ஆடை அணிகள்
357
ஆண்டாள்
சட்டைகள் பின்னுகிறார்கள். மழைக் காலங்களில் மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதற்கும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றிற்குச் செல்லுவதற்கும் மழைக்காப்புடைகளும். தொப்பிகளும் அணிகிறார்கள். இன்று பள்ளி செல்லும் சிறுவர்கள் சீருடை அணிந்து செல்கிறார்கள். அது போன்று அலுவலகங்களில் வேலை செய்வோர் சீருடை அணிகின்றனர்.
கணவனை இழந்து வாழும் கைம்பெண்டிர்கள் மங்கல அணியை நீக்கிப் பின் ஏனைய அணிகலன்களையும் துறந்து குங்குமம், சாந்து இழந்து, கழுத்தினைப் போர்த்திக் கொண்டு, மிக எளிமையாக இருப்பார்கள். இன்றும் கணவனை இழந்த பெண்கள் அணிகலன்களின்றி வெள்ளாடை உடுத்துகிறார்கள்.
துறவற வாழ்க்கையில் ஈடுபட்டோரின் ஆடை தனித்தன்மையுடையது. அவர்கள் ஆடையே மக்களிடையே பெருமதிப்பைக் கொடுக்கும் தன்மையுடையது. துறவிகள் காவி உடை அணிகின்றனர். இன்றும் பெண் துறவிகளும் காவி உடை அணிகிறார்கள்.
இவ்வுலக இன்பத்தைப் பெற்ற மனிதர் வீடு பேற்றைப் பெற வேண்டுமென்ற நோக்கோடு இறைவனை வழிபட்டனர். அவ்வாறு இறைவனை வழிபட உடலைத் தூய்மை செய்து ஆடைகளை அணிந்தனர். இன்றும் இந்துக்கள் நீராடி, ஈர ஆடையுடன் இறைவனை வணங்குகின்றனர். இசுலாமியர் வெண்ணிற ஆடை அணிகின்றனர். கோயிலுக்குப் போகும் போது தூய்மையான நூற்புடவை அல்லது பட்டுப் புடவை அணிந்து செல்கின்றனர். காவடி எடுப்போர் காவி ஆடையுடன் செல்லுகின்றனர். தீ மிதித்தலுக்கு மஞ்சள் ஆடை அணிகின்றனர். ஐயப்ப பக்தர்கள் நீலம், அல்லது கருமை நிற ஆடையினை உடுத்துகின்றனர்.
ஆடை அணிகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் நிலையையும் காணலாம், மணிமேகலையில் “விலை மரம் மென்றுகில் விழுநிதிக்குப்பை” என்ற அடி ஆடை கொடுத்த சிறப்பைக் கூறுகிறது. கம்ப இராமாயணம் ஆடை, அணிகள் பரிசாகக் கொடுத்ததையும், ஏலாதி உண்டி, உறையுள், உடுக்கை கொடுப்போர் சிறந்த வாழ்வு வாழ்வார் என்பதையும் கூறுகின்றன. இந்தியாவில் பல நூற்பு ஆலைகள் தோன்றிவிட்டதால் பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் ஆடைகள் நெய்யப்படுகின்றன. அவ்வாடைகள், பல பெயர்களில் அணியப்படுகின்றன. சிறு குழந்தைகளுக்கு அழகிய விலங்குகள், பறவைகள், சித்திரங்கள் அமைந்த உடைகளும், பள்ளி செல்லும் சிறார்கள், பல வண்ணங்களில் பெரிய பெரிய பூக்களோடு கூடிய பாவாடை கப்தான், சல்வார் கமீசு, மேக்சி மிடி, சுரிதார் போன்ற ஆடைகளும், பெண்கள், பன்னிரண்டு முழம் முதல் பதினெட்டு முழம் வரை புடவைகளையும் அணிகிறார்கள். அமெரிக்கா, சப்பான், இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளில் வாழும் மக்கள் பாகுபாடின்றி உடை அணிகிறார்கள். இந்திய நாட்டின் பண்பாட்டினை உணர்த்தும் வண்ணம், தங்களுடைய பல்வேறு மாநிலத்தின் பண்பை அறிவுறுத்தும் வகையில் பெண்களும் ஆண்களும் ஆடைகளை அணிகிறார்கள். குறிப்பாக வட இந்தியர்கள், சல்வார் கமிசும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அழகிய, சிறப்பு மிக்க, வனப்புப் பொருந்திய புடவைகளையும் ஆண்கள், நான்கு முழம் முதல் எட்டு முழம் வரை உடைய வேட்டிகளையும் கதர் ஆடைகளையும் அணிகிறார்கள். பலவித இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் துணைக்கொண்டு பலவகையான உடைகள் கண்டு பிடிக்கப்படுகின்றன. சான்றாக, நைலான், நைலெக்சு, ஆர்கண்டி, ஆர்லான், ஆர்கன்சா, தெர்லின், பாலியசுடர் ஆகிய துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு எண்ணிறந்த நிறங்களையும் வடிவங்களையும் கொண்டு விளங்குகின்றன.
“ஆடையின் சிறப்பெல்லாம் அணிவோர் சிறப்பே” என்பதற்கிணங்க அணியும் மக்களின் ஆடைகளைக் கொண்டு அவர்கள் நிலையையும் தன்மையையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆடையோடு மக்கள் எக்காலத்தும் விரும்பி அணியும் அணிகலன்களும் சிறப்பினைப் பெறுகின்றன. இவ்வணிகலன்கள் மக்களின் செல்வ வளத்தையும் சமுதாயத்தில் அவர்கள் பெற்றிருந்த நிலைமையையும் தெள்ளிதின் விளக்குகின்றன.
இரா.ப.தே.
ஆண்டப்பன் ஊரணி என்பது ஒரு தெப்பக்குளம். இது குடுமியான் மலை புதுக்கோட்டை சாலையின் வடபுறம் உள்ளது. தொண்டைமான்களின் ஆட்சிக் காலத்தில் ஆண்டக்குளம் ஆண்டப்ப மன்ன வேளார் என ஒருவர் இருந்தார். இத்தெப்பக்குளம் இவரது நினைவாகவே வெட்டப்பட்டது எனலாம். ஆண்டப்ப மன்ன வேளார் குறவஞ்சி என்னும் நூல் இவர் பெயரில் எழுந்ததேயாகும்.
ஆண்டாள் திருவில்லிபுத்தூரில் ஆடிப்பூர நன்னாளில் தோன்றியவர்; ஆழ்வார்களுள் ஒருரான பெரியாழ்வாருடைய நந்தவனத்தில் திருத்துழாய்ச் செடியின் கீழ்க் கண்டெடுக்கப்பட்டவள். கோதை என்னும் அழகிய பெயரை இவளுக்கு வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் சூட்டினார். கூந்தலழகால் சிறப்புற்று விளங்கியமை பற்றிக் ‘சுரும்பார் குழல்கோதை’ என்றும் அழைக்கப்பட்டாள். பிற்காலத்தில் ஆண்டாள் என்றே உலகத்-