உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்திரையன் பேராசிரியன்

387

ஆதம்கான் கல்லறை

சுட்டிக் காட்டப்படுகிறது. இறுதிநிலைப் பயன்பாட்டு விதிக்கும் முழுமையான வடிவம் வழங்கப்பட்டு, அதற்கான பொருள் விளக்கமும் பிற்பட்ட காலத்தில்தான் வெளிவந்தது. பயன்பாடு என்பது ஓர் அகவய உணர்வுதான். அதனைப் பொருளியலில் செயற்படுத்த இடர்ப்பாடுகள் உள்ளன. எனினும், விருப்பங்களையும் மனநிறைவுகளையும் அளவிடும் கருவியாகப் பணத்தைப் பயன்படுத்திப் பிற்காலக் கோட்பாடுகள் வளர ஆத்திரியக் கருத்துகள் அடிப்படையாயிருந்தன. தொன்மைப் பொருளியலாளர்களின் கருத்துகளுடன் ஆத்திரியப் பொருளியல் கோட்பாடுகள் ஒப்பிடப்பட்டு, அதன் விளைவாக வந்த ஆராய்ச்சி முடிவுகள், புதிய தொன்மைப் பொருளியலாக (New-Classical Economics) உருவாயின. பொருளியலின் வளர்ச்சிக்கு ஆக்கத் தூண்டு கோலாக விளங்கிய செறிந்த கருத்துத் தொகுப்பு ஆத்திரியப் பொருளியல் வல்லுநர்களின் படைப்பு என்று கூறினால், அது மிகையாகாது.

ஆத்திரையன் பேராசிரியன் கி.பி. 10-ஆம் நூற்றாண்டினராகக் கருதப் பெறும் தமிழ் உரையாசிரியர். பேராசிரியர் என்னும் பெயரில் காணப்படுவோர் அனைவரும் தமிழ் இலக்கண அல்லது இலக்கிய உரையாசிரியர்களாவே உள்ளனர். இவர் பெயரிலுள்ள ஆத்திரையன் என்பது இவர் பிறந்த கோத்திரத்தைக் குறிப்பதாகும். அத்திரி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆத்திரேயர் என்று அழைக்கப்படுவர். தமிழில் பேராசிரியர் என அறியப்படுபவர்களுள் இவர் காலத்தால் முற்பட்டவராவார். இவர் தொல்காப்பியத்திற்குப் பொதுப்பாயிரம் செய்துள்ளார் என்பது தெரிகிறது. ‘வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும்’ எனத் தொடங்கும் 33 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவே இப்பொதுப்பாயிரம். இதற்கு இவ்வாசிரியரே உரை செய்துள்ளார் என்பது கூறப்படுகிறது. தொல்காப்பிய உரையாளருள் ஒருவராகத் திகழும் பேராசிரியர் மரபியல் நூற்பா உரையில் ‘வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன்’ என எழுதுவதால், இவ்வாசிரியர் அவரின் வேறாவார் எனத் தெரிகிறது. நன்னூற் சங்கர நமச்சிவாயர் உரையைத் திருத்தி அமைத்த சிவஞான சுவாமிகள், தம் விருத்தியுரை நூலில் இவரியற்றிய பொதுப்பாயிரத்தைத் தந்து, அதன் ஆசிரியர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இப்பொதுப்பாயிரம் இளம்பூரணருக்கு முன்னர்த் தோன்றியதாகத் தெரிவதால் ஆத்திரையன் பேராசிரியன் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டாதல் கூடும் என்றும், இப்பொதுப்பாயிரத்தின் உரை, தமிழில் முதற்கண் அமைந்துள்ள சில உரைகளுள் ஒன்று என்றும் திரு மு. அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். இவரியற்றிய பொதுப்பாயிரத்தில் நல்லாசிரியர் நன்மாணாக்கர் ஆகியோர்க்குரிய இலக்கணங்கள் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

ஆத்தூர் சேலம் மாவட்டத்தில், சேலத்திலிருந்து நேர்கிழக்கே 51 கி.மீ. தொலைவில் அமைத்துள்ள நகரம். சேலம்-விருத்தாசலம் இருப்புப் பாதையில் உள்ளது. முற்காலத்தில் இது அனந்திகிரி எனப்பட்டது, இதன் இடையில் ஆறு ஒடுவதால் ஆற்றூர் என்று கூறப்பட்டது. ஆற்றூர் ஆத்தூர் என மருவியது. ஆற்றின் வடக்கே கோட்டை ஒன்றுள்ளது. நன்செய்ச் சாகுபடி மிகுதியாக அமைந்த ஊர். ஆத்தூர்க் கிச்சிலிச் சம்பா புகழ்பெற்ற அரிசி வகை, இங்கு அரசினர் கல்லூரி ஒன்றும் உள்ளது.

ஆத்மநாத தேசிகர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; வேளூர் என்னும் ஊரில் காளையர் குலத்தில் தோன்றியவர். இவர் வேளூர்க் கருகிலுள்ள சித்தாமூரில் வாழ்ந்த அருணாசல வேளின் விருப்பத்திற் கிணங்கிச் சோழ மண்டல சதகம் என்னும் நூலினை இயற்றியருளினார். இந்நூல், பாடப்பெற்றோர் வரலாறு முதலிய குறிப்புகளுடன் கி.பி. 1916-ஆம் ஆண்டில், இலக்கண விளக்கப் பரம்பரை திருவாரூர்ச் சோமசுந்தர தேசிகரால் பதிப்பிக்கப்பெற்றது.

ஆத்ரு இராசபுதனத்தில் உள்ள ஓர் ஊர், பழமை மிக்க அழிந்த நிலையில் உள்ள கோயில்கள் பல இவ்வூரில் உள்ளன. இங்குள்ள கோயில்களில் கட்கசு-கா-மந்திர் (Gadgach-ka-mandir) சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயிலின் அருகில் புத்தசாகர் என்னும் குளம் உள்ளது. இக்கோயில் அழிந்துபட்ட நிலையில் இருப்பினும் கோயிலின் தூண்களிலும் அடிப்பகுதியிலும் கட்டிடக் கலையின் சிறப்பியல்புகள் பொருந்தி உள்ளன. சிற்பங்களில் பார்வதிச் சிற்பம் அழகுடன் உள்ளது. இக்கோயில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலின் தூண்கள் சிலவற்றில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. சுண்ணாம்பும் மணலும் சார்ந்த கலவை இல்லாமல் கருங்கற்களை அடுக்கி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வேறு இரண்டு அழிந்த நிலையில் உள்ள சமணக் கோயில்களும் உள்ளன. பார்கவ நாதரின் சிற்பம் ஒன்றும், மகாவீரரின் சிலை ஒன்றும் இங்கு உள்ளன.

ஆதம்கான் கல்லறை குதுப்மினார் மெகராலி சாலையில் உள்ள கல்லறை. ஆதம்கான் அக்பரின் படையில் தளபதியாகவும் பிரபு ஆகவும் இருந்தவர். அக்பருக்குச் செவிலித் தாயாக இருந்த மாகம் அனாகா என்ற பெண்மணியின் மகனாவார். ஆதம்-