உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணையுறுதி

378

ஆணையுறுதி

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அத்தகைய தீர்மானம் நிறை வேற்றப்பட்ட பின்னர்ச் செயலிழக்கும். மக்களாட்சியில் சட்டசபையாலன்றி நிருவாகக் குழுக்களால் பிறப்பிக்கப்படும் ஆணைச் சட்டங்கள் மிகக் குறைவாயிருக்க வேண்டும். இல்லையேல் அது வல்லாட்சியாக மாறிவிடும் என்பது அரசியல் நூலறிஞர் கருத்து ஆகும்.

ஆணையுறுதி என்பது இறைவனுக்கு ஏற்கப் பொறுப்புடன் தமது சான்றுறுதி அல்லது வாக்குறுதி அமைவதாகக் காட்டும் வகையில் ஒருவர் புலப்படுத்தும் உறுதிச் சின்னம். பொது அலுவலர் முன்னிலையிலோ நீதிமன்றத்திலோ வேறு சூழ்நிலையிலோ ஒன்றை மெய்யெனக் காட்டும் வகையில், சட்டப்படி எடுக்க வேண்டிய மெய்யுறுதி அல்லது விளம்புதுதியை இது குறிக்கும்.

நீதிமன்றத்தில் சான்று கூறும் ஒவ்வொருவரும் உண்மை உரைக்க வேண்டிய கடமையுடையர். அவர் உண்மை பிறழாமல் இருப்பதற்காக இறைவன் பெயரால் கூறும் ஆணையுறுதி (Oath) என்னும் கட்டுப்பாட்டைச் சட்டத்தில் வகுத்துள்ளனர். அதனால், ஆணையுறுதி செய்து சான்று கூறினால் அச்சான்று உண்மை என்றே கொள்ளப்படும். ஆணையுறுதி செய்பவர் இறைவனுக்குப் பயந்து உண்மை கூறுவார் என்பது இதன் கருத்து. இந்த ஆணையுறுதி முறையானது இறைவன் உண்மையில் நம்பிக்கை ஏற்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஒருவனை உண்மை கூறும்படி செய்வதற்கு அனைத்துச் சமயங்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றன.

நீதிமன்றத்தில் காணும் இத்தகைய ஆணையுறுதி ஒன்று, மற்றொன்று அரசாங்கத்தில் சில குறிப்பிட்ட உயர் பணிகளை ஏற்பவர் தாம் அதை முறையாக நிருவகிப்பதாக ஏற்கும்போது கூறும் உறுதிமொழியாகும். நீதிமன்றங்களில் வாங்கும் ஆணையுறுதி கி.பி. 1873-ஆம் ஆண்டு இயற்றிய இந்திய ஆணையுறுதிச் சட்டத்தின்படி (Indian Oaths Act of 1873) நடைபெறும். மற்ற ஆணையுறுதி அதனை வகுக்கும் ஆவணத்திலே குறிக்கப்பட்டிருக்கும். ஆணையுறுதி என்பதன் இலக்கணம், கி.பி. 1897 ஆம் ஆண்டு பொது வகை முறைகள் சட்டத்தில் (General Clauses Act of 1897) வரையறுக்கப்பட்டுள்ளன.

இறைவன் பேரில் உறுதி கூறாமல் (Swearing) உறுதி செய்யவோ (Affirmation) சான்றுரைக்கவோ (Declaration) சட்டம் அனுமதித்தால், அந்த உறுதிமொழியும் சான்றுரையும் ஆணையுறுதியில் அடங்கும். இவர்கள் இறைவன் பேரால் ஆணையிட்டதாகக் கொள்ளப்படும் (பிரிவு 3. உட்பிரிவு 36). ஆனால், இதை ஆணையுறுதியின் இலக்கணம் என்று கூற முடியாது.

ஆங்கில நாட்டுச் சட்டக் கலைக்களஞ்சியம், ஆணையுறுதி என்பது, ஒருவர் கூறும் சான்று இறைவன் சாட்சியாக உண்மை என்று, சான்று கேட்க அதிகாரம் பெற்றவர் முன்னிலையில் கூறுவதாகும் என்று ஆணையுறுதிக்கு இலக்கணம் கூறுகிறது.

ஆணையுறுதி செய்வதில் காலம், களன் ஆகிய இவற்றிற்கேற்பவும், மக்களின் எண்ணங்களுக்கேற்பவும் பல படிகள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொய்ச்சாட்சி கூறினால் இறைவனின் கோபத்திற்குள்ளாக வேண்டுமென்று ஆதிக்கொள்கை வெளிப்படையாகக் கூறவில்லை. இறைவனையும் அவர்தம் தண்டனையைவும் பயன்படுத்தியது ஆணையுறுதி செய்வதில் மற்றும் ஒருபடி முன்னேற்றமாகும். இயற்கையை வழிபட்ட காலத்திலே மனிதன் சூரியன், சந்திரன், ஆறு ஆகியவற்றை நோக்கி ஆணையுறுதி செய்துவந்தான். கங்கை நீரைக் கையிலேந்தியோ, கற்பூரத்தைக் கொளுத்தியோ அவித்தோ சூளுரைப் பதை இன்றும் இந்துக்கள் ஆணையுறுதியாகக் கொண்டுளர். இவையெல்லாம் மனிதன் இயற்கையை முன்னிறுத்திச் சூள் எடுத்துக்கொண்டான் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மிகப் பழங்காலத்தில் மக்கள் தங்களிடம் இருந்த வாள், போர்க் கருவிகள், பொருள் ஆகியவற்றை வைத்தும் ஆணையுறுதி செய்தனர். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் (புறம். 71), தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (புறம். 72), சோழன் நலங்கிள்ளி (புறம். 71) ஆகியோர் பாடலிலும் குளுரை காணப்படுகிறது. இறைவனை மனித உருவத்தில் கற்பனை செய்தது ஆணையுறுதி செய்வதில் மற்றும் ஒருபடி முன்னேற்றமாகும். பொய்ச்சாட்சி கூறினால் அல்லது பொய் ஆணையுறுதி செய்தால் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் இறைவனின் தண்டனைக்குத் தப்ப முடியாது. என்ற நம்பிக்கை உண்டாயிற்று. ஆனால், இக்காலத்தில் இறைவனை முன்னிறுத்தி ஆணையிட மறுப்போர் உறுதிமொழி கூறலாம். என்று ஏற்பட்டுள்ளது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். எதைப் பின்பற்றினாலும் பொய்க்கரி (பொய்ச்சத்தியம்) கூறுவோர்க்குச் சட்டம் தண்டனை விதிக்கிறது.

‘சத்தியம் செய்யாதே’ (மத்தேயு 5:34) என்பது இயேசுவின் கட்டளை. ஆகவே கிறித்தவச் சமயச் சார்பின்படி ஆணையுறுதி செய்வதில் நீண்ட நாட்களாகவே கருத்து மாறுபாடு இருந்து வந்தது. ஆனால், பேச்சுவழக்கில் ஒருவித ஆணையுறுதி