ஆப்கானியப் போர்கள்
481
ஆப்கானியப் போர்கள்
னும் ஆங்கில அரசாங்கத்தின் வற்புறுத்தலினால் அலெக்சாந்தர் பர்னசு (Alexander Burnes) என்பவரை ஆப்கானிசுத்தானத்துக்குத் தூதுவராக அனுப்பினார். தோசுது முகமது பர்னசை வரவேற்று பெசாவரை இரஞ்சித்சிங்கிடமிருந்து இரஞ்சித்சிங்கிடமிருந்து பெற ஆங்கிலேயர் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனை ஆக்லண்டு பிரபு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, காபூலில் தங்கியிருந்த உருசிய நாட்டின் முகவர் விக்கோவிட்சு என்பவரைத் தோசுது முகமது வரவேற்றார். பர்னசு தாம் மேற்கொண்ட முயற்சியில் வெற்றியடையாமல் இந்தியாவுக்குத் திரும்பினார்.
முதல் ஆப்கானியப் போர்: ஆக்லண்டுக்குத் தோசுது முகமது மீது கோபம் ஏற்பட்டு அவரைப் பழிவாங்கக் கருதினார். பழிவாங்கும் எண்ணத்துடன் சீக்கியர் தலைவர் இரஞ்சித்சிங்கோடும், சா சீ சா வோடும் கூட்டுச் சேர்ந்தார். முக்கூட்டுறவு முடிந்ததும் காபூலின் மீது படையெடுத்தார். காபூல், காண்டகார், கசினி முதலிய பகுதிகளைக் கைப்பற்றினார். தோசுது முகமது கைது செய்யப்பட்டுக் கல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டார். புதிய அமீராகச் சா சீ சா நியமிக்கப்பட்டார். தோசுது முகமதுவின் மகன் அக்பர்கான் தலைமையில் ஆப்கானியர் கொதித்தெழுந்தனர். அவர்கள் பர்னசு, மெக்னாட்டன் முதலிய ஆங்கிலேயர்களைக் கொன்றார்கள். ஆப்கானிசுத்தானத்தை விட்டு வெளியேறிய ஆங்கிலப்படையும் அழிக்கப்பட்டது. முகமது அக்பர்கானிடம் 120 ஆங்கிலேயர்கள் சிறைப்பட்டனர். பிளைட்டன் என்னும் ஒரே ஆங்கிலேயர் மட்டில் உயிர் தப்பிச் சலாலாபாத்தை அடைந்தார். இத்தகைய பெரும் இழப்பிற்குக் காரணமாக இருந்த ஆக்லண்டை (Auckland) ஆங்கிலப் பாராளுமன்றம் வெறுத்து அழைத்துக் கொண்டது. ஆக்லண்டிற்குப் பிறகு எல்லன்பரோப் (Ellenborough) பிரபு (கி.பி. 1842- 1844) தலைமை ஆளுநர் ஆனார். அவர் அக்பர்கானைத் தோற்கடித்து, காபூலுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திப் பழி தீர்த்துக் கொண்டார், காபூல் மக்களின் விருப்பத்திற்கேற்பத் தோசுது முகமதுவைக் கல்கத்தாவிலிருந்து விடுதலை செய்து மீண்டும் காபூலின் அமீராக்கினார். சா சீ சாவை ஆப்கானியரே கொன்று விட்டனர்.
இலாரன்சு பிரபுவும் ஆப்கானியர் உறவும்: ஆங்கிலேயர்களால் மீண்டும் அமீராக்கப்பட்ட தோசுது முகமது அவர்களுடன் நீண்டகாலம் நட்புறவு கொண்டிருந்தார். இதனால், கி.பி. 1857-இல் இந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகத்திலும் ஆப்கானியரை அவர் ஈடுபடுத்தாது தனித்தே இருந்தார். ஆனால், கி.பி.1862-இல் அவர் ஈரட்டின் மீது போர் தொடுத்தார். இதற்கு ஆங்கிலேயர் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இருப்பினும் ஈரட்டு, கிபி. 1863-இல் தோசுது முகமதுவால் ஆக்கிரமிக்கப்பட்டது, வெற்றிபெற்ற சில நாட்களுக்குள் தோசது முகமது தமது 80-ஆம் வயதில் இறந்துவிட்டார். அவர் இறந்தபின் அவர்தம் பதினாறு புதல்வர்கள் அரியணைக்காக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர். அப்போர் ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது. வாள் முனையே அப்பிள்ளைகளுக்கு நீதிபதியாக அமையட்டும் என்று ஆங்கிலேயர் வாளாவிருந்தனர். கடைசியில் செர் அலியே வெற்றி பெற்றுக் கி.பி.1868-இல் அமீரானார். இவரை இலாரன்சு (Lord Lawrence) பிரபு (கி.பி. 1864-1869) ஏற்றும் பாராட்டிப் பொருள் உதவியும் செய்தார். இருப்பினும், ஆப்கானிய நாட்டு உள் விவகாரங்களில் தலையிட இலாரன்சுக்கு விருப்பமில்லை. அப்சல் கான், ஆசிம் கான் ஆகிய இருவர் வசீர் அலியை வீழ்த்தி அமீராக விரும்பி இலாரன்சின் உதவியை நாடினர். ஆனால், இலாரனசு அதனை மறுத்து விட்டார்.
அப்சல்கான் கி.பி. 1868-இல் மரணமடைந்தார். ஆரிம்காள், அதே ஆண்டில் நாடோடியானார். இச்சூழ்நிலையில் செர் அலி ஆப்கானியரின் ஆற்றல் வாய்ந்த அரசராகத் திகழ்ந்தார். இலாரன்சு, இன்னும் அதிகமாகச் செர் அலிக்கு உதவிகள் செய்யத் தொடங்கினார். அவருக்கு ஆறு இலட்சம் உரூபாய் பண உதவியையும் செய்தார். அரியணைக்குப் போட்டியிடும் இருவருள் எவரை ஆதரித்தாலும். மற்றொருவர் உருசியா அல்லது பாரசீகத்தின் உதவியை நாடுவார். அதனால் சிக்கல்கள் வளரும் என்பதற்காக இலாரன்சு யாருக்கும் உதவி செய்யாது இருந்தார். ஆப்கானியரைப் பகைத்துக் கொள்ளாமல் கூடியமட்டும் நெருங்கிய நண்பர்களாக வைத்துக் கொண்டால் இந்தியாவின் காவலமைப்பு வலுவடையுமென்றும் இலாரன்சு கருதினார். இக்கொள்கையை இலாரன்சுக்குப் பின்வந்த மேயோவும் (Mayo, கி.பி 1869-1872) நார்த்புரூக்கும் (North brook, கி.பி. 1872-1876) பின்பற்றினர். இலாரன்சு பின்பற்றிய கொள்கையின் விளைவாக உருசியா தன்னுடைய வலிமையைப் பெருக்கிக் கொண்டது.
மேயோவும் செர் அலியும்: மேயோவும் செர் அலியும் கி.பி.1869-இல் அம்பாலாவில் சந்தித்தனர். இச்சந்திப்பின் விளைவாக ஆங்கிலோ-ஆப்கானிய உறவு வளப்படுத்தப்பட்டது. செர் அலியே ஆப்கானிசுத்தானம் முழுமைக்கும் மன்னராகவும். அவர் இளைய மகன் அப்துல்லா கான் என்பவரை அரசராக்கவும், அவருக்குப் பின் அவர் சந்ததியே ஆப்கானிய அரசுக்கு வாரிசாக இருக்கவும், அவருக்கும் அவர் சந்ததிக்கும் ஒரு குறிப்பிட்ட நிலையான ஆண்டு உதவித்தொகை கொடுக்கவும் வேண்டும் என்று மேயோவிடம்