ஆணையுறுதி
379
ஆணையுறுதி
இருந்து வந்தது. இந்துச் சட்டம் சான்றுரைப்போரைக் கட்டுப்படுத்தி வந்தது. பண்டைய இந்துச் சட்டத்தில் நான்கு வருணத்திற்கும் நான்கு வகையான குளுரைப்புகள் வருக்கப்பட்டன. முகம்மதியர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய பிறகு இவை வழக்கொழிந்தன. ஐயத்திற்கிடமான வழக்குகளில் மனிதச் சான்று கிடைக்காத போது தெய்வர் சான்று (Trial by Ordeal) தேவைப்பட்டது. இது புறநடை; பொது வழக்கன்று.
இப்போது இந்திய நீதிமன்றங்களில் கி.பி. 1873-ஆம் ஆண்டு இந்திய ஆணையுறுதிச் சட்டப்படியே ஆணையுறுதி செய்யப்படுகிறது.
ஆணையுறுதி என்பது உண்மை கூறுதலாகும்; ‘உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலுமாம்’. நீதிமன்றங்கள் முறையாக நீதி செலுத்துவதற்கும் அனைத்து வழக்குகளிலும் நேர்மையான தீர்ப்புகள் வழங்குவதற்கும் சாட்சிகளின் சான்றுகளைச் சட்டமுறைப்படி ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் ஆணையுறுதி மிகவும் பயன்படுகிறது. இதைப் பற்றி, 1969-ஆம் ஆண்டு இந்திய ஆணையுறுதிகள் பற்றிய சட்டம் விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.
ஆணையுறுதிகள் சட்டத்தின் 3-ஆம் பிரிவு, ஆணையுறுதிகளை வழங்குவதற்கு அதிகாரமளிக்கும் பிரிவாகும். அப்பிரிவின்படி அனைத்து நீதிமன்றங்களும் சட்டத்தின் மூலமாகவோ தரப்பினர்களின் இசைவின்படியோ சாட்சியத்தை எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையன, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகத் தாக்கல் செய்யப்படுகிற ஆணையுறுதிகளுக்கு எந்த நீதிமன்றமும் அல்லது நடுவர் எவரும் ஆணையுறுதியை வழங்கலாம். நீதிமன்ற நடவடிக்கைகள் அல்லாதவற்றிற்கு மாநில அரசு ஆணையுறுதியை வழங்கலாம்.
இச்சட்டத்தின் 4-ஆம் பிரிவு சிறப்புப் பிரிவாகும். இப்பிரிவு, சாட்சிகள், மொழி பெயர்ப்பாளர்கள், சான்றாயர்கள் ஆகியோர் ஆணையுறுதியை எடுத்துக்கொள்வதன் இன்றியமையாமையைப் பற்றிக் கூறுகிறது. இப்பிரிவின்படி (1) நீதிமன்றம் முன்பாக சட்டப்படி விசாரிக்கப்படத்தக்கவர்கள் அல்லது சாட்சியம் அளிப்பதற்கு வேண்டுபவர்கள் அல்லது சட்டத்தின் வழியாக அல்லது தரப்பினர்களின் இசைவின் பேரில் அத்தகைய ஆட்களை விசாரணை செய்யவோ அல்லது சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ளவோ தகுதியுடையவர்கள், (2) சாட்சிகளுக்கு அல்லது அவர்களிடமிருந்து, கேள்விகள் கேட்டு அவற்றின் மீது சாட்சியம் பெற்றுக்கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்கள், (3) சான்றாயர்கள் ஆகியோர் அனைவரும் கட்டாயமாக இந்த ஆணையுறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இருபது வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, நீதிமன்றம், அச்சிறுவர்கள் உண்மையைக் கூறுவதன் இன்றியமையாமையை உணர்ந்து கொண்டிருந்தாலும், அந்த ஆணையுறுதியின் தன்மையைப் பற்றி நன்றாக உணரக்கூடிய நிலையில் இல்லை எனக் கருதுமானால், அச்சிறுவர்கள் இந்த ஆணையுறுதியைச் செய்ய வேண்டிய தேவையில்லை என மேற்கூறிய பிரிவு கூறுகிறது.
ஆணையுறுதியின் படிவத்தைப் பற்றிப் பிரிவு 6 கூறுகிறது. ஆணையுறுதி வழக்கின் குழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அச்சட்டத்தின் இணைப்புப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள படிவங்களில் ஏதேனுமொன்றின்படி, நீதிமன்ற நடவடிக்கை எதிலும், எவரேனும் தாம் சார்ந்துள்ள பிரிவைச் சார்ந்துள்ளவர்களுக்கிடையே நடைமுறையில் பொதுவாக அனைவராலும் பின்பற்றப்பட்டு, அவர்கள் கட்டுப்பட்டுள்ளதாகக் கருதும் ஆணையுறுதி ஏதேனுமிருந்து, அவ்வாணையுறுதியானது நீதிக்கு அல்லது பண்பு நலத்திற்கு முரணாக இல்லாமலிருந்து, அது பிறரைத் தாக்காத வகையில் அமையுமானால், அந்த மனிதர் அந்த ஆணையுறுதியின் பேரில் சாட்சியம் கூற விரும்பினால், நீதிமன்றம் அந்த ஆணையுறுதியின் பேரிலேயே சாட்சியம் கூற அனுமதிக்கலாம். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் நீங்கலாக மற்றைய அனைத்து நீதிமன்றங்கள் முன்பாக எடுக்கப்படும் ஆணையுறுதிகள் எல்லாம், அந்த நீதி மன்றங்களின் நடுவர்களால் தான் வழங்கப்பட வேண்டும் என அப்பிரிவு கூறுகிறது.
இந்த ஆணையுறுதி கடவுளின் பேராலேயோ உளமார்ந்த மனவுறுதியின் பேராலேயோ எடுக்கப்படுகிறது. அச்சட்டத்தின் இணைப்புப் பட்டியலில் உள்ள படிவத்தின்படி இந்த ஆணையுறுதி கீழ்வருமாறு எடுக்கப்படுகிறது:
“நான் சொல்வதெல்லாம் உண்மையேயென்றும், முழுக்க முழுக்க உண்மையே என்றும் உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் கடவுளின்பேரில் உளமார்ந்த உறுதியாக ஆணையிட்டுக் கூறுகிறேன்”.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மைய அரசு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநில உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகள் ஆகிய அனைவரும் தத்தம் பதவிகளை ஏற்பதற்கு முன்னர் ஆணை-