ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்
386
ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்
நிறைவு செய்யும் ஆற்றலிலும் மதிப்பு அடங்குகிறது. சமுதாயம் உயர்ந்த பொருளாதார முன்னேற்றக் கட்டத்தை அடையும்போது, பணமும் பரிமாற்றமும் இல்லாமல் அடையும் மதிப்பு ‘இயற்கை மதிப்பு’ என்றார். உள்ளார்ந்த மதிப்புக் கோட்பாடு என்பதை (Law of Imputation value) விளக்கும் போது, ஆக்கக் காரணிகளான நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட தேவையும் அளிப்பும் இயற்கையாகவும் உடைமையாகவும் உள்ளன என்றும், அதுவே உள்மதிப்பு என்றும் விளக்கியிருக்கிறார். ஆக்கக் காரணிகளிலிருந்து இறுதிநிலைக்கு மதிப்பு தொடர்ந்து செல்கிறது, மிகக் குறைந்த உள்ளார்ந்த மதிப்பு, எல்லாத் தனி ஆக்கக் காரணிகளுடைய அலகுகளின் மூலமாகவும் பொருளாதார ஆக்கத்தில் பங்கு பெறுகிறது. உள்ளார்ந்த மதிப்பு, இறுதிநிலை விதியின் அடிப்படையில்தான் உள்ளது. மதிப்பு, கடைசி அலகை இழந்து விடாமல் அதனை வைத்துக் கொள்வதால் பெறும் பயன்பாட்டினால் முடிவு செய்யப்படுகிறது. செலவு (Cost) மதிப்பை முடிவு செய்ய முனைந்தாலும், பயன்பாட்டிற்கு அது அடிமைப்பட்டதே. இவர் உற்பத்திச் செலவையும் பயன்பாட்டு அடிப்படையிலேயே ஆராய்ந்தார். மனிதன் பெறும் பயன்பாடே மதிப்பைக் கணக்கிட முனைகிறது. செலவை மதிப்புக்கு அடிமையாகவே கருதி, உருவான கோட்பாடுகளே ஆசுத்திரியக் கோட்பாட்டின் சிறப்புக் கூறாகும்.
வீசரின் இறுதிநிலைப் பகுப்பாய்வு சமத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் பொருந்தும். இறுதிநிலை இயல், முதலாளித்துலத்தை வெளிப்படையாக வரவேற்கவோ ஆதரிக்கவோ இல்லை. வீசர், பொருளாதாரத்தில் அரசின் பங்கைப் பெரிதும் வரவேற்று, அரசின் தலையீடு தேவை எனவும் கூறியுள்ளார். மனிதத் தேவைகளை மட்டும் நிறைவு செய்யாமல் பாதுகாப்பிற்காகவும் சமூக ஆக்க நலன்களின் வனர்ச்சிக்காகவும் பாடுபடுவது அரசின் குறிக்கோளாயிருக்க வேண்டும். பொருளாதார நாட்டுடைமையையும் பாதுகாப்பையும் ஆதரித்து, வளர்ந்துசெல் வரி விதிப்பை (Progressive Taxation) எதிர்த்தார்.
போகம் பீவார்க்கு தமக்கு முன் வந்த ஆசுத்திரியப் பொருளாதாரக் கருத்துகளை ஆழமாக ஆராய்ந்து, அவற்றைத் தெளிவுபடுத்தினார். கருத்தியல் ஆராய்ச்சி முறையையே இவரும் பின்பற்றினார். மூலதனம், இயற்கைக்கும் உழைப்புக்கும் இடைப்பட்டது. சேமிப்புக்கும் மூலதன ஆக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நுகர் பொருள் உற்பத்தியின் பல கட்டங்களின் வழிமுறைகளினால் விளையும் பலனே மூலதனம். மூலதனப் பொருள்கள் வருங்காலப் பண்டங்கள். முதலீட்டின் மதிப்பு, 1. தேவைகளின் வகைகள், வேறுபாடுகள், இக்கால பிற்காலத் தேவைக்கேற்றபடி அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், 2. வருங்காலத்தைக் குறைவாக மதிப்பீடு செய்தல், 3. இக்காலப் பொருள்களின் நுட்பப் பயன் ஆற்றல் ஆகிய மூன்று காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
விலை வரையறுத்தலுக்கு இறுதிநிலை இணைகள் (Marginal Pairs) என்ற கருத்தை வெளியிட்டார். தனிப்பட்ட பரிமாற்ற விலை, வாங்குபவரின் அகவய மதிப்பீட்டின்படி முடிவு செய்யப்படும். உயர்ந்த நிலைக்கும் விற்பவரின் அகவய முடிவின்படி எழும் குறைந்த மதிப்பீட்டின் நிலைக்கும் நடுவில் முடிவு செய்யப்படும். ஒருவயப்பட்ட போட்டிகளுள்ளா (One Sided Competition) வாங்குவோர் அங்காடியில், வாங்குவோரின் அகவய மதிப்பீட்டிற்கும், வாங்க முயன்று கைவிட்ட போட்டியாளரின் அகவய மதிப்பீட்டிற்கும் இடையில் முடிவு செய்யப்படும். அங்காடியில் பங்குபெறும் வாங்குவோர், விற்போர் நடுவில் இரண்டு வாங்குபவர்களும் இரண்டு விற்பனையாளரும் விலையை முடிவு செய்கின்றனர். எனவே, ஓர் இணையில் (In one pair) விற்பவன் கூறும் விலையில் வாங்குபவன் வாங்க இணங்குகின்றான். அடுத்த இணையில், விற்பவனின் விலைக்கு வாங்குபவன் வாங்க மறுக்கிறான். எனவே, இணைகளின் இரண்டு விலைகளுக்கும் அகவய இறுதிநிலை மதிப்பீட்டின்படி விலை முடிவு செய்யப்படுகிறது.
வட்டிவீதம், பேரியற் பொருளியல் முறையில் (Macro Economies) முழு அங்காடிக்கும், 1. குறைந்த அளவு நிதி அளிப்பு, 2. உழைப்பின் அளவு, 3. தொழில் நுட்ப அறிவினால் பெறும் ஆக்கத்திறன் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு, முடிவு செய்யப்படும். குறைந்த அளவு நிதி அளிப்பு மிகுதியாயிருந்தால் வட்டிவீதம் குறைவாயிருக்கும். உழைப்பும் ஆக்கத் திறனும் மிகுதியாயிருந்தால் வட்டிவீதம் மிகுதியாக இருக்கும்.
ஆத்திரியப் பொருளியல் வல்லுநர்கள், மதிப்புக் கோட்பாடுகளுக்குச் சிறப்பிடம் வழங்கி, சிறந்த மதிப்புக் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளார்கள். அதுவே அவர்களின் பெயர் நிலைத்து நிற்கப் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. இவர்களின் தன்னல முடிவு அணுகுமுறையைப் பின் வந்த பொருளியல் வாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பரவலாகத் தலை தூக்கிய அகவய உணர்வும் கருத்தியல் ஆய்வு முறையும் பகுத்தறி முறையில் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளும் உளவியல் சார்ந்தவையாக உள்ளமையால் அவை, அறிவியல் முறையில் அளவிடவும் ஒப்பிட்டு ஆயவும் இயலாதவை என்பது, பெருங்குறையாகச்-