உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதித்தன் கலைப்பாணி

459

ஆதித்தனார் சி.பா.

தான். இவனை நல்லடக்கம் செய்துள்ள இடத்தில் இவன் மகன் முதலாம் பராந்தகன் இலிங்கம் அமைத்துக் கோயில் எழுப்பியுள்ளான். இது பள்ளிப் படை எனப்படும். இது போன்றதொரு வழக்கம் இந்து சமயத்தவரிடம் இருந்ததில்லை. இது பௌத்தர்களின் தாக்கம் என அறியப்படுகிறது. இவனுக்குப் பின்னர் முதலாம் பராந்தகன் ஆட்சிக்கு வந்தான்.

தீ.வீ

ஆதித்தன் கலைப்பாணி: சோழப் பேரரசனான முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-905) காலத்திய கட்டிடக்கலையாகும். அதித்த சோழன் ஆட்சிக்கு முன்பு கோயில்கள் செங்கற்களாலும் மரத்தினாலும் கட்டப்பட்டன. இவர் ஆட்சிக்காலத்தில் அவை கல்லினால் கட்டப்பட்டுக் கற்றளிகளாக மாற்றப்பட்டன. இக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் யாவும் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட சுற்றளிகளாகும். இக்காலக் கோயில்கள், ஒன்று முதல் நான்கு தளங்களைக் கொண்ட விமானங்களை உடையதாகவும், கிரீவம், சிகரம், தூபி என்பனவற்றைக் கொண்டும் விளங்கின. சிகரங்கள், சதுரம், வட்டம். எண்கோண அமைப்புகளைக் கொண்டவை. சப்தமாதர் தளிகள். தூங்கானை மாடக்கோயில்கள் ஆகியவற்றின் கூரைகள் வண்டிக் கூட்டினைப் போன்று நீண்டு வளைந்தவை.

இவரது காலக் கோயில்களில் கருவறை சதுரமாக இருக்கும்: அதன் நேர்முன்பாக இடைகழியும் அமைக்கப்பெற்று இருக்கும். கருவறைச் சுவரின் வெளிப்பக்கத்தில் சிலைகளை வைப்பதற்குரிய மாடக்குழிகள் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைக்கப் பெற்றுள்ளன. மாடக்குழிகளில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரமன், கணபதி, துர்க்கை போன்ற தெய்வ உருவங்கள் உள்ளன. இம்மாடக் குழிகளின்மேல் மகர தோரணம் உள்ளது. இவர் காலத்தில் எழுந்த சில கோயில்களில் உள்ள மாடக்குழிகளில் பிட்சாடனர், திரிபுராந்தகத் தேவர், அர்த்தநாரி, இலிங்கோத்பவர், சுப்பிரமணியர் ஆகியோரும் காணப்படுகின்றனர். நார்த்தா மலையிலுள்ள விசயாலய சோழீச்சுரம் கோயிலில் சுவர் மாடங்கள் இல்லை. மனிதத் தலை அல்லது அன்னப்பறவை வடிவுடன் அமைக்கப்பட்ட கூடுகள், கொடிக்கருக்கு. நுனியில் வட்டங்கள் ஆகிய இவற்றால் அழகுசெய்யப்பட்ட கொடுங்கைகளுக்குக் கீழே பூதகண வரிசையும் மேலேயாளி வரிசையும் உண்டு.

இவரது காலக் கோயில்களில் கருவறையைச் சுற்றிலும் எட்டுப் பரிவார தேவதைகளின் கோயில் கண், மதிலை ஓட்டிக் கட்டப்பட்டன. ஆதித்த சோழனின் கோயில்கள் பல நுட்ப வேலைப்பாடுகளையும். கலை நுணுக்கங்களையும் கொண்டு மிளிர்கின்றன. இவரது காலத்தில் அம்மன் கோயில்கள் தனித்து அமைக்கப்படவில்லை. அம்மனுடைய செப்புத் திருமேனிகளை வார்த்து நிலைநாட்டினர், பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம், தலமரம், திருக்குளம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு ஆதித்தன் காலத்திய கோயில்கள் விளங்கின.

ஆதித்தனார், சி. பா. தமிழகத்தை உருவாக்கிய தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ள ‘தினத்தந்தி’ என்னும் நாளேட்டைப் புரட்சியோடு நடத்திப் பத்திரிகை உலகில் பெரும் சாதனை புரிந்தவர், பால சுப்பிரமணிய ஆதித்தனார்.

ஆதித்தனார் தமிழின்மேல் அளவற்ற பற்றும், தமிழரின் முன்னேற்றத்தில் பேரார்வமும் கொண்டவர். ‘உயிர் தமிழுக்கு-உடல் மண்ணுக்கு’ என முழக்கமிட்டு அவ்வண்ணமே வாழ்ந்து காட்டியவர். எண்ணியதை எண்ணியாங்கு முடிக்கும் திண்ணிய செயலுரம் கொண்டவர். கடுமையாக உழைத்த போதிலும் சிக்கனமான எளிய வாழ்வை மேற்கொண்டவர். பகுத்தறிவுச் சிந்தனையாளர்.

சி.பா. ஆதித்தனார்

ஏழை எளியவர்களும் சிறிதளவு கல்வி பெற்றவர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இவர் ‘தினத்தந்தி’ என்னும் நாளிதழைத் தொடங்கினார். பல நூறாயிரக்கணக்கான