ஆந்திரனோவ்
473
ஆந்திரனோவ்
கட்சியின் விருப்பப்படி யூரி ஆந்திரபோவ் வகித்த எல்லாப் பொறுப்புகளிலும் இலெனினது மாபெரும் இலட்சியத்திற்கும் கட்சிக்கும் அவர் பேரார்வம் காட்டினார். கட்சியின் முடிவுகனைச் செயற்படுத்துவதிலும் கம்யூனிசக் கருத்துகள் வெற்றி பெறுவதற்கான போராட்டத்திலும், தம் சக்தி, அறிவாற்றல் அனுபவம் யாவற்றையும் ஈடுபடுத்தினார்.
பொதுவுடைமைக் கட்சி, சோவியத்து அரசு ஆகியவற்றின் புகழ்பெற்ற தலைவர்களுள் ஒருவரான ஆந்திரபோவ் தாயகத்துக்கு ஆற்றிய சேவைக்காகச் சமதரும உழைப்பு வீரர் விருதும், நான்கு இலெனின் விருதுகளும், அக்டோபர் புரட்சி விருதும், செம்பதாகை விருதும், மூன்று செம்பதாகை உழைப்பு விருதுகளும், மேலும் பல பதக்கங்களும் பெற்றுள்ளார்.
சோவியத்துக் கம்பூனிகடுக் கட்சிப் பொதுச் செயலாளராக 1982 நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 1983 சூன் 16-இல் சோவியத்துத் தலைமைக் குழுவின் கட்சித் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1984 பிப்பிரவரி 9 ஆம் நாள் காலமானார்.
த.கோ.
ஆந்திரனோவ் திராவிட மொழிகளின் ஆராய்ச்சிக்கு வித்திட்ட மொழியியல் அறிஞர்களுள் ஒருவர். திராவிட மொழிகள் பற்றிய ஆராய்ச்சி கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. என்றாலும், கால்டுவெல்லுக்குப் பின்னரே கால் கொண்டு, களம் கண்டது எனலாம். திராவிட மொழியியல் இன்று சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல்வேறு அறிஞர்கள் திராவிட மொழிகளின் பல்வேறு கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த அறிஞர் பலர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டவர்களும், அதன் வளர்ச்சியைக் கண்டவர்களுள் பெரும்பாலோரும் மேலை நாட்டவர்களே. அவர்களுள் உருசிய நாட்டுப் பேரறிஞர் டாக்டர் ஆந்திரனோவ் (Dr. M. S. Andronov) ஒருவராவர்.
மைக்கேல் எசு. ஆந்திரனோவ் 1931-ஆம் ஆண்டு மாசுகோவில் பிறந்தார். அங்குள்ள கீழை நாட்டு ஆய்வு நிறுவனத்தில் (Moscow Institute of Oriental Studies) பட்டப் படிப்பை முடித்தார். தமிழ் மொழியையும் வங்காள மொழியையும் 1949-54ஆம் ஆண்டுகளில் பயின்றார். ‘வங்காளி மொழியில் திராவிடக் கூறுகள்’ (Dravidian Elements in the Bengali Languange) என்ற ஆய்வேட்டிற்கு 1954-ஆம் ஆண்டில் எம்.ஏ. பட்டம் பெற்றார். சோவியத்து நாட்டு அறிவியற் கழகத்தைச் சார்ந்த கீழை நாட்டு ஆய்வு நிறுவனத்தில் 1954-இலிருந்து 1957 வரை முதுகலை மாணவராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 1958-59-ஆம் ஆண்டில் ஆய்வு மாணவராக இருந்தார். இவர் இலக்கணத் துறையில் ஆய்வு செய்து பிஎச்.டி.,டி.லிட். ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
இவர் மாசுகோவிலுள்ள சோவியத்து நாட்டு அறிவியற் கழகத்தைச் சார்ந்த கீழை நாட்டு ஆய்வு நிறவனத்தில், முதுநிலை ஆய்வாளராகவும் (Senior Research Scholar) தென்கிழக்காசிய மொழித் துறைத் தலைவராகவும் பணி ஏற்றார்.
இந்திய மொழிகள் குறித்து நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் திராவிட மொழிகள் பற்றிப் பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களும் எழுதியுள்ளார். திராவிட மொழிகளும் அல்டாயிக்கு மொழிகளும் ஒரு கால நிலையில் ஒரே இடத்தில் பேசப்பட்டமையால், ஒன்றின் பண்புகள் மற்றொன்றில் காணப்படுவதன் காரணமாக இவற்றிடையே ஒற்றுமைக் கூறுகளைக் காணமுடிகிறது என்று தம் நூல் ஒன்றில் (‘Two Lectures on the Historicity of the Language families’ Annamalai University, 1969) குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளின் ஒப்பு மொழியியலை மட்டுமன்றித் தமிழ், கன்னடம், பிராகூயி (Brahui) மொழிகளையும் நன்கு ஆராய்ந்து, தனித்தனி நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் மொழியின் இலக்கணம் பற்றியும் (The Standard grammar of modern and classical Tamil) நூல் எழுதியுள்ளார். தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (Tamil Research and Development Council) 1973-ஆம் ஆண்டு இந்நூலுக்கு முதல் பரிசு அளித்துச் சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட மொழிகள் பற்றியும் அவற்றின் அமைப்புகள் பற்றியும் உருசிய மொழியிலும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் காணப்படும் கிளை மொழிகள் பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளார். இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்குமிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள், இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுகள், பிராகூயி மொழி ஆகிய இவை போன்ற பல்வேறு துறைகளில் இவர் எழுதியுள்ளார். செக்கு நாட்டு அறிஞர் கமில் சுவலபில் (Kamil Zvelebil) போலவே எல்லாத் துறைகளிலும் எழுதிய பெருமை இவருக்குண்டு. உருசிய-வங்காள அகராதி, உருசிய-தமிழ் அகராதி, மலையாளம்-உருசிய அகராதி, கன்னடம்-உருசிய அகராதி போன்ற அகராதிகளைப் படைத்துள்ளார்.
திராவிட மொழிகளின் அமைப்பு, ஒப்பாராய்ச்சி ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்களுக்கும்,
வா.க. 2-60