்குமிடையே நல்லுறவு இருந்து வந்தது. ஆனால், மிகவிரைவில் பிணக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், பிரபுக்கள் மன்னராட்சியை எதிர்த்ததேயாகும். இதனால், அவர் பிரபுக்களுடன் தொடர்ந்து மூன்றாண்டுக் காலம் போர் செய்ய வேண்டியிருந்தது. பிரான்கோனியா கோமகனார் கி.பி. 939-இல் முதலாம் ஆட்டோவுடன் தகராறு மேற்கொண்டதால், மன்னர் அவருடன் போரிட வேண்டியதாயிற்று. பிரான்கோனியாவைப் போன்று பவேரியா, சவேபியா, இலோத்தேரிங்கியா போன்ற கோமகனார் நாடுகளும் அவரை எதிர்த்தன.

முதலாம் ஆட்டோவின் இத்தாலியப் படையெடுப்பு: இத்தாலிய நாடு இலோதார் என்பாரின் மறைவிற்குப் பின்னர் நலிவுறத் தொடங்கியது, வெர்டன் உடன்படிக்கையினால் (கி.பி. 843) ஏற்பட்ட இத்தாலியப் பேரரசு, செருமனி, பிரான்சு போன்ற நாடுகளின் செயலினால் சிதறுண்டது. ஆட்டோவின் காலத்தில் இத்தாலியின் அரசியாகப் பழைய மன்னரின் கைம்பெண்ணான அடிலேய்டு

வா. க.2- 22அ