ஆடம்சு சான் குவின்சி
345
ஆடம்பரப் பொருள்கள்
தில் பட்டம் பெற்றார். இவர் கி.பி. 1803 முதல் கி.பி. 1808 வரை (மேல்சபை) செனட்டு அவையின் உறுப்பினராய்ப் பதவியில் இருந்தார். பின் பதவியை உதறிவிட்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதராக நியமிக்கப் பெற்று, நெதர்லாந்து, பிரசியா (Prussia), உருசியா போன்ற நாடுகளில் பணியாற்றினார். போரை நிறுத்த வேண்டி கி.பி. 1814-ஆம் ஆண்டில் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இவரும் ஓர் உறுப்பினராய் இருந்தார். இவர் கி.பி. 1815-இல் இலண்டன் தூதராகப் பணி அமர்த்தப்பெற்றார். இவர் தந்தையாரும் அதே பதவியில் முன்னர் இருந்தார். சேம்சு மன்றோ குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தபோது, ஆடம்சு உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது இவர் பேச்சுகளின் மூலம் உடன்படிக்கை செய்து கி.பி.1819-ஆம் ஆண்டில் பிளாரிடாவை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் பெற்றுத் தந்தார். திசம்பர்த் திங்களில் மன்றோ (Munroe) அறிக்கையைக் கி.பி. 1823-ஆம் ஆண்டு வெளியிடக் குடியரசுத் தலைவருடன் பணியாற்றினார்.
சான் குவின்சி ஆடம்சு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவராகக் கி.பி.1824-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெற்றார். ஆனால், அவ்வாண்டுத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையான தேர்தல் வாக்குகளை பெறாத காரணத்தால், காங்கிரசின் கீழ்ச்சபை இவரைத் தேர்ந்தெடுத்தது, அதன் விளைவாக இவருக்கு எதிராக இவர் பகைவர்கள், இவரது ஆட்சிக் காலத்தில் சிறப்பான செயலெதுவும் நடக்கவில்லை என்று குறை கூறினர்.
ஆண்ட்ரூ சாக்சன் என்பவர் கி.பி. 1828-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சான் குவின்சி ஆடம்சு தம் சொந்த ஊரான குவின்சிக்குச் சென்றார். ஆனால், கி.பி. 1831-ஆம் ஆண்டில் மீண்டும் கீழ்ச்சட்டமன்ற அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுத் தம் வாழ்நாளில் இறுதி 17 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். அடிமைத்தளையை அறவே நீக்க வேண்டுமென்னும் கருத்தினைக் கொள்ளாதவராயினும், அடிமைத்தளை நீடிப்பதை இவர் எதிர்த்தார். எட்டு ஆண்டுகள் அதைக் கடுமையாகச் சாடி எதிர்த்தும் புகழ்பெற்றார். அடிமைத்தளை எதிர்ப்புக்கான விவாதத்தைத் தடுக்க முயன்ற கருப்புச் சட்டங்களை எதிர்த்து இறுதியில் வெற்றி பெற்றார்.
ஆடம்சு சீரிய சுதந்திர உணர்வும், பொதுநலம் பேணும் மனத்திட்பமும் மன உறுதியும் கொண்டவர். எனினும் இவரது தனித்தன்மையின் காரணமாக இவரால் மக்களது கவனத்தையும், அன்பையும் முழு அளவுக்குப் பெற முடியவில்லை.
இவரது இறுதிக்காலம் மனத்தை இருக்கக்கூடியது. மெக்சிகோ போரில் பங்குபெற்ற தளபதிகளுக்கு உடைவாள் கொடுக்க வேண்டுமென்ற சட்டமுன் வரைவு காங்கிரசில் வந்தது. அப்போர் அறக்கொள்கைகளுக்குப் புறம்பானது வாதிட்டபோது பக்கவாத நோய்க்கு ஆளாகிக் கீழ்ச்சட்டமன்ற அவையிலேயே சாய்ந்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அதாவது கி.பி. 1848-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 21-ஆம் நாள் காலமானார்.
ஆடம்சு மலை அழிந்தொழிந்த எரிமலைகளுள் ஒன்று. இது 3751 மீட்டர் உயரமுள்ளது. அமெரிக்காவில் வாசிங்டன் மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியில் யாகிமா மாவட்டத்தில் உள்ளது. காசுகேடு மலைத் தொடரின் (Cascade Range) பகுதியான இம்மலையுச்சி காசுகேடுவின் கிழக்குப் பக்கத்தில் உள்ளது. மழை குறைவாக இருப்பினும் ஈரக்கசிவு போதுமானதாக உள்ளமையால், ஊசியிலைக் காடுகள் இங்குக் காணப்படுகின்றன.
ஆடம்பரப் பொருள்கள்: வருவாய் மிகும் விகிதத்திற்கு இணையாகத் தனிப்பட்ட சில பணிகள் அல்லது பொருள்களுக்குச் செலவிடும் செலவு ‘ஆடம்பரச் செலவு’ எனப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை. மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆடம்பரப் பொருள்கள், பணிகள், செலவுகளின் வகைகள் ஆகியவை மாறுபடுகின்றன. வளர்ச்சியடையா நாடுகளில் ஆடம்பரப் பொருளாகக் கருதப்படுவது, வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்றியமையாத கட்டாயத் தேவையாக வழக்கிலிருப்பது மரபு. பந்தய உந்தூர்தியை (Race Car) ஆடம்பரப் பொருளாகக் கருதும் அமெரிக்கா வீட்டிற்கு ஓர் உந்தூர்தியை அடிப்படைத் தேவையாகக் கருதுகிறது. அத்தேவையே ஆசிய நாடுகளில் ஆடம்பரப் பொருளாகக் கருதப்படுகிறது.
ஆடம்பரப் பொருள்களின் (Luxury Goods) தேவை, அங்காடியில் அவற்றில் அளிப்பைப் பொறுத்து அமைகிறது. பொதுவாக, மக்கள் தங்கள் காரியங்களை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிக்க விரும்புவது இயற்கையே. இவ்வகை விருப்பமே ஆடம்பரப் பொருள்களின் வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. மேலும், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக உண்டான புதிய கண்டுபிடிப்புகள் ஆடம்பர வாழ்க்கையினை மேற்கொள்ளக் காரணமாகின்றன. எடுத்துக்காட்டாக, உண்கலன்களைச் சுத்தம் செய்யும் எந்திரம் (Dish Washer) அங்காடிக்கு வந்ததன் காரணமாக, அதன் தேவை வளர்ச்சியடைந்த நாடு-
வா.க. 2-44