உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதம்சன் கல்விக் கருத்துகள்

389

ஆதம்சன் கல்விக் கருத்துகள்

உதவுகின்றன. இயற்கையுலகினைத் தாமே ஆராய்ந்துணர உதவும் அறிவியல் மனப்பான்மையும் ஆராய்ச்சி முறைகளும் மாணாக்கர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

சமூக உலகானது, மனித வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உண்டாக்குகிறது. இது மனிதருக்கிடையேயுள்ள இடைவினையை அடிப்படையாகக் கொண்டது. மொழி இவ்வுலலின் நிலைத்தன்மைக்கு உதவுகிறது. சமூகத்தின் முன்னைய திரண்ட அனுபவங்களாலும் கூட்டலுபவங்களாலும் உண்டான சமூக விதிகள் இவ்வுலகை நிலை நிறுத்துகின்றன. ஆனால் இவ்விதிகள் மனிதனுக்கு முற்பட்டவையல்ல: மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இயற்கை விதிகளைப் போல் இவை மாறாதவையுமல்ல. இவற்றின் நடைமுறையில் சில நீக்குப் போக்குகளும் நெகிழ்வும் பிறழ்வும் கூட உண்டு. இவை மனிதனால் மாற்றப்படக் கூடியவை. இவ்வுலகுடன் பொருந்தில் செயற்படக் கல்வி துணைபுரிதல் வேண்டும். இதற்கு மொழிப் பாடங்கள், வரலாறு போன்றவை உதவுகின்றன. மேலும் சமுதாயத்தின் சிறுபதிப்பாகப் பள்ளி இயங்குவதால், சமூகப் பண்புகள், பொறுப்புகள் ஆகியவை பற்றிய நல்லுணர்வினை மாணாக்கரிடையே எழச் செய்தலில் பள்ளிச் செயல்கள் மிகவும் பயன்படுகின்றன.

விழுப்பொருள் உலகு மனிதருக்கு மட்டும் உரித்தான ஒன்றாகும். மனிதன் முழுமை பெறுதற்கும், தன்னைத் தானே அவன் கண்டெய்துதற்கும் விழுப்பொருள் உலகம் அடிப்படையாகும். குறிக்கோள்களும் நடத்தை முறைகளும் இவ்வுலகில் அடங்கும். இவ்வுலகினை ஒவ்வொருவனும் தானே படைத்து, அதற்கேற் நடந்து கொள்ளுதல் வேண்டும். இத்தன்மையை ஆராய்ந்து பார்த்தால், விழுப்பொருள் உலகம் அல்லது விழுமிய உலகம் மற்ற இரு உலகுகளினின்றும் வேறுபடுவது தெளிவாகும். இங்கு, கற்போன், உள்ளான வளர்ச்சியின், தாளாண்மையின், அழகுத் துய்ப்பின், ஆராய்ச்சியின், உயர்வுள்ளலின் அடிப்படையாகத் தானே விதித்துக்கொண்ட அறக்கோள்கள், அறிவாய்வுக் கட்டுப்பாடுகள், அழகு நுகர்வுத் தரங்கள், சமய நெறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தன் வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்ள வேண்டும். இருத்தல், பொருத்திக் கொள்ளுதல் என்ற நிலை மாறி, வேட்டல், விழைதல் முதலிய வினைகளைக் காட்டுவது இவ்வுலகு, இது பிறரது தூண்டலால் தொடங்கப்பட்டதெனினும், ஒரு தனிமனிதனின் சொந்த உலகமாகும். வாழ்நாள் முழுவதும் இவ்வுலகைப் படைத்துக் கொள்ளாது வெறும் சமூக அளவிலோ அதற்கும் குறைந்தோ உள்ள நிலைகளில் வாழும் மக்களும் உளர்.

கல்வி ஏற்பாட்டில் இம்மூன்று உலகங்களுடனும் கற்போன் பொருந்தி வாழத் தேவையான பாடங்களும் செயல்களும் அனுபவங்களும் அமைந்திருக்க வேண்டுமென்று ஆதம்சன் சுட்டிக் காட்டியுள்ளார். சூழ்நிலைக் கூறுகளுடன் உயர்நிலைப் பொருத்தப்பாட்டினை மாணாக்கன் பெற உதவும் பள்ளி அமைப்பும் ஆசிரியர் வினை ஊக்கமும் இன்றியமையாதனவென்று ஆதம்சன் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.ச.

ஆதம்சுக் கல்விக் கருத்துகள்: கற்கும் குழந்தையின் நல்லாற்றல்களையும் நல்லியல்புகளையும் வெளிக் கொணர்ந்து, அவற்றின் முழுமையான இசைவுபெற்ற வளர்ச்சிக்குதவும் சூழ்நிலையினன உருவாக்கித் தருவது பள்ளிக் கல்வியின் அடிப்படை நோக்கம். இதனை இன்று கல்வியாளர் யாவரும் ஒருமுகமாக ஏற்கின்றனரெனினும், கல்வியின் தொடக்க நிலையில், இவ்வடிப்படை நோக்கம் பெருமளவு உணரப்படவில்லை. அன்றைய கல்வி அமைப்பில் ஆசிரியர் மேலாண்மை பெற்றுக் காணப்பட்டதுடன் பல வேளைகளில் கவர்ச்சியும் உடனடிப் பயனும் அற்ற பாடப் பொருளின் செல்வாக்கும் மிகுந்து காணப்பட்டது. இதன் விளைவாகக் கல்வியின் முழுப் பயனைக் குழந்தைகளும் அவர் வழியே சமுதாயமும் போதிய அளவு பெறாத நிலை இருந்தது. இந்நிலை மாறிக் ‘குழந்தை மையக் கல்வி’ (Child-centred Education) என்னும் கருத்தினை வலியுறுத்தியவருள் முதலிடம் பெறுபவர் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியாளர் உரூசோ (Rousseau) என்பவராவார். இளம் குழந்தைகளின் தேவைகளை அறவே புறக்கணித்து, அவர்களது வாழ்க்கையினை மகிழ்ச்சியற்றதாக ஆக்கும் கல்விமுறை பயனற்றது மட்டுமன்று; அது அவர்கட்டுத் தீமை பயப்பதுமாகும் என்று உரூசோ கருதினார். இவர்தம் கருத்துகளும் பின்னர் வந்த பெசுடலாசி (Pestalozzi), பிரோபெல் (Frocbel), சான் டூலி (John Dewey), மாண்டிசோரி அம்மையார் (Montessori) போன்றோரின் கல்விக் கோட்பாடுகளும், குழந்தை மையக் கல்வி அமைப்பின் வளர்ச்சிக்குத் துணை செய்தன. ஆசிரியர், கற்கும் குழந்தைகளிடையே காணப்படும் தனியாள் வேற்றுமைகளைக் (Individual differences) கருத்திற் கொண்டு, அவர்களது தனித்தன்மைக்கு (Individuality) மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்பதனையும், கற்கும் பருவத்தில் குழந்தைகள் இயல்பாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பயனுள்ள அனுபவங்களைப் பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்பதையும் குறிப்பிட்டனர். கல்வியில் இம்முற்போக்குத் கொள்கையினை வலியுறுத்திய கல்வியாளருள் சர் சான் ஆதம்சு (Sir John Adams)