உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிக்கப் பொருளாதாரம்

415

ஆதிக்கப் பொருளாதாரம்

பொருளாதாரம் (Controlled Economy), அதனை, மேலாண்மைக்குட்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் என்றோ (Managed Capitalistic Economy) ஒழுங்குமுறைக்குட்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் (Regulated Capitalistic Economy) என்றோ மக்கள் நலம் கருதும் முதலாளித்துவப் பொருளாதாரம் (Welfare Capitalism) என்றோ குறிப்பிடலாம்.
2. இப்பொருளாதாரத்தில் வளங்கள் தனியார் வசம் இருந்தாலும் அவை பொது நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
3. வளங்களை ஒதுக்கீடு செய்யும் கருவியாக இயங்கும் விலைக்கருவி வலுவிழக்கிறது.
4. போரால் அலைப்புண்ட பொருளாதாரத்தில் பொருளாதார உரிமைகள் அடக்கி வைக்கப்படுகின்றன.

போருக்குப்பின் பொருளாதாரச் சூழ்நிலை: போர் முடிந்த பிறகு அதன் கடுமையான விளைவுகள் பொருளாதாரத்தைப் பலவகைகளில் பாதிக்கின்றன. நாட்டின் வளத்தைப் போர் உறிஞ்சி விடுகிறது. வேளாண்மை, தொழில் துறை உற்பத்திகள் ஆகியன போர் முடிவதற்குள் மிகக் கேடு தரும் கீழ்நிலைக்குச் சென்று விடுகின்றன. எரிபொருள், இரும்பு, உருக்கு, இயந்திரக் கருவிகள் போன்றவை கிடைப்பதில்லை. போக்குவரவு முறை சீர்குலைந்து விடுகிறது. வாணிகம் சீர்கெட்டு விடுகிறது. போர்க் காலத்தில் பெரிய நிறுவனங்களிடையே உள்ள தொடர்புகள் அழிக்கப்படுகின்றன, தொழிலாளர்கள் சீர்குலைந்து போகின்றனர். உழைப்பவர்கள் பலர் கொல்லப்படுகின்றனர். அல்லது காயப்பட்டுத் தொழிலில் ஈடுபட முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். பலர் தொழிலிலிருந்தும் வாணிகத்திலிருந்தும் முற்றிலும் விரட்டப்பட்டு வெறும் உழைப்பாளர் நிலையை அடைகின்றனர். மக்களின் இடப்பெயர்ச்சி மிகுதியாகின்றன. மூலதனங்கள் முடங்கிப் போகின்றன. முதலீடுகளையும் இருப்புகளையும் போர் அழித்து விடுவதால், மிக்க குறைந்த வாழ்க்கைத் தரத்தைக் கூடப் பேணிக்காக்க முடிவதில்லை. வழக்கமான தொழில், வாணிகம் ஆகியன போரின் காரணமாக நின்று போவதால், வருவாய் இழப்பு மக்களுக்கு ஏற்படுவது மட்டுமல்லாமல் உற்பத்தி வலிமையும் நிலையாகக் குன்றிப் போகிறது. தனியார் வருவாயும், நாட்டின் வருவாயும் குறைகின்றன.

போர்க் காலக் கட்டுப்பாடுகள் தளர்ந்தவுடனேயே பணவீக்கம் வலுவாக வந்து பற்றிக் கொள்கிறது. போர்க் காலத்தில் இருந்த கடுஞ்சிக்கன வாழ்க்கையினால் பெரிதான முன்னேற்றம் போருக்குப் பிறகு உடனே ஏற்படுவதில்லை. தனிப்பட்டவர்களின் வருவாய்க் குறைவினால், அவர்களுடைய நுகர்ச்சி அளவு போருக்கு முன்னிருந்ததைவிடக் குறைந்து தான் காணப்படும். தெரிவு எல்லையும் குறுகியதாகவே இருக்கும். பற்றாக்குறை, பங்கீட்டு முறை, வரிசையில் நிற்றல் முதலியவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். போருக்குப் பிறகு பல தொழிற்சாலைகளை நடத்துவதற்கும், இருப்புகளைப் பெருக்குவதற்கும் களஞ்சியங்களை நிரப்பிக் கொள்வதற்கும் தேவையான வளங்களும் பொருள்களும் உள்நாட்டில் கிடைக்காததால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனால், அயல்நாட்டுச் செலாவணிப் பரிமாற்றங்களில் தொல்லைகள் ஏற்படும். எடுத்துக்காட்டாக, முதல் உலகப் போரின் விளைவாகப் பல நாடுகள் தங்கள் தங்க நாணயச் செலாவணி முறையைக் (Gold Standard) கைவிட வேண்டியதாயிற்று. போர் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே, பல நாடுகள் நாணயங்களைத் தங்கமாக மாற்றிக் கொள்வதை நிறுத்தி வைத்தன. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தங்க நாணயங்கள் புழக்கத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன. தங்க நாணயப் புழக்கத்துக்கு மாற்றாகத்தாள் பணம் வெளியிடப்பட்டது. இவ்வாறு சேர்த்துக் கொண்ட தங்கத்தில் ஒரு பகுதி, போரில் சேராத நாடுகளிடமிருந்து போர்ப் பொருள் இறக்குமதிக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்தியாவில் 1965-ஆம் ஆண்டு செப்டம்பரில் பாசிசுத்தானுடன் ஏற்பட்ட போரினால் நாட்டு வளர்ச்சிக்கான பொருள்வளம், பாதுகாப்பு நோக்கித் திருப்பப்பட்டதோடு, வெளிநாட்டு உதவியும் அறவே நிறுத்தப்பட்டது. வெளிநாட்டுச் செலாவணி வரவு குறைந்துவிட்டது. இக்கடுமையா சூழல்களின் காரணமாக இந்திய அரசு 1966-ஆம் ஆண்டு சூன் மாதம் இந்திய உரூபாயின் மதிப்பைக் குறைக்க (Devaluation) வேண்டியதாயிற்று.

இவ்வாறு போருக்குப் பின்பு நாட்டின் பொருளாதார நிலைமை ஒரே சிக்கலாகக் காட்சியளிக்கிறது. அப்படிப்பட்ட காலங்களில் ஒரு நாடு எப்படிப் பொருள் வளத்தைப் பாதுகாப்பது, பொருள்களை ஒதுக்கீடு செய்வது என்பவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். போர் முடியுந் தறுவாயில் மிகக் குறைந்த பொருள் வளத்தை மிகுதியாகப் பயன்படுத்த வேண்டியதாகிறது. அழிந்து போன மூலதனப் பொருள்களை ஈடுசெய்வதற்கும், இருக்கும் நிலையினைக் கட்டிக் காப்பதற்கும், சுருங்கிப் போன அயற் செலாவணி வரவுகளை ஈடுசெய்வதற்கும், இருக்கும் குறைந்த பொருள்களை மக்கள் நுகர்ச்சிக்குச் சரி-