உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்திரலோபிதிகசு

382

ஆத்திரலோபிதிகசு



ஆத்திரலோபிதிகசு

கை, கால் எலும்புகள் ஆகியவற்றைப் தார்ட்டு திரான்சுவால் பகுதியில் அமைந்த கண்ணாம்புப் பாறைப் படிவங்களிலிருந்து கண்டெடுத்தார். பிறகு டாக்டர் திருமதி இலீக்கி என்பவர் தங்கனீகாவில், ஓல்டுவாய் (Olduvai) என்னுமிடத்திலிருந்து முழு மண்டை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். இம்மண்டை ஓடுகள் அனைத்தும் “ஆத்திரலோபிதிகசு” தொகுதியைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டன. ஆனால், அவை பிளிசியான்த்ரோபசு, பாரான்த்ரேசபசு (Paranthropus), தெலந்த்ரோபசு (Telanthropus), சின்சான்த்ரோபசு (Zinjanthropus) ஆகிய பேரினங்களினுடையவை எனப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அம்மண்டை ஓடுகளனைத்தையும் பற்றி அவை ஒரு பேரினத்தைச் சேர்ந்த பல இன மனிதக் குரங்குகளினுடையவை என்றும், ஒரு சிறப்பினத்தைச் சேர்ந்த பல வகை மனிதக் குரங்குகளினுடையவை என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவின. பிறகு அம்மண்டையோடுகளனைத்தும் துணைக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதக் குரங்குகளினுடையவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அற்றுப்போன அம்மனிதக் குரங்குகளின் மண்டையோடுகளை ஒப்பு நோக்கிப் பார்த்தபோது அவையனைத்தும் பிளிசுடோசின் (Pleistocene) காலத்தின் முற்பகுதியில் அதாவது ஒரு மிலியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தனவாகக் குறிப்பிடப்பட்டது. ஓல்டுவாய் மண்டை ஓட்டின் காலம் ஏறக்குறைய 2 மிலியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணக்கிடப்பட்டது. எனவே “ஆத்திரலோபிதிசினே” (Australopithecinae) தொகுதியைச் சேர்ந்த மனிதக் குரங்குகள், முதன் முதலில் பிளியோசீன் காலத்தில் வாழ்ந்த “இராமாபிதிகசு” (Ramapithecus) மூதாதையர்களிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றிப் பிறகு திரான்சுவால் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆத்திரலோபிதிகசின் பொதுப் பண்புகளாகச் சிலவற்றைச் சுட்டலாம். இக்குடும்பத்தைச் சேர்ந்த மனிதக் குரங்குகளின் மூளையின் கன அளவு 600 க.செ.மீ. ஆகும். இது மனித மூளையில் அரை மடங்கு அளவேயாகும்.

இக்கால மனிதக் குரங்குகளுக்கு மண்டை ஓட்டில் இந்த நீள்வரை மேட்டுடன் கழுத்துத் தசைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்திரலோபிதிகசின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதக் குரங்குகளுக்கு மண்டை ஒட்டில் இந்த நிள்வரை மேடு மிகவும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு மிகப் பழமையான கற்படியுருவ மனித மண்டை ஓடுகளில் காணப்பட்டது.

மேலும் கன்ன எலும்பமைப்பு, கீழ்த்தாடை எலும்புகளுடன் மண்டை ஓட்டின் கீழ்ப்பகுதி இணைப்பின் அமைப்பு, சில மண்டை ஓட்டு எலும்புகளின் இணைப்பு ஆகியன, மனிதக் குரங்குகளின் மண்டை ஓடுகளில் உள்ளன போன்றில்லாமல் மனித மண்டை ஓட்டின் அமைப்பை ஒத்திருந்தன.

வெட்டும் பற்கள் மிகச் சிறியனவாகக் காணப்பட்டன. கோரைப் பற்கள் மனிதனின் கோரைப் பற்களைவிடப் பெரியனவாகவும் வலிமையானவையாகவும் அமைந்திருந்தன. ஆனால், அவை மனிதக் குரங்குகளுக்கு உள்ளன போன்று கூர்மையாக நீண்டிராமல், மனிதனின் கோரைப் பல்லைப் போன்றே தட்டையாக இருந்தன. தென்னாப்பிரிக்கக் கற்படியுருவ மண்டை ஓடுகளில் காணப்பட்ட பால் பற்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தனவாகும். பால் கோரைப் பற்கள் கற்கால மனிதக் குரங்குகளின் பற்களைவிட மிகச் சிறியனவாக இருந்தன. மேலும் முதல் பால் கடைவாய்ப் பல் மனிதனின் பால் கடை வாய்ப் பல்லைப் போன்றிருந்தது. பற்களமைப்பில் குறிப்பிடத்தக்க மற்றொரு கூறு, அதன் எல்லாப் பற்களும் மனிதப் பற்களைப் போன்று இரு தாடைகளிலும் ஒழுங்காக இலாட வடிவான அமைப்பில் அமைந்திருந்தமையாகும். எனவே, ஆத்திரலோபிதிகசின் பற்களமைப்பு மனிதக் குரங்குகளின் பற்களமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது.

மேலும் மனிதக் குரங்குகளின் இடுப்பெலும்-