ஆதி சைவர்
458
ஆதித்த சோழன்
வுக்கும் இடையே நிகழ்த்த பலம் அறி போட்டியில், தேவர்களின் வஞ்சனையால் தோல்வியுற்றான். சிவ நடனங்களைக் காணச் சிதம்பரத்தில் பதஞ்சலியாகத் தவமியற்றி அவ்வாறே பதஞ்சலியாகிச் சிவபூசை செய்தான். சிவபெருமான் முடிமேலிருந்தமையால் இறுமாப்பு எய்த, அவரால் இழுத்தெறியப்பட்டுத் தலை பல பிளவுகளாக, தவஞ்செய்து அவற்றைத் தலைகளாகப் பெற்றான். சுவதி என்னும் பெண்ணை மணந்து, நாக கன்னிகையைப் பெற்று, அரித்துவசனுக்கு மனைவியாக அளித்தான்.
ஆதி சைவர்: சிவபெருமானை முதற்கடவுளாகக் கொண்ட சமயம் சைவம். ஆகவே அந்தச் சமயத்தவர் யாவரும் பொதுவாகச் சைவரே. ஆயினும் சைவாகமங்களில் சைவருக்குள் சில பிரிவுகள் சொல்லப்படுகின்றன.
சைவாகமங்களின்படி, ஐந்து திருமுகங்களுடன் சாதாக்கியத் தத்துவத்தில் வீற்றிருக்கும் சதாசிவ மூர்த்தியே, உலகத்தைப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்கட்டும் முதல்வர். அவரை வழிபட்ட கௌசிகர், காசிபர், பாரத்துவாசர், கௌதமர், அகத்தியர் ஆகிய ஐவரும் ஆதி சைவர். அவர்களது வழியில் தோன்றி வளர்ந்ததே ஆதி சைவ மரபு.
ஆதி சைவர். சிவவேதியர்: ஆதி சைவ அந்தணர், சிவப்பிராமணர் என்றும் சொல்லப்படுகின்றனர். சிவாலயங்களில் பூசை செய்தற்கு ஆதி சைவரே உரியவர் என்று சிவாகமங்கள் கூறும். அவர்கள் ஆகம் விதிப்படி சிவதீக்கை பெற்றவர். சமயம் விசேடம், நிருவாணம், அபிடேகம் என்ற கூறப்படும் நான்கு வகைப்பட்ட தீக்கைகளில் அபிடேக தீக்கை பெற்றவர்களே ஆசாரியர் ஆவர். ஆதி சைவரில் ஆசிரியர் சிவாசாரியர் எனப்படுவர்.
தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் ஆதிசைவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பூசையில் ஈடுபட்டு வந்தனர் என்பது கல்வெட்டுகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் தெரிய வருகிறது. தேவாரம் பாடிய மூவரில், சுந்தரரைச் சேக்கிழார் ஆதி சைவ மரபில் அவதரித்தார் என்றே கூறியுள்ளது நோக்கற்பாலது.
சி.அ.
ஆதித்த கரிகாலன் (இரண்டாம் ஆதித்தன்): சோழ இளவரசன் இரண்டாம் பராந்தகனான சுத்தரசோழனின் (கி.பி. 985-1016) மகன்; முதலாம் இராசராச சோழனின் உடன்பிறந்தவன்; இளவரசுபட்டம் கி.பி. 960-இல் சூட்டப் பெற்றவன். இவன் கி.பி. 966 முடிய ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவனது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பாண்டிச்சேரி மாநிலம் பாகூரில் அண்மை யில் கிடைத்துள்ளது. வீரபாண்டியனை வென்றவன் இவனே. இவன் பகைவர்களால் கொல்லப்பட்டான்.
ஆதித்த சோழன் (கி.பி. 871-890) விசயாலய சோழனின் மகன். இவன் கி.பி. 871-ஆம் ஆண்டு பட்டம் ஏற்றான். விசயாலயன், பரகேசரி ஆதித்த சோழன், இராசகேசரி என்றும் பட்டம் புனைத்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த சோழ அரச குலத்தினர் பரகேசரி, இராசகேசரி என்று பட்டப் பெயரினை ஏற்றனர். இவளது ஆட்சிக் காலத்தில் விசயாலயன் தான் முதுமையுற்றதால் ஆதித்தனுக்கு அறிவுரைகள் கூறியபடி இருந்தான். பாண்டியர்கள் தொடர்ந்து நாட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் சோழ நாட்டையும் கைப்பற்றி வந்தனர். இரண்டாம் வரகுணனின் படை கி.பி. 880 முற்பகுதியில் சோணாட்டில் புகுந்தது. காவிரியாற்றின் வடக்கில் உள்ள மண்ணி நாட்டிலிருந்த இடவை நகரைக் கைப்பற்றியது. அந்நாளில் சோழ இளவரசனாக விளங்கிய ஆதித்த சோழன் பாண்டியனிடம் போரிட்டு வெற்றிபெற முடியவில்லை. பாண்டியா விரிவுபெற்று வருவதை அறிந்த அபராசிதவர்ம பல்லவன் ஆதித்த சோழனுக்கு உதவிபுரியப் படையொன்றை அனுப்பினான். அபராசிதனுக்கு உதலி புரிய முதலாம் பிருதிவிபதி படைப்பிரிவினை அனுப்பி வைத்தான். ஆகவே, சோழர், பல்லவர், கங்கர் ஆகியோர் இணைந்து போரிட்டனர். சோழர்படை காவிரிக்கரைப் பகுதியில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் சி.பி. 885-இல் பாண்டியர் படையுடன் மோதியது. ஆதித்த சோழன் வெற்றி பெற்றான். கங்க அரசன் முதலாம் பிருதி விபதி உயிரிழந்தான். இப்போரின் பயனாக சோழ நாடு முழுவதையும் ஆட்சிபுரியும் உரிமையை ஆதித்த சோழன் பெற்றான். தஞ்சைக்கருகில் உள்ள சில பகுதிகளைப் போரிட்டு வென்றான். ஆதித்தன் பெரும் படையைத் திரட்டி பல்லவ அரசன் அபராசி தன் மீது போர் தொடுத்தான்; பல்லவ வேந்தன் யானை மீது இருந்தபடியே போர்புரிந்தபோது அவனைக் கொன்று பல்லவ நாட்டைப் பெற்றான். பின்னர் ஆதித்த சோழன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்தான். சேர அரசன் தாணுரவி (Sthanu Ravi) என்பான் தன் படைத்தலைவனான விக்கியண்ணனை அனுப்பித் துணை புரியவைத்தான். ஆதித்தன் இப்படைகொடுப்பில் வெற்றி பெற்றாள். கொங்கு நாட்டுப் பகுதிகளைச் சோழ அரசுடன் இணைத்தான். காளத்தி முதல் புதுக்கோட்டை வரையில் சோழநாடு இவனது ஆட்சியில் விரிவடைந்தது. ஆதித்தன் கி.பி. 707 வரை ஆட்சி செய்தான்.
ஆதித்தன் சிவ நெறிச் செல்வனாக விளங்கினான். காவிரிக்கரையில் பல சிவன் கோயில்களைக் கட்டியுள்ளான். தில்லைக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தான். இவனது இறுதிக்காலத்தில் தொண்டை நாட்டில் உள்ள காளத்தியில் இறந்-