உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டுராசு

373

ஆண்டுராசு

யாகவோ மாற்றாள் மூலமாகவோ கலந்துகொள்ளலாம்.

கூட்டங்களில் நிறுவனங்கள். செய்யும் தீர்மானம் பொதுத் தீர்மானம், சிறப்புத் தீர்மானம் என இரு வகைப்படும். ஒவ்வொரு நிறுவனமும் நிகழ்ச்சிக் குறிப்பேடு வைத்திருக்க வேண்டும். அதில், அனைத்துப் பொதுக் கூட்டங்கள், இயக்குநர் குழுக் கூட்டங்கள், பிற குழுக் கூட்டங்கள் முதலானவற்றின் செயல்முறைகளைப் பதிவு செய்ய வேண்டும்.

துணை நூல்கள்: Singh, A., Company Law, Ed, 7, Eastern Book Company, Lucknow, 1982.
Shah, S.M., Lectures on Company Law, Ed, 18, N.M. Tripathi Private Limited, Bombay, 1981.

ஆண்டுராசு மத்திய அமெரிக்கக் கண்டத்தில் உள்ள குடியரசு நாடு. வடக்கில் கரீபியன் கடலும், கிழக்கிலும் வடகிழக்கிலும் நிக்கராகுவா நாடும், மேற்கில் குவாத்திமாலா நாடும், தென் மேற்கில் எல் சால்வடார் என்னும் நாடும் ஆண்டுராசின் (Honduras) எல்லைகளாம். இந்நாட்டின் கிழக்கே அட்லாண்டிக்குப் பெருங்கடலின் பிரிவான கரீபியன் கடலும், மேற்கே பசிபிக்குப் பெருங்கடலும் உள்ளன.

பரப்பும் மக்கள் தொகையும்: ஆண்டுராசு குடியரசின் பரப்பளவு 1,12,088 சதுர கி.மீ. மக்கள் தொகை 36,91,027 (1980). தெகூசிகால்பா (Tegucigalpa) இதன் தலைநகராகும். சான் பெட்ரோசூலா (San Pedro Sula) என்பது இங்குள்ள இரண்டாம் சிறந்த நகரம். இலெசீபா (Lacciba), தேலா (Tela), கோமாயாகுவா (Comayagua), சோலூட்டேக்கா (Choluteca) என்பவை பிற பட்டணங்கள்.

ஆண்டுராசு

ஆண்டுராசின் பெரும்பகுதி மலைப்பாங்கானது. கரடு முருடான மலைநாடாக இருப்பதால் இந்நாடு முன்னேற்றமடையவில்லை. இங்குச் சாலை அமைப்பது கடினம். இத்நாட்டில் மிகுதியாக வாழை பயிராகிறது.

இந்நாட்டின் உயரமான மலையுச்சி ஏறத்தாழ 3500 மீட்டர் உயரமுள்ளது. இம்மலையுச்சி தென் மேற்கில் யோசாவோ ஏரிக்கு (Lake Yoja) அண்மையில் தென்படுகிறது. இந்நாட்டில் முக்கிய ஆறுகள் மலைகளில் தோன்றி, குறுகிய பள்ளத்தாக்குகளுக்கிடையே பாய்ந்து வடக்குக் கடற்கரையையொட்டியுள்ள தாழ்நிலங்களின் வழியாக ஓடி வருகின்றன.

உலுவா (Ulua) ஆறு வேளாண்மைச் செழிப்பு மிக்க பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் கொடுக்கிறது. பட்டுக்கா (Patuca) என்பது மிக நீண்ட ஆறு. வளம் குறைந்த பகுதிகளில் பாய்கிறது.

ஆண்டுராசு வெப்ப மண்டலத்தில் உள்ளது. உயர்ந்த மலைப் பகுதிகள் வசந்தகால இனிமை பயப்பவை. மே மாதம் முதல் நவம்பர் முடிய மழைக்காலம். மழை மிகுந்த மலைப்பகுதிகளில் காடுகள் உள்ளன. மகாகனி சிறப்பான மரங்களில் ஒன்று.

ஆண்டுராசில் வாழும் மக்கள் கலப்பினத்தவர்கள். மெரிடிசோசு (Mestizos) என்னும் பெயர் கொண்ட அவர்கள் இசுபானியருக்கும் (Spaniards) செவ்விந்தியருக்கும் பிறந்தவர்கள். அவர்களுன் பெரும்பாலோர் உழவர்கள்; மேட்டுநிலப் பள்ளத்தாக்குகளில் உழுது பயிரிடுவர். அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த பழ வாணிகக் குழுக்களின் கடும் உழைப்பால் இங்கிருந்த சதுப்பு நிலங்கள் வாழைத் தோட்டங்களாயின. நோய் பரப்பும் கொசுக்களை ஒழித்தும், குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்தும் அப்பகுதிகள் வாழ வசதி மிக்கவையாயின.

செவ்விந்தியர் குவாத்திமாலாவை அடுத்துள்ள மலைகளில் வாழும் சிறுபான்மையினர். அவர்கள் இன்றும் பண்பாட்டு முதிர்ச்சி பெறாதவர்களாகவே வாழ்கிறார்கள். நீக்கிரோக்கள் வட பாகக் கடற்கரைத் தோட்டங்களில் பணியாற்றுகிறார்கள். இங்குள்ள வெள்ளைக்காரர்கள் மக்கள் தொகையில் மிகச் சிலரே. சாலைப் போக்குவரத்து அரிதாக இருப்பதால். உழவர்களில் பலர் தத்தம் தேவைக்குப் போதுமான பொருள்களையே உற்பத்தி செய்கிறார்கள். பீன்க, பழங்கள், கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவை உற்பத்தியாகின்றன. சிலவிடங்-