உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதம்சன் கல்விக் கருத்துகள்

388

ஆதம்சன் கல்விக் கருத்துகள்

கான் கி.பி. 1562-ஆம் ஆண்டு அட்காகான் என்பவரோடு சண்டையிட்டு அவரைக் கொலை செய்ததன் விளைவாக அக்பர் இவரை ஆக்ராக் கோட்டை மதிலின் மேலிருந்த உயர்ந்த மேடையிலிருந்து கீழே தூக்கி எறியக் கட்டளை இட்டார். இதனால் ஆதம்கான் இறந்தார். மகன் இறந்த கவலையால் தாயும் நாளடைவில் இறந்தார். இவர்கள் இருவரையும் இக்கல்லறையில் புதைக்க அக்பர் ஆவன செய்தார். இலால்கோட்டுச் சுவர்களுக்கு அருகில் உயர்ந்த முகப்பு மேடையுடன் இக்கல்லறை காணப்படுகிறது. எட்டுப் பக்கங்களுடைய சுவர்களினால் இது சூழப்பட்டு ஒவ்வொரு மூலையிலும் உயரமில்லாத சிகரத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சிகரமும் கவிகை மாடத்தினைக் கொண்டு எட்டுப் பக்கங்கள் உடையதாகவும் உள்ளது. இது இசுலாமியர் கட்டிடக் கலைப் பாணியில் ‘உலோடி’ வகையைச் சேர்ந்ததாகும். இக்கல்லறை தாழ்வாரத்துடன் மூன்று பக்கம் திறந்த நிலையிலும் கைப்பிடிச் சுவர்களுக்குக் கீழ் அமைக்கப்படும் இறவாணம் (Eaves) இல்லாமலும் காட்சி அளிக்கிறது. இதனுள்ளே செல்லச் சிக்கலான அமைப்புடன் கூடிய வழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆதம்சன் கல்விக் கருத்துகள்: ஆதம் சன் என்பவர் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டில் வாழ்ந்த கல்வியாளர், இவர்தம் கல்விக் கருத்துகள், பொதுவாகக் கருத்துக் கொள்கை (Idealism) எனப்படும் தத்துவப் பிரிவினைச் சார்ந்தவை. இவர்தம் கல்விக் கொள்கையில் கல்வி என்பது, கற்போருக்கும் சூழ்நிலைக்கும் இடையேயுள்ள ஒரு பொருத்தப்பாடாகக் கருதப்படுகிறது. இப்பொருத்தப்பாட்டிற்குத் துணைபுரியும் ஒரு கூறாகவே பள்ளி ஆசிரியர் கருதப்படுகிறார். சூழ்நிலை வெறும் பூத உலகு மட்டுமன்று. மனிதருக்கிடையேயுள்ள தொடர்புகளும் ஒருவன் பொருத்திக்கொள்ள வேண்டிய உண்டாக்கிக் கொள்ள வேண்டிய விழுப் பொருள்களும் சூழ்நிலையின் நுட்பக் கூறுகளாகும்.

தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் குழ்நிலையுடன் தொடர்பு கொண்டு, அதன் இயல்புகளைப் புரிந்துகொண்டு, அதனுடன் பொருந்தி வாழ்தலுக்காகத் தேவைப்படும் அறிவு, திறன்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றைக் குழந்தை வளர்த்துக் கொள்வதே கல்வியின் நோக்கமாகும் என ஆதம்சன் (Adamson) குறிப்பிடுகிறார். கல்வி, பொருத்தப் பாட்டினைத் தோற்றுவிக்கும் ஒரு செயலாகும், உயிர் வாழ்தலுக்குச் சூழ்நிலையுடன் பொருந்திச் செயற்படுதல் துணையாகும் என்று இசுபென்சர் போன்றோர் கூறியதை விரித்து, கல்வி ஓர் உயர்நிலைப் பொருத்தப்பாடு (Superior Adjustment) என்று ஆர்ன் (Horne) கூறினார்.

இவ்வுயர்நிலைப் பொருத்தப்பாட்டில் ஆசிரியரது பங்கு யாது என்னும் வினாவிற்கு, ஆதம்சன் அணிக்கும் விடை குறிப்பிடத்தக்கது. கற்றல் எனப்படுவது, கற்கும் குழந்தைக்கும் சூழ்ந்திருக்கும் உலகிற்குமிடையே எழும் இடைவினை (Interaction) விளைவாக எழும் அனுபலமாகும். இது ஒரு மறை பொருள் தன்மையுற்ற இணைப்புச் செயலாகும் (Mysterious Synthetic Activity). பொதுவான வாழ்க்கையில் நிகழ்வதைவிட, பள்ளி எனப்படும் கனனில் இத்தொடர்பும் இடைவினையும் பரவலாகவும், ஆழமும் செறிவும் உள்ளனவாகவும் உயர்த்தப்படுகின்றன. அடிப்படையில் கல்விச் செயலானது கற்போன், அவன் தொடர்புகொள்ளும் சூழ்நிலை ஆகியவற்றைச் சார்ந்தே அமைவதால், இதில் ஆசிரியருக்கு நேரடியாக எந்தப் பங்கும் பொறுப்பும் இல்லை என்கிறார் ஆதம்சன்.

கல்விச் செயல்முறையில் ஆசிரியருக்கு மறைமுகப் பங்கு உள்ளது என்பதனையும் ஆதம்சன் தெளிவுபடுத்தி, இதனை விளக்கக் கல்வி பற்றிய மும்முனைக் கொள்கையினை (Tripolar Theory) வகுத்துள்ளார். கற்போன், குழ்நிலையுலகம், ஆசிரியர் ஆகிய மூன்று முனைகளால் கல்விச் செயல் அமைகிறது. ஆசிரியர் பங்கு, வேதியியல் இடைவினைகளில் வினையூக்கிப் பொருள்களைப் போன்றது. இடை வினையில் நேரடிப் பங்கு பெறாமல், இடைவினை நன்கு நிகழத் துணைபுரிவது ஆசிரியரது பொறுப்பாகிறது. கற்போனும் சூழ்நிலையும் ஊடாடி ஒருங்கிணைந்து, ஒன்றின் பாங்கு ஒன்றாகிப் புதியன தோற்றுவிக்கும் மறைபொருள் தன்மையுள்ள கல்விச் செயலில் ஆசிரியருக்கு நேரடிப் பங்கும் பாகமும் இல்லையெனினும், இவர் கற்போனையும், சூழ்நிலையையும் நன்கு அறிந்திருந்தால், இவ்விரு முனைகளையும் அவற்றில் சிறப்புக் கூறுகளையும் மாறி மாறித் தனித்தோ சேர்த்தோ சுட்டியும் ஊக்கியும் கல்விச் செயல் நடக்கத் துணைபுரிதல் கூடும்.

ஆதம்சனின் கல்விச் சூழ்நிவைப் பகுப்பாய்வு குறிப்பிடத்தக்கது. சூழ்நிலையானது இயற்கை உலகு (World of Nature), சமூக உலகு (World of Men), விழுப்பொருள் உலகு (World of Values) என முப்பாற்படும். இவற்றுள், இயற்கை உலகு புறம்பே உள்ளது; மனிதனுக்கு முன்பே நிலைபெற்றது; பலவகைப் பண்புகளைக் கொண்ட புலன் நுகரும் பருப் பொருள்களால் ஆனது; காரண-காரிய அடிப்படையில் அமைந்தது; என்றும் மாறாத அறிவியல் விதிகளுக்கு உட்பட்டது; விதிவிலக்கிற்கு இடம் கொடுக்காதது. புற ஆய்வின் வழி இவ்வுலன் தன்மையினை உணர்ந்து இதனுடன் பொருந்திப் போதல் இயலும். பல்வேறு அறிவியற் பாடங்கள் இதற்கு