உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிக்குடிகளும் அரசும்

449

ஆதிக்குடிகளும் அரசும்

விடாமல் தடுக்கவே இவ்வாறு செய்தனர். இது இடைக்காலத்திற்கு முன்பே நடந்தேறிவிட்டது.

இதனால் இடைக்காலத்தில் பழங்குடி மக்களும் அரசனின் குடி மக்களாகக் கருதப்பட்டனர். பொருள் உற்பத்தியில் பிரபுக்களுக்கு அடங்கியவர்களாக்கப்பட்டனர். ஆகவே, ஆதிக்குடிகளுக்கும் அரசிற்கும் இடையே மோதல்கள் நடப்பது குறைந்தது. வலிமை மிக்க அரசை எதிர்த்துத் தங்களால் ஒன்றும் செய்ய இயலாத பழங்குடிகள் ஒதுங்கிக் கொண்டனர். அவர்களால் தங்கள் அரசை ஏதும் செய்திட இயலாது என்பதை அறிந்த அரசுகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் வாழ்ந்த பழங்குடிகளை அப்படியே விட்டு வைத்தன. இருபகுதியினரும் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர் எனலாம். மக்கள் தொகையில் சிறுபான்மையினராகி மலைப் பகுதிகளிலும் அடர்ந்த காடுகளிலும் ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்த இவர்களை இக்காலக் கட்டத்தில் எழுந்த தொன்மங்கள் பூதங்கள் என்றும், அரக்கர்கள் என்றும் வருணிக்கின்றன.

ஆப்பிரிக்காவில் சில பழங்குடிகளிடம் மட்டில் அரசுத் தோற்றத்திற்கான முறைகள் காணப்பட்டன. இவையுங்கூட இன்று வரையில் இக்கால அரசு அமைப்பு அளவிற்கு வளரவில்லை. இவர்களின் அரசில் கூலிப்படை முறையில்லை. பழங்குடிகளின் தலைவன் அமைப்பு முடிவெடுக்கவும் செயற்படுத்தவுமான அதிகாரம் படைத்தவனாகவே மாறியுள்ளான். இதற்கு மேல் இது வளரவில்லை.

பழங்குடிகள் பொதுவாகத் தம் இனத்திற்கு அப்பாற்பட்ட புதிய மனிதர்களிடம் எளிதில் நட்புக் கொள்வதில்லை. பல் நேரங்களில் பகைமையே பாராட்டுவர்.

சிறிய அந்தமானில் வாழும் ஓங்கே (Onge) பழங்குடியினர் கி.பி. 1886-ஆம் ஆண்டு வரையிலும் எந்தப் புதிய மனிதர்களோடும் பழகாதவர்கள், ‘அசாம் வேலி’ (Assam Valley) என்ற கப்பலில் கி.பி. 1867-இல் இவர்கள் வாழும் பகுதிக்குச் சென்ற கப்பல் தலைவனும் ஏழு மாலுமிகளும் திரும்பி வரவில்லை. இவர்களைத் தேட அம்ரே என்பார் ‘குவண்டாங்கு’ என்ற கப்பலில் சென்றார். ஓங்கர்களின் கடுமையான தாக்குதலினால் இவர் உடனே திரும்பினார். இதன் பின்டபுள்யூ. எல். மச் என்பாரின் தலைமையில் ஒரு கப்பல் அனுப்பப்பட்டது. பெரும் தொல்லைக்குப் பின் இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் மீட்கப்பட்டனர். கர்னல் டி. சடெல்லும் எம்.வி. போர்ட்டுமனும் கி.பி. 1880-இல் அந்தமானியர்களை அனுப்பி நல்லெண்ணத்தின் அறிகுறியாகப் பல பரிசுப்பொருள்களை ஓங்கர்களுக்கு அளிக்கச் செய்தனர். தற்செயலாகக் கி.பி. 1885 இல் 8 ஆண்களையும் 6 பெண்களையும் 10 குழந்தைகளையும் பிடித்து வந்தனர். இவர்களிடமிருந்த நம்பிக்கை இன்மை, அன்பளிப்பாலும் நன்கு நடத்தப்பட்டதாலும் சிறிது சிறிதாகக் குறைந்தது. போர்ட்மென் கி.பி. 1886- ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய அந்தமானுக்குச் சென்ற பொழுது விடுவிக்கப்பட்டவர்களுடன் ஏனைய ஓங்கர்களும் நட்போடு வந்து சந்தித்தனர்.

ஆங்கிலேயர்கள் ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடம் பல முறை மோதிய நிகழ்ச்சிகளும், பிரித்தானியர் சூலு (Zulu), நுபா (Nuba) ஆகிய பழங்குடியினருடன் மோதிய நிகழ்ச்சிகளும் இக்கால வரலாற்றில் காணப்படுகின்றன.

வட அமெரிக்காவில் இந்தியப் பழங்குடிகளாகிய செனிகா, அசுதெக்குப் பழங்குடிகளிடம் போர்ச்சுகீசியரும், இசுபானியர்களும் (Spanisb) போரிட்ட செய்திகள் அமெரிக்க இந்திய வரலாற்றில் காணப்படுகின்றன. பழங்குடிகள் தங்களுக்குள் நிலப்பகுதிக்காகப் போரிட்டதும் உண்டு. ஆனால், வென்றவர்கள் தோற்றவர்களை அடிமையாக்குவதில்லை. இரோகுவாய்கள் கி.பி. 1651-ஆம் ஆண்டு அளவில் எரிக்களையும் நடுநிலை இனங்களையும் வென்றபோது அவர்களைக் குலக்குழுக் கூட்டில் ஒத்த அங்கத்தினர்களாகச் சேரும்படி அழைத்தார்கள். தோற்கடிக்கப் பட்டவர்கள் மறுத்தபோதுதான் அவர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார்கள்.

ஆதிக்குடிகளை நட்பாக்கிக் கொள்வது, அடக்கி ஆள்வது என்ற இருவழிகளில் அரசுகள் இரண்டாம் வழியையே பெரும்பாலும் விரும்பின. நட்பாக்கிக் கொள்வது நீண்ட நடைமுறையைக் கொண்டதும் சமமாக நடத்த வேண்டியதுமாகும். சமமாக நடத்தினால் பழங்குடிகளின் செல்வத்தையும் உழைப்பையும் அடையமுடியாது. ஆகவே பெரும்பாலான அரசுகள் இரண்டாம் வழியை விரும்பியதில் வியப்பில்லை. மக்களாட்சி அமைப்பில் பழங்குடிகளுக்குரிய பங்கினையும் அவர்களுக்குள்ள சிக்கலையும் காணவேண்டும். இத்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் பழங்குடிகளிடம் கருவிகளின் வன்மையால் உட்புகவில்லை. முதலில் கிறித்தவ மடாலயங்கள் புகுந்தன. மேகாலயாவில் வாழும் காசிகளிடமும் தமிழ்நாட்டு நீலகிரி மலையில் வாழும் தோடர்களிடமும் இவ்வாறே தொடர்பு கொள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றபின் இவர்களிடையேயும் மக்கள் பிரதிநிதித்துவம் வந்து சேர்ந்தது. வாக்குரிமையைப் பயன்படுத்தும் உரிமையை அரசியல் அமைப்பு அளித்தது. இவ்வமைப்பில் தமிழ்நாட்டில் உள்ளது போன்று சிறு சிறு தொகையினராகச் சிதறிக் கிடக்கும் பழங்குடிகன் மிகுதியாக விழிப்படையா விட்டாலும் இவர்களே பெரும்பான்மையாக வாழும் மேகாலயா, திரிபுரா, நாகாலந்து, இமாசலப்-