ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்
433
ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்
முன்புறம் வைக்கப்பட்டுள்ள சாம்பல் நீர், மஞ்சள் நீர் சட்டிகளிலிருந்து நீரைத் தெளித்துக்கொண்டு வீட்டினுள் நுழைகின்றனர். உள்ளே எரிந்து கொண்டுள்ள விளக்கின் முன் தலைவணங்கி விருந்து உட்கொள்கின்றனர்.
சிறுநாட் சடங்கான மூன்றாம் நாள் புதுப்பானையில் சமைக்கப்பட்ட சோறு ஆறு உருண்டைகளாக்கப்பட்டு இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பெருக்கற் குறியிடப்பட்ட இடத்தில் ஓர் உருண்டை இடப்படுகிறது. பிணத்தின் தலைப்பகுதியில் ஒரு கல் நடப்பட்டு உறவினர்களால் பால் ஊற்றப்படுகிறது. பின், இறந்தவரின் மகன் இடுகுழியின் நான்கு மூலைகளிலும் மூலைக்கொன்றாக நான்கு சோற்றுருண்டைகளையிடுகிறான். ஆறாம் உருண்டை மீது பால் ஊற்றப் பட்டுப் பிணத்தின் வயிற்றுப் பகுதியில் வைத்துக் கட்டப்படுகிறது. இடுகுழியின் தெற்கெல்லையில் முக்கோண அமைப்பில் கற்களிடப்பட்டு அதன் மீது புதிய பானையொன்று தண்ணீருடன் வைக்கப்படுகிறது. பின்னர், அப்பானையில் துளையிடப்பட்டுத் தலைப்பகுதியில் நீர் படுமாறு செய்யப்படுகிறது. மறுபடியும், சாம்பல் நீராலும், மஞ்சள் நீராலும், தீட்டு நீக்கும் சடங்கு அல்லது தூய்மைப்படுத்தும் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.
பெருநாட் சடங்கு பதினாறாம் நாள் கொண்டாடப்படுகிறது. குடிலின் எதிரில் இறந்தவரின் ஆவியெனக் கூம்பு வடிவில் களிமண் உருப்பிடித்து வைக்கின்றனர். தலைமகன் சோறு சமைத்து இவ்வுருவிற்குப் படைக்கிறார். மீதியுணவு ஆறு உருண்டைகளாக்கப்பட்டுக் குளக்கரைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, இறந்தவரின் உருவம் உருவம் ஒன்று உறவினரால் உருவாக்கப்படுகிறது. முன்னர்ச் செய்யப்பட்ட களிமண் உருவம், இந்த உருவத்தின் தலைக்கருகில் அமைவது போல் வைக்கப்படுகிறது. வெற்றிலை, பாக்கு, செப்புக்காசுடன் நான்குச் சோற்றுருண்டைகளும் புதிய உருவத்தின் கை, கால்களினருகே இடப்படுகின்றன, இப்பொழுது, இறந்தவரின் மகன் இவ்வுருவினை வணங்குகிறான். பின், அது நீரினுள் தள்ளப்பட்டு அறிக்கப்படுகிறது. இச்சடங்கிற்குப் பிறகு வந்துள்ளவர்களுக்குத் துணியும் புகையிலையும் அளிக்கப்படுகின்றன. இத்துடன் இவர்களின் ஈமச்சடங்குகளும் முடிவுறுகின்றன.
கேரளத்தைச் சார்ந்த பணியர் என்னும் பழங்குடியினர் பாயிலிட்ட பிணத்தை வடக்குத் தெற்காக, நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்திற்குத் தோண்டிய குழியில் தலைப்பகுதி வடக்கிலும் கால்பகுதி தெற்கிலும் இருக்குமாறு இடுகின்றனர். சிறிதளவு சோறிட்ட பின் பாய் மடிக்கப்பட்டுக் குழி மூடப்படுகிறது. இவ்வினத்துத் தெய்வத் தன்மையுற்றவன் அன்றிருந்து ஏழு நாட்களுக்குச் சிறிது அரிசிக் கஞ்சியை இடுகுழிக்குச் சற்றுத் தொலைவில் வைத்துத் தன் கையைத் தட்டியழைத்துந் தீய ஆவிகளை உணவில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறான். அப்பொழுது, தீய ஆவிகளும் இரண்டு காக்கைகள் உருவில் வந்து உண்ணும் எனக் கருதுகின்றனர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மூதாதைகளுக்குச் செய்யும் வழிபாட்டில் உறவினருள் ஒருவர் தெய்வத் தன்மையால் அருள்வாக்கு சொல்லத் தொடங்குகிறார். பிறகு, எல்லோருக்கும் உணவு பரிமாறப்படுகிறது. இந்த விருந்திற்குப் பின் அந்தி வரை ஆடும் நடனத்துடன் ஈமச்சடங்குகளும் நிறைவு பெறுகின்றன.
ஒரிசா மாநில கந்தப் பழங்குடியினர் இறந்தவர்களை எரிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சோறாக்கி வட்டிலில் இட்டு எரியூட்டிய இடத்தில் வைக்கின்றனர். மந்திரம் கூறி இறந்தவரின் ஆவியை வரவழைத்து உண்ணுமாறும் தீவ ஆவியாகவோ புலியாகவோ மாறிக் கிராமத்தினரைத் துன்புறுத்த வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கின்றனர். சாவு நிகழ்ந்த நான்காம் நாள் ஒரு சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. இறந்தவரைப் போன்று வைக்கோலினால் உரு ஒன்று செய்து வீட்டின் முன்போ கூரை மீதோ வைக்கின்றனர். இழவு வீட்டில் கூடும் உறவினரும் நண்பர்களும் ஒப்பாரிக்குப் பின் விருந்தில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு பரிசுப் பொருளைப் கொண்டு வருகின்றனர். மறுநாள் திரும்பும் பொழுது தாம் கொண்டு வந்த பரிசுப் பொருளைவிடச் சிறிது விலையுயர்ந்த பொருளைப் பெற்றுச் செல்கின்றனர், சாவினால் கிராமத்திற்கு ஏற்பட்ட தீட்டை நீக்கித் தூய்மை செய்ய ஏழாம் நாளன்று எருமையைப் பலி கொடுக்கின்றனர். புலியால் கொல்லப்பட்டவர்களுக்குச் செய்யும் தூய்மைப்படுத்தும் சடங்கின் பொழுது பன்றியைப் பலியிடுகின்றனர். இதன்பிறகு ஈமச்சடங்குகள் முடிவடைகின்றன.
இறந்தவரின் உடலைப் பல வகைகளில் அடக்கம் செய்வர். இறந்தவரின் உடலைத் தின்றல், மண்ணின் கீழ்ப் புதைத்தல், குகையில் இடுதல், நீரினுள் இடுதல், மக்க வைத்தல், வீட்டில் பாதுகாத்தல், எரியூட்டல் என்பன உலகின் பல பகுதிகளிலும் காணக் கூடிய சவ அடக்க முறைகளாகும்.
சாகர் குடிகளில் சில பிரிவினர் தம் உறவினரின் பண்டை பிணத்தைத் தின்கின்றனர். பண்டை தெகாமியரிடையேயும் இத்தகைய வழக்கம் காணப்பட்டது. இவ்வினத்தில் இறந்துபோனவரின் குடும்பர் பூசாரி எரிக்கப்பட்ட சதைப்பகுதிகளைத் தின்பார். பண்டை-