உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்கானியப் போர்கள்

480

ஆப்கானியப் போர்கள்

கி.பி. 1849-இல் பஞ்சாபும் ஆங்கில ஆட்சியுடன் இணைக்கப்பட்டன. இதற்குப் பிறகுதான் ஆங்கிலேயர்கள் நேரடியாக உருசியர்களோடு போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

உருசியர்கள் அருகிலுள்ள ஆப்கானிசுத்தானத்தின் மீது அதிகாரம் செலுத்தவும், அதன் சில எல்லைப் பகுதிகளைத் தங்கள் ஆட்சியுடன் சேர்த்துக் கொள்ளவும் முயன்றனர். நடு ஆசியாவில் உருசியர்கள் பலமடைந்தால் ஐரோப்பாவிலும் தங்கள் செல்வாக்கிற்குப் பேராபத்து ஏற்படக்கூடும் என ஆங்கிலேயர்கள் எண்ணினர். மேலும் அவர்கள் தங்களின் இந்திய ஆட்சிக்கு அருகேயுள்ள எல்லைப் புறங்களைக் காப்பதற்காக உருசியர்களை ஆப்கானிசுத்தானத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வது தங்கள் கடமை எனக் கருதினர்.

ஆப்கானிசுத்தானத்துக்கும் இந்தியாவுக்குமிடையில் அமைந்துள்ள காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் பல முரட்டினத்தவர்கள் வசித்து வந்தனர். ஆப்கானிசுதானத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாமல் இரு நாடுகளுக்கும் அவர்கள் தொல்லைகளைக் கொடுத்தனர். எனவே, ஆங்கிலேயர்களும் ஒரு நிலையான கொள்கையைக் கையாளாமல் சமயத்திற்கு ஏற்றவாறு நடந்து கொண்டனர்.

ஆங்கிலேயர்கள் ஆப்கானிசுத்தானத்துடன் நிலையான நட்புறவு கொள்ளலாமா, வென்று ஆளலாமா, அல்லது வாளாயிருக்கலாமா, என்னும் ஐயப்பாடுகளுடனிருந்தனர். உருசியர்கள் ஆப்கானிசுத்தானத்தில் தலையிடும் போதெல்லாம் உருசியா பற்றிய அச்சம் இந்திய அரசாங்கத்தை மட்டுமன்றி இங்கிலாந்தையும் ஆட்கொண்டது. ஆப்கானிசுத்தானத்தை இணைக்கும்படியாக ஒரு திட்டத்தை மேற்கொண்டு நாற்புறங்களிலிருந்தும் வழிகளை அமைக்கலாம் என்று ஆங்கிலேயர் சிலர் கருதினர். உருசியப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் நன்மையைத் தவிர ஆப்கானியத் தொடர்பால் வேறு எவ்விதப் பயனுமில்லை என்பது அவர்களின் வெளிப்படையான கருத்தாகும். உருசியர்களை ஈரட்டுக்கும் அப்பாலுள்ள ஆக்சாசு மலைத்தொடருக்கு அப்புறத்திலேயே தடுத்து நிறுத்துவது நல்லது என்று ஆங்கிலேயர் எண்ணினர்.

ஆப்கானியப் போர்களைப் பற்றி அறிவதற்கு முன் அந்நாட்டை ஆட்சி செய்த அரசர்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் காபூலைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பட்டியல் வருமாறு: அகமதுசா அப்தாலி துராவி சா (கி.பி. 1747-1773), தைமூர் சா (கி.பி. 1773-1793), சாமன் சா (கி.பி.1793-1800), சாமன் சா ஆட்சிக்கு எந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆப்கானிசுத்தானத்தை ஒன்று திரட்டி ஓர் ஆற்றல் வாய்ந்த நாடாக்கினார். வடமேற்கெல்லையில் பல சிற்றரசர்கள் சாமன் சாவினை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தார்கள். சாமன் சாவின் திறமையை வெல்லெசுலி பிரபு (கி.பி. 1798-1805) நன்குணர்ந்தவர். எனவே, தம் படைகளை வடமேற்கு எல்லையில் குளித்துச் சாமன் சாவைச் சந்திக்க ஆயத்த நிலையில் இருந்தார். இதற்கிடையில் பாரசீக மன்னர், சாமன் சா மீது போர் தொடுத்தார். இப்போரில் சாமன் சா தோற்கடிக்கப்பட்டார். தோல்வியுடன் தம் கண்களையும் இழந்தார். இப்போரின் விளைவாகச் சாமன் சாவின் இந்தியப் படையெடுப்புத் தவிர்க்கப்பட்டுவிட்டது. இறுதியில் சாமன் சா பஞ்சாபிற்கு ஓடிவந்து தம் வாழ்நாள் முழுவதும் ஆங்கிலேயரிடம் உதவித்தொகைப் பெற்று வாழ்ந்து இறந்தார்.

சாமன்சாவுக்குப் பின் மாமூது சா (கி.பி 1800-1803) என்பவர் அரசரானார். பின் கி.பி. 1803 முதல் 1809 வரை சா சீ சா அரசராக விளங்கினார். சா சீ சாவும் பஞ்சாபிற்கு ஓடிவந்து ஆங்கிலேயரிடம் உதவி பெற்று வாழ்ந்து வரலானார். மாமூது சா கி.பி. 1809-முதல் 1816 வரை மீண்டும் அரசரானார். இவருக்குப் பின் ஆயூப்கான் (கி.பி.1818-1826) அரசரானார்.

தோசுத்து முகமது கி.பி. 1826-முதல் 1863 வரை ஆட்சி செய்தார். திறமையும், சமயப் பற்றும் மிக்க இவர் ஆட்சிக்கு வந்த முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் எத்தகைய இடையூறுமின்றி ஆண்டு வந்தார். சா சீசா, கி.பி. 1834-இல் காபூல் மீது போர் தொடுத்துத் தோசுத்து முகமதுவிடம் தோல்லியுற்றார். ஆனால், தோசுத்து முகமது சீக்கியரிடம் பெசாவரை இழந்தார். இவர் கி.பி. 1838-க்குப் பின் பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டியவரானார். நாட்டின் வடக்கில் பல கலகங்கள் தலைதூக்கலாயின. தெற்கில் அவருக்கு எதிராக அவர் உடன்பிறந்தார் ஒருவர் காண்ட காரைக் கைப்பற்றினார். கிழக்கில் சீக்கியர் தலைவர் இரஞ்சித்சிங் அவரை அச்சுறுத்தி வந்தார். இரஞ்சித்சிங்கிற்கு ஆங்கிலேயர் உறுதுணையாக இருந்தனர். மேற்கில் மாமூது சாவும் ஈரட்டில் காம்ரானு மிருந்தனர். பாரசீகமும் உருசியாவும் காபூலைக் கைப்பற்றக் காத்துக் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் ஆங்கிலேயருடன் நட்புறவு கொள்ள, தோசுத்து முகமது மிர்சா பாரசீகத்தின் அரசரானார். இவர் உருசியாவோடு நெருங்கிய நட்புக் கொண்டவர். உருசியாவின் தூண்டுதலினால் இவர் ஈரட்டை முற்றுகையிட்டார். மத்திய ஆசியாவில் உருசியர்கள் செல்வாக்கு ஓங்கியது. ஆங்கில அரசாங்கம் உருசியாவின் செல்வாக்கை வெறுத்தது. இந்தியாவின் தலைமை ஆளுநர் ஆக்லண்டு பிரபு (கி.பி. 1836-1842) ஆப்கானிசுத்தானச் சிக்கலில் தலையிட விரும்பவில்லை. எனி-