ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்
347
ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்
இக்காலத்தில் பரத நாட்டியம் என்ற பெயருடன் வழங்கி வரும் ஆடல்வகை, தமிழ்நாட்டில் பற்பல ஆலயங்களில். வழிபாட்டுத் தொடர்புடன் தேவதாசிகள் என்று அழைக்கப்பெற்ற தேவரடியார்களால் ஆடப் பெற்று வந்த தனிப்பட்ட நடனங்களை அடிப்படையாகக் கொண்டது. சோழ மன்னர்கள் தஞ்சைப்பெருவுடையார் கோயில் போன்ற ஆலயங்களில், நூற்றுக்கணக்கான தேவதாசிகளை அமர்த்தி, அவர்களுக்கு மானியங்கள் அளித்திருந்தனர் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இம்மரபு, பின்னர் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள், நாயக்க அரசர்கள், மராத்திய அரசர்கள் ஆகியோரின் காலங்களிலும் தொடர்ந்து வழங்கி வந்தது. மேலும், தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், திருவண்ணாமலை, விருத்தாசலம் ஆகிய ஐந்து தலங்களில் உள்ள ஆலயங்களில் அக்காலத்து மன்னர்கள் ‘கரணங்கள்’ எனப்படும் நாட்டிய அடவுகளைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்திருப்பதிலிருந்து அவர்களுக்கு ஆடற்கலையிலிருந்த ஆர்வம் நமக்குத் தெரிய வருகிறது. ஆகவே பரத நாட்டியம் என்ற கலை, நடன உலகிற்குத் தமிழகம் அளித்திருக்கும் ஒரு பெருங்கொடை ஆகும்.
தஞ்சையை ஆண்டு வந்த சரபோசி மன்னர் காலத்தில் (கி.பி. 1832-ஆம் ஆண்டுவரை) பரத நாட்டியம் 18 உறுப்புகள் கொண்டதாக இருந்தது. ஆயினும் அவருடைய சபையில் ஆடலாசிரியர்களாக இருந்தவர்களும், ‘தஞ்சை நால்வர்’ என்று புகழ் பெற்றவர்களுமான சின்னய்யா, பொன்னய்யா, சிவாநந்தம், வடிவேலு ஆகியோர் பரத நாட்டியத்திற்கு ஒரு புதிய குறுகிய அமைப்பை ஏற்படுத்தி அலாரிப்பு, சதிசுரம், சப்தம், வர்ணம், பதம், சாவனி, தில்லானா என்ற அடவை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த அமைப்பிற்கு ஏற்ற இசை வடிவங்கள் பலவற்றையும் இந்நால்வரும் இயற்றி நாட்டியத்திற்குப் புத்துயிரளித்தனர். காண்க: அவிநயம்.
சென்னையில் 1930-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி கோயில்களில் தேவதாசிகள் நாட்டியமாடும் முறை அகற்றப்பட்டபிறகு. ஆடற்கலையின் ஒளி மங்கலாயிற்று. அச்சமயம் ஈ. கிருட்டிணய்யர், உருக்குமணி தேவியார், டாக்டர் வே. இராகவன் முதலியோரின் பெரு முயற்சி காரணமாகப் பரதநாட்டியம் புதுமெருகு பெற்றுப் பொலிவுறலாயிற்று. இந்த மறுமலர்ச்சியில் தோன்றி உலகப் புகழ்பெற்ற ஆடற்கலைஞர் பால சரசுவதி ஆவார். காண்க: பாலசரசுவதி பரதநாட்டியம்.
2) பாகவத மேள நாட்டியம்: கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டுவந்த நாயக்க மன்னர் ஒருவர், ஆந்திர நாட்டிலிருந்து நாட்டியத்தில் திறமையுடைய நூற்றுக்கணக்கான அந்தணக் குடும்பங்களை மெலட்டூர் முதலிய கிராமங்களில் குடியேறச் செய்து, நடனக்கலைக்கு ஆதரவு அளித்தார். இவர்களுடைய மரபினர் இன்றும் ஆடிவரும் ஆடல்வகைக்குப் ‘பாகவத மேள’ நாட்டியம் என்று பெயர். இது சூலமங்கலம், சாலியமங்கலம், ஊத்துக்-