ஆப்கானிசுத்தானம்
479
ஆப்கானியப் போர்கள்
ளுதளி பெற்றது. இப்பொருளாதார உதவியால் நீர்ப்பாசனத் திட்டங்கள், நீர்மின் திட்டங்கள், சாலைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்றவை நாடெங்கிலும் உருவாக்கப் பெற்றன.
பொருளாதாரச் சிக்கல்களின் விளைவாகத் தாவூத்கான் 1963-ஆம் ஆண்டில் பதவி விலக வேண்டியவரானார். ஆப்கானிசுத்தானம் தன் மூன்றாம் அரசியல் அமைப்புத் திட்டத்தை 1964-ஆம் ஆண்டில் ஏற்றபோது, நாட்டில் மக்களாட்சி அரசாங்கம் மலர்ந்தது. எனினும், அரசர் சாகீரும், தேசிய சட்ட மன்றமும் அரசின் சீர்திருத்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள ஒப்பவில்லை. மேலும், ஆப்கானியக் குடிமக்களிடம் அரசாங்க விவகாரத்தில் நாட்டம் செலுத்தும் ஆர்வமோ, அவற்றைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் அறிவோ தோன்றவில்லை. அதனால், மக்களாட்சிமுறை முன்னேற முடியாது தோற்றது.
தாவூத்கான் 1973-ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியைத் தூண்டி அரசர் சாகீரைப் பதவியிலிருந்து விரட்டினார். படைத் தலைவர்கள் அரசாங்கத்தைத் கைப்பற்றிக் கொண்டு, ஆப்கானிசுத்தானத்தில் குடியரசை நிலைநாட்டி, தாவூத்தைக் குடியரசுத் தலைவராகவும், தலைமை அமைச்சராகவும் அறிவித்தனர். இடதுசாரி இராணுவத் தலைவர்களும், சாதாரணக் குடிமக்களும் 1978-ஆம் ஆண்டில் கலகம் செய்து தாவூத்தைக் கொன்றனர். இக்குழுவினருக்கு உருசியாவில் பொருளாதார, இராணுவ உதவிகள் நிறையக் கிடைத்தன. அதைக் கொண்டு அரசாங்கத்தைக் கைப்பற்றி நாட்டில் பொதுவுடைமை அடிப்படையில் கொள்கைகளை நிலைநாட்டினர். ஆப்கானியர்களுள் பலர் புதிய அரசாங்கத்தை எதிர்த்தனர். அரசாங்கக் கொள்கைகள் இசுலாமியப் போதனைகளுக்கு எதிரானவை என்று அவர்கள் நம்பினர். அரசாங்கத்தில் உருசியாவின் செல்வாக்கு ஊடுருவி நிற்பதையும் அவர்கள் வெறுத்தனர். பெருவாரியான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். கலகக்காரர்களுக்கும், அரசாங்கப் படைகளுக்குமிடையே கடும் மோதல்கள் நாடெங்கும் தோன்றலாயின.
உருசியா, 1979-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1980-ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் ஆப்கானிசுத் தானத்தின் மீது பல்லாயிரக்கணக்கான படை வீரர்களை ஏவிப் படையெடுத்தது. ஆப்கானியக் கலகக்காரர்களுடன் உருசியர்கள் கடும்போர் புரிந்தார்கள். ஆப்கானியக் கலகக்காரர்களைவிட உருசியர்களிடம் போர்த் தளவாடங்கள் மிகுந்திருந்தன. எனினும், ஆப்கானியக் கலகக்காரர்கள் கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டு உருசியாவைத் தோற்கடிக்க முயன்றனர். இக்கொரில்லாப் போராட்டம் 1980-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீடித்தது. ஆப்கானிசுத்தானம் உருசியாவின் கைப்பாவையாகி விட்டது. 1982-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆப்கானிசுத்தானத்தில் ஏறத்தாழ இலட்சம் பேர்களைக் கொண்ட சோவியத்து உருசியப் படைவீரர்கள் இறங்கியுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
ஆப்கானியப் போர்கள், கி.பி. 18, 19, 20-ஆம் நூற்றாண்டுகளின் ஆங்கிலேயருக்கும் ஆப்கானியருக்குமிடையே நிகழ்ந்த போர்களாகும். பண்டைக் காலம் முதற்கொண்டே இந்தியாவின் வடமேற்கெல்லை அயலவரின் நுழைவாயிலாகவும், இந்தியாவின் அமைதிக்குக் கேடு விளைவிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. ஆரியர், சகர், யவனர், குசானர், பத்தானியர், மங்கோலியர், துருக்கியர், மொகலாயர் போன்ற பலரும் கைபர், போலன் கணவாய்கள் வழியாகவே வந்தனர். இவர்கள் ஆப்கானிசுத்தானம் காபூல், பஞ்சாபு, சிந்து (வடமேற்கு இந்தியா), வடஇந்தியா, கிழக்கு இந்தியா முதலிய பல இடங்களில் வேரூன்றித் தங்கள் ஆட்சி, பண்பாடு முதலியவற்றை நிலைப்படுத்திக் கொண்டனர். இவர்கள் இந்தியாவைச் சுரண்டுவதிலும் கொள்ளையிடுவதிலும் இந்திய மன்னர்களுடன் போரிட்டுப் பலனடைவதிலும் தங்கள் முழுச் சிந்தனையைச் செலுத்தினர் எனவேதான், வடமேற்கெல்லைப் புறத்தை ‘இந்தியாவின் உடலிலே உறுத்திய முள்’ என்றனர்.
சீனாவைக் கி.மு. 250 முதல் 210 வரை ஆட்சி செய்த சிக் கூவாய் டி என்னும் மன்னர் தார்த்தானியர்கள், ஊணர்கள் போன்ற முரட்டு வகுப்பினரின் படையெடுப்புகளைத் தடுக்கச் ‘சீனாவின் பெருமதிற்சுவர்’ என்று அழைக்கப்படும் நீண்ட சுவரினைச் சீனாவின் எல்லையில் கட்டுவித்தார். அதன் நீளம் 3600 கி.மீ. ஆகும் உயரம் 5 முதல் 7 மீட்டர்களாகும். இது போன்ற நீண்ட சுவரினை இந்தியாவின் வடமேற்கெல்லையில் மௌரியப் பேரரசர்கள் கட்டாமல் இருந்தனர். அதனால்தான், அயல் நாட்டவர் பலர் இந்தியா மீது படையெடுத்தனர்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்திய போது பஞ்சாபு மாநிலம் சீக்கியர் ஆதிக்கத்திலும், சிந்து மாநிலம் அமீர்கள் ஆதிக்கத்திலுமிகுந்தன. எனவே, வடமேற்கெல்லைப்புற நெருக்கடிகளை நேரடியாகச் சந்திக்கும் சிக்கல் சீக்கியருக்கும், அமீர்களுக்கும் மிகுதியாக இருந்ததே தவிர, ஆங்கிலேயருக்கு இல்லை. இவ்விரு வகுப்பாரும் ஆங்கிலேயர்களுக்குப் பகைவராகவும், நண்பர்களாகவும் மாறி மாறி நின்றனர். இவர்களுடன் ஆங்கிலேய அரசாங்கம் பல போர்களை நடத்தியது. இப்போர்களின் விளைவாக, கி.பி. 1843-இல் சிந்துவும்,