ஆதிக்குடிகளின் பொருளாதாரம்
444
ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்
ஆதிக்குடியினரிடையே இறந்தவர்களின் சொத்து, உயிருடன் உள்ள கணவன் அல்லது மனைவியையே சாரும். தாய் வழியிலான தோட்டப் பயிரிடுவோரிடையே பெண்களே பயிர் செய்வதால் இங்குச் சொத்துரிமை தாயிடமிருந்து பெண்ணிற்குச் செல்கிறது. திரோபிரியாண்டுத் தீவினரிடையே தோட்டப் பயிரிடும் பணியினை ஆண்கள் செய்வதால், இங்குச் சொத்துரிமை தாயின் சகோதரனிடமிருந்து, அவன் சகோதரியின் மகனைச் சாரும்.
தந்தை வழிச் சமுதாயத்தில், சொத்துரிமை புதல்வர்க்கே உரியதாகும். தந்தையின் பொருள்களைப் புதல்வரும் தாயின் உடைமைகளைப் புதல்வியரும் பொதுவாகப் பெறுகின்றனர்.
இறுதி விருப்பு: இவ்வேற்பாட்டின்படி, ஒருவன் தன் வழக்கப்படி அல்லது சட்டப்படியுள்ள வாரிசாக நியமிக்கப்படாத ஒருவனுக்குத் தன் சொத்துரிமையினை மாற்றுகிறான். ஆதிக்குடியிளரிடையே காணப்படும் இம்முறையே, இக்காலத்து ‘உயில்’ எனப்படுகிறது.
எனினும் ஆதிக்குடியினர் பலரிடையே மறுபிறப்புக் குறித்த நம்பிக்கை நிலவுவதால், இறந்தவர் உடைமைகளை அவர்களுடனே புதைத்து விடுகின்றனர். எனவே இவர்களிடையே சொத்துரிமை எனப்படுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஆசுத்திரேலியப் பழங்குடிகள், ஆப்பிரிக்கப் புகமென், அந்தமான் தீவினர், செமாங்குகள், எசுக்கிமோக்கள் ஆகியோரைக் கூறலாம்.
ஆதிக்குடியினரிடையே, சொத்துரிமைச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ‘முன் பிறப்புரிமை’, ‘கடைப் பிறப்புரிமை’ என்னும் இருவழிகளைக் கையாளுகின்றனர். முன் பிறப்புரிமையில் அனைத்துச் சொத்தும் மூத்தவரான மகனையோ மகளையோ சாரும். கடைப்பிறப்புரிமையில் இளையவரான மகன் அல்லது மகள் அனைத்துச் சொத்திற்கும் உரிமையாக்கப் படுகின்றனர்.
இங்ஙனம் ஆதிக்குடியினர் எளிமையான சமுதாய அமைப்பினைக் கொண்டிருந்தாலும், அவர்களின் பொருளாதார வாழ்க்கை முறை எளிதானதாக இல்லை.
ம.ந.பு.
துணை நூல்கள்:
Barmett, H.G., The Nature of the Potlatch, American Anthropologist, Vol. 40, 1938.
Grierson, P.J.H., The Silent Trade, Edinburgb, 1903.
Herskovits, M., Economic Anthropology, Norton, New York, 1965.
Lowie, RH., Incorporal Property in Primitive Society, Yale Law Journal, Vol. XXXVII, 1928.
ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள் என்பது அக்குடிகளிடையே தொன்று தொட்டுவரும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளையும், சமூக அரசியல் கட்டுப்பாட்டைக் காத்திட எவ்வாறு நடக்க வேண்டும் என்ற நியதிகளையும் குறிக்கும். எடுத்துக்காட்டாகக் கூடா ஒழுக்கத்தைப் பண்பாடு அனுமதிப்பதில்லை. பிளாக்கு பூடு (Black-Food) என்னும் சமுதாயத்தில் மனைவி நடத்தை தவறினால் கணவன் அவளது மூக்கை அறுத்து விடுகிறான்; அல்லது அவளோடு கள்ள நட்புக் கொண்டவனிடமிருந்து இழப்பீடு கோருகிறான். இதே சூழ்நிலையில் ஓர் எசுக்கிமோ, தன் மனைவியின் கள்ளக் காதலனைக் கொன்றுவிடுகிறான்; அல்லது அவனும் கள்ளக்காதலனும் ஒருவருக்கொருவர் திட்டித் தீர்த்துக்கொள்ளும் வகையில் பாடல் போட்டி நடத்தி அதில் தங்கள் சிக்கலுக்கு முடிவு காண்கின்றனர். பிளாக்கு பூடும், எசுக்கிமோவும் தங்களுக்கு இணைக்கப்பட்ட ஒரே விதமான அநீதிக்குத் தத்தம் சமுதாய மரபு வழக்கமான இரு வேறு முறைகளில் கழுவாய் தேடிக் கொள்கிறார்கள்.
எழுத்து முறை கண்டுபிடிப்பதற்கு முன்பு, சமுதாயங்களின் சட்ட அமைப்பு முறைகள் அனைத்தும் எழுதப்படாமலும் மரபு வழிப்பட்டனவாயும் இருந்தன. புதிய சமுதாயங்களின் சட்ட அமைப்பு முறைகளில் மரபு வழிச் சட்டங்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. மரபு வழிச்சட்டம் என்பது எழுத்து வடிவில் எழுதப்படாததாகும். இதன் துணையால் கூறப்படும் தீர்ப்புகள் முன்னறிந்து கூறத்தக்கனவல்ல.
ஆதிக்குடிகளின் சமுதாயங்களில் சமூகக் கட்டுப்பாட்டைக் காக்க உதவும் மரபு முறைகளுக்குச் ‘சட்டம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துதல் பற்றிப் பலரும் வினவுகின்றனர். சீகல் (Segall) என்பவரின் கூற்றுப்படி சட்டம் நீதிமன்றங்களால் உருவாக்கப்படுவதாகும். மலினோசுகி (Malinowski)யின் கருத்படி நாகரிகப் பாங்கறியாச் சமுதாயங்களில் நீதிமன்றங்களோ சட்டவிதித் தொகுப்புகளோ காவலர்களோ இல்லை என்பதாகும். எனினும் ‘சட்டம்’ என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒழுகலாறுகளின் விதிகளையும் அவை மீறப்படின் அளிக்கப்படும் தண்டனைகளையும் குறிப்பதாகும், ‘நீதிமன்றம்’ என்பது வேறுபாடுகளைத் தீர்த்து வைக்கும் ஓர் அமைப்பைக் குறிப்பதாகவும் கொண்டால், தன்னாட்சி உரிமையுடைய-