ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்
489
ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்
இவை தவிர இப்போது பனை, எள், பருத்தி விதைகள் ஆகியவற்றின் வளத்தைப் பெருக்குவதிலும் ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு (African Ground-nut Council-AGC) ஈடுபட்டு வருகிறது. இக்குழு 1981-ஆம் ஆண்டு நடத்திய ஒன்பதாம் கூட்டத்தில், உலக நிலக்கடலை அங்காடியில் ஏற்பட்ட பாதிப்புக் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் சோயா, சூரியகாந்தி ஆகியயற்றின் விதைகள் மிக்க அளவில் உற்பத்தி செல்லப்படுவதால், நிலக்கடலையின் விற்பனை பாதிக்கப்பட்டு விலை குறைந்து வருகிறது. இதைத் தவிர்க்க முற்பட்டு நிலக்கடலை பயிரிடுவோரை ஊக்குவிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இவ்வாறான திட்டங்களை மேற்கொண்டு செயலாற்றும் பொருட்டு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பையும், 11 மிலியன் உரூபாய் மதிப்பிற்கான செலவினையும் மேற்கொள்ள உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்து அரசு, நிலக்கடலைக்கும் அதனைச் சார்ந்த பொருள்களுக்கும் தடை விதித்ததற்கு இக்குழு, தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
நிலக்கடலையில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மையினால் உலகச் சந்தையில் இழந்த வாணிகத்தை ஈடுசெய்யும் வண்ணம், ஐரோப்பியப் பொருளாதாரக் குழு (EEC), ஐக்கிய நாடுகளின் முன்னேற்றத் திட்டம் (United Nations Development Programmes) போன்ற உலக நிறுவனங்களிலிருந்து பல திட்டங்களுக்காக இக்குழு உதவிப் பணம் பெற்று வருகிறது. நிலக்கடலை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆய்வுக் கூடங்கள், நச்சுத் தன்மை அகற்றும் தொழிற் கூடங்கள் (Detoxification Plants) போன்றவற்றை அமைப்பதற்கும், தொழில்நுட்ப உதவியை அளிப்பதற்கும் இத்தொகை பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்: இது எத்தியோப்பியாவின் தலைநகராகிய அடிசு அபாபாவில் 1958-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29- ஆம் நாள் நிறுவப்பட்டது.
இதன் சிறப்பு நோக்கங்கள்: 1 ஆப்பிரிக்க பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்கேற்ற சூழ்நிலையை உருவாக்குதல், 2 அத்திட்டங்களைச் செயற்படுத்தும் பணியில் பங்கு கொள்ளுதல், 3 சமூக நலத் திட்டங்களுக்குச் சிறப்பிடம் அளித்துப் பொருளாதார வளர்ச்சியைப் பெறவும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழி வகுத்தல், 4 ஆப்பிரிக்க நாடுகளுடனும் ஏனைய வெளிநாடுகளுடனும் அரசியல் பொருளாதார நல்லுறவை வளர்த்து அவற்றை நிலைபெறச் செய்தல் ஆகியன.
உறுப்புநாடுகள்: வட ஆப்பிரிக்கா, சகாரா துணை மண்டலம் ஆகியவற்றிலடங்கிய 51 தனி நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகும். தென் ஆப்பிரிக்கா தன் இனவெறிக் கொள்கையின் காரணமாக 1963-இல் உறுப்பினர் தகுதியை இழக்க நேரிட்டது. பிரான்சு, நமீபியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இதன் இணை உறுப்பு நாடுகளாகும்.
திறமை மிகு செயல்முறை வளர்ச்சிக்காக ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனத்தின் (Economic-Commission for Africa) பொறுப்புகள்யாவும் பல துறைப் பிரிவுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. சமூகப் பொருளாதார ஆராய்ச்சித் திட்டம், பன்னாட்டு வாணிகம், நிதி, சமுதாய முன்னேற்றம், இயற்கை வளங்கள், போக்குவரத்து வசதி, செய்தித் தொடர்பு, சுற்றுலா, பொது நிருவாகம், மேலாண்மை, மனித ஆற்றின் புள்ளியியல், மக்கள்தொகையியல் ஆகிய பிரிவுகள், ஐக்கிய நாட்டு உணவு வேளாண்மைக் கழகத்துடனும் ஐக்கிய நாட்டுத் தொழில் முன்னேற்றக் கழகத்துடனும் இணைந்து செயலாற்றுகின்றன. இவை தவிர 5 பன்னாட்டுத் திட்டங்களும் அவற்றைச் செயற்படுத்தும் மையங்களும் பல முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றப் பாடுபடுகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே வாணிகத்தைப் பெருக்குவதற்கும், அந்நாடுகள் பொருளாதாரத் திட்டங்களை வகுத்து நுட்ப அறிவினைப் பொதுக் கருத்தரங்கு வாயிலாக அளிப்பதற்கும் இந்நிறுவனம் முனைந்து செயற்படுகிறது. அடிசு அபாபாவில் 1980-ஆம் ஆண்டு நடந்த ஆப்பிரிக்க ஆணையர், வாணிக அமைச்சர்கள் மாநாட்டிற்காக உருவாக்கிய இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை, செறிவும் தரமும் மிகுந்து பாராட்டுதலைப் பெற்றது. அதன் அடிப்படையில் ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடைமுறைத் திட்டம் ‘மன்ரோவியாத் திட்டம்’ (Manrovia) என்ற பெயரில் உருவானது. இத்திட்டம் இலாகோசில் (Lagos) நடந்த ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களின் பொருளாதார உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ‘இலாகோசு நடைமுறைத் திட்டம்’ என்று சொல்லப்படுகிறது.
இத்திட்டம் ஆப்பிரிக்க மண்டல நாடுகளின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க வழிகாணும் நோக்கம் கொண்டது. மேலும் கி.பி. 2000 ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்கப் பொது அங்காடி (African Common Market) ஒன்றை உருவாக்க முனைந்து செயற்படும் தேவையையும் வலியுறுத்துகிறது. இது மக்களின் குடியிருப்புச் சூழலில் முன்னேற்றம் காணவும் உணவு உற்பத்தி, கட்டிடத் தொழிலுக்கான மூலப்பொருள்கள், எரிபொருள், ஆற்றல் ஆகியவற்றில் தன்னிறைவைப் பெறும் வண்ணம் திட்டங்கள் தீட்டியுள்ளது. உணவுப் பாதுகாப்பு, சேமிப்பு,
வா.க. 2-62