ஆதிபருவத்தாதி பருவம்
464
ஆதியப்பனா
வந்த சமயங்களும், புறக்கணிக்காத வகையில் சமயப் பொதுமைபட ‘ஆதிபகவன்’ என்னும் தொடரால் பரம்பொருளாகிய இறைவனைத் திருவள்ளுவர் சுட்டியுள்ள நயத்தையும் நுட்பத்தையும், வியந்தும் நயத்தும் திருவள்ளுவப் பயனை எய்த முயல்வதே செயற்பாலதாகும்.
ஆதிபருவத்தாதி பருவம் தமிழில் அமைந்துள்ள பாரத நூல்களுள் ஒன்று. இதனைக் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அம்பலத்தாடுமையர் இயற்றியுள்ளார். இவரே இந்நூலினை இயற்றினார் என்னும் செய்தி, ‘பரிவுடன் அம்பலத்தாடும் ஐயரை நீர், ஆதிபருவத்தை எங்கும் விரிவு தரும்படி உரைக்க வேண்டும் என்று மடுவை நகர்த் திம்ம பூபன் வேண்ட இயற்றினார்’ என அரங்கநாதக் கவிராயர் தம் பாரதப் பாயிரத்தில் கூறியிருப்பதனால் தெளிவுபடுகிறது. இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதனை இவர்தம் இயற்பெயரால் உணரலாம். 147 செய்யுட்களைக் கொண்டமைந்துள்ள வில்லிபாரத ஆதிபருவத்தின் முதற்சருக்கமாகிய குருகுலச் சருக்கச் செய்திகளை விரித்தும் புதியன சேர்த்தும் பாடப்பட்ட 569 விருத்தப் பாடல்களைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. வில்லிபாரதத்தின் முதற் பருவத்திலுள்ள வேறு சருக்கங்கள் பற்றியும், பிற பருவங்கள் பற்றியும் இந்நூல் குறிப்பிடவில்லை. இந்நூலின் இடையே வில்லிபுத்தூராரின் 177 பாரதச் செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் பாடிய விருத்தங்கள் 392 ஆகும். இந்நூல் கடவுள் வாழ்த்து, பாயிரம் ஆகியவற்றோடு, முகனுரைச் சருக்கம், வினதைச் சருக்கம், சரத்காரன் சருக்கம், சருப்பயாகச் சருக்கம், கதைச் சுருக்கச் சருக்கம், வேதவியாசர் சருக்கம், சக உற்பத்திச் சருக்கம், யயாதிச் சருக்கம், துட்டியந்தன் சருக்கம், சந்தனும் சருக்கம் ஆகிய பத்துச் சருக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் விருத்தப் பாடல்கள் எளிமையும் இனிமையுங் கொண்டு, சந்தநயம் மிக்கனவாக உள்ளன. தமிழக அரசின் கீழ்த்திசைக் கையெழுத்தும் பிரதிகள் நூல் நிலையத்தார் 1951-ஆம் ஆண்டில் இந்நூலின் முதற்பகுப்பினை வெளியிட்டுள்ளனர். காண்க: அம்பலத்தாடுமையர்.
ஆதிபுத்தர்: இவர் வச்சரயான புத்தசமயத்தில் மிக உயர்ந்த வச்சரதரர் ஆதிபுத்தர் என அழைக்கப்படுகிறார். தெய்வமாகக் கருதப்படும் ஆதிபுத்தர் ஒரே கடவுட்கொள்கை உடையவர். இக்கொள்கை நாலந்தா மடாயலத்திலிருந்து கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ‘காலச்சக்கர தந்திரம்’ என்னும் நூல் ஆதிபுத்தருக்குப் படைக்கப் பெற்றுள்ள நூலாகும். இவருக்குத் தீப்பிழம்பு வடிவத்தில் சைகள் செய்யப்படும். சுயம்பு புராணத்தின்படி ஆதிபுத்தர் முதன் முதலில் நேபாளத்தில் தீப்பிழம்பு வடிவத்தில் தோன்றியதாகவும், அதற்குப் புகலிடம் கொடுக்கும் நிமித்தமாக மஞ்சுசீ கோயில் ஒற்றைக் கட்டியதாகவும், அதனையே அன்றிருந்து சுயம்பு சைதன்யம் என்றழைக்கிறார்கள் என்றும் கூறுவர்.
ஆதிமந்தி, சங்க காலத்தில் வாழ்ந்த ஆட்டனத்தியின் மனைவி; கவிஞருமாவார். திருமாவளவன் எனச் சிறந்து விளங்கிய கரிகாற் சோழனின் மகள். தன் கணவன் காவிரி ஆற்றுப் புனலால் இழுத்துச் செல்லப்பட்டமையினை அறிந்து பல ஊர்களிலும் பல நாடுகளிலும் சென்று தேடிக் காணாளாய்க்கவன்று அலைந்து திரிந்தான். அப்பொழுது மருதி என்பவள், கடல்வாய்ப்பட்டிருந்த ஆட்டனத்தியை இவளுக்குக் காட்டினாள். ஆதிமந்தி ஆட்டனத்தி வரலாற்றினைக் கொண்டு பாரதிதாசன் ‘சேரதாண்டவம்’ என்னும் நாடக நூலை எழுதியுள்ளார். ஆதிமந்தி பாடிய பாடல் குறு. 20-ஆம் பாடலாக அமைந்துள்ளது. இவள் வரலாற்றுக் குறிப்புகள், அகநானூற்றிலும் (45, 76, 222, 236, 376, 396) சிலப்பதிகாரத்திலும் (சிலப். 21: 11-15) காணக்கிடக்கின்றன.
த.கோ.
ஆதி மூர்த்தி: திருமாலின் சிறிய திருவுருவங்களுள் ஒன்று. ஆதிசேசன் என்னும் பாம்பின் மேல் அமர்ந்த நிலையில் இவர் தோற்றமளிப்பார். ஒரு காலை மடித்தும், பிறிதொரு காலைத் தொங்கவிட்டும் காட்சியளிப்பார். தலையில் மகுடம் அணிந்திருப்பார்; நான்கு கைகளை உடையவர். ஒரு கையினைத் தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் மீதும், மற்றொரு கையினைக் கால் முட்டியின் மீதும் வைத்திருப்பார். பிற இரண்டு கைகளில் சங்கையும் சக்கரத்தையும் கொண்டிருப்பார். ஆதிசேசன் என்னும் பாம்பின் தலை குடை போன்று காணப்படும். இப்பாம்பின் தலைகள் சில சிற்பங்களில் ஐந்தாகவும் சில சிற்பங்களில் ஏழாகவும் உள்ளன. ஆதிமூர்த்தியின் வலப்பக்கம் பிருகு என்னும் முனிவரும், இடப்பக்கம் மார்க்கண்டேயர் என்னும் முனிவரும் முழங்காலில் மண்டியிட்ட நிலையில் காணப்படுவர். சிவனும் பிரமனும் ஆதிமூர்த்தியை வழிபட்ட வண்ணம் இரு பக்கமும் நிற்பர்.
ஆதியப்பனார் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் தொண்டை நாட்டிலுள்ள ‘களத்தூர்’ என்னும் ஊரில் பிறந்தார். வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் இயற்றியுள்ள தல புராணங்களால் அறியலாம். இவர், திருக்களர் புராணம், திருக்கொள்ளம் புதூர்ப் புராணம் பருதி வனப்புராணம், மாயூரப்புராணம் ஆகிய தலபுராணங்களைப் பாடியுள்ளார். இவர், தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த அழகிய சிற்றம்பல தேசிகர்-