உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பிரிக்க மொழிகள்

493

ஆப்பிரிக்கா

எமிட்டோ-செமிட்டிக் மொழிகள் மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் வடபகுதிகளிலும் பேசப்படுகின்றன. இவ்வின மொழிகளிற் சில வரலாற்று அடிப்படையிலும், நாகரிக முதிர்ச்சியிலும் மிகவும் சிறப்பானவை. இன்றைய உலகில் காணப்படும் சிறப்பான சமயங்களும் கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்கள் பிறந்த இடங்கள் இம்மொழிகள் வழங்கும் பகுதிகளாகும். கிறித்தவ மக்களின் வேதமாகிய விவிலியமும், இசுலாமிய மக்களின் வேதமாகிய குர்ஆனும் முறையே இவ்வினத்தைச் சார்ந்த ஈபுரூ, அரபிக்கு மொழிகளில் முதன்முதலாக எழுதப்பட்டுள்ளன.

இப்பொருக்கு ஏற்ப இவ்வின மொழிகளை எமிட்டிக்கு, செமிட்டிக்கு மொழிகள் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பர். இவற்றுள் எமிட்டிக்கு மொழிகள் ஆப்பிரிக்காவின் வடபகுதிகளிலும், செமிட்டிக்கு மொழிகள் மத்திய கிழக்குப் பகுதிகளிலும், வட ஆப்பிரிக்காவிலும் வழங்குகின்றன.

எமிட்டிக்கு மொழிகளை எகிப்திய மொழி, பெர்பர் மொழிகன், குச்சுதிக்கு மொழிகள், சாடு மொழிகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிப்பர். இவற்றுள் எகிப்திய மொழி இன்று வழக்கிலில்லை. மிகப் பழமையான மொழிகளுள் எகிப்திய மொழியும் ஓன்று, கி.மு. 5000 ஆண்டிற்கு முன்பே நைல் நதிக் கரையில் தோன்றி வளர்ந்து, ஆயிரக் கணக்கான கல்வெட்டுகளையும், பாப்பிரசு ஏடுகளையும், நிலை நிறுத்திக் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் பேச்சு வழக்கற்ற மொழி எகிப்திய மொழி. இம்மொழி ஈரோகிளிபிக்கு எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. இம்மொழியில் இலக்கணக் கூறுகள் உயிர்மாற்றத்தினால் தான் பெரும்பான்மையும் காட்டப்படுகின்றன.

இப்பிரிவின்சண் உள்ள பெர்பர் மொழிகள் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக்குக் கடல் முதல் எகிப்து வரை நீண்டு கிடக்கும் நிலப் பகுதியில் பேசப்படுகின்றன. இதன்கண் உள்ள மொழிகளுள் சில்கா மொழி குறிப்பிடத்தக்கது. இதுபோன்றே இப்பிரிவின்கண் உள்ள கெளசா மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

செமிட்டிக்கு மொழிகளுன் ஒருசில மொழிகள் ஆப்பிரிக்காவில் பேசப்படுகின்றன. அராபிக்கு இவற்றும் சிறப்பான ஒன்றாகும். இதைப் போன்றே எத்தியோப்பிய மொழிகளும் குறிப்பிடத்தக்கவை.

பொதுவாக இம்மொழிகளில் உயர்திணை, அஃறிணைப் பகுப்பு இல்லை. எல்லாச் சொற்களும் ஆண் அல்லது பெண்பால் காட்டுகின்றன. பல மொழிகளில் ஒருமை, இருமை, பன்மைப் பகுப்பினையும் எழுவாய், செயப்படுபொருள், உடைமைப் பொருள் வேற்றுமைகளையும் காணலாம். தமிழில் பிற வேற்றுமை உருபுகளால் காட்டப்படும் வேற்றுமைப் பொருள்கள் பல முன்னுருபுகளால் இம்மொழியில் உணர்த்தப்படுகின்றன. முன்னிலையில் ஆண், பெண் வேற்றுமையைக் காணலாம்.. பெயர், வினை மாற்றங்கள் முன்னொட்டுகளாலும், பின்னொட்டுகளாலும், உள் உயிர் மாற்றங்களாலும் காட்டப்படுகின்றன.

பொதுவாக ஆப்பிரிக்க மொழிகள் (எமிட்டோ செமிட்டிக்கு மொழிகளைத் தவிர) பழமையான கல்வெட்டுகளையோ இலக்கியங்களையோ கொண்டவை அல்ல. ஆப்பிரிக்க மொழிகளின் முதல் எழுத்துச் சான்றாகக் கருதப்படுவது கி.பி. 10 அல்லது 11-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். எனினும் மொழிக் கூறுகளைப் பொறுத்தமட்டில் இம்மொழிகள் சில தனிப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இத்தன்மையை ஒலியியல், சொல்லியஸ், தொடரியம் ஆகியவற்றில் எல்லாம் காணமுடியும். கிளிக்கு ஒலி ஆப்பிரிக்க மொழிகளில் காணப்படுகிறது. இவற்றைப் போன்றே பெயர், வினைச்சொல் ஆக்கங்களிலும் ஒருசில புதுமைகளைக் காணலாம்.

எஸ்.அ.

ஆப்பிரிக்கா உலகிலேயே இரண்டாம் பெரிய கண்டம். ஆசியா இதனைவிடப் பரப்பில் பெரியது. ஆப்பிரிக்காக் கண்டம் மக்கள் தொகையில் மூன்றாய் இடத்தைப் பெறுகிறது. ஆசியா முதலிடத்தையும் ஐரோப்பா இரண்டாம் இடத்தையும் பெறும் கண்டங்கள். பெருமளவில் இயற்கைச் செல்வங்களையும் மூலப் பொருள்களையும் பெற்றிருந்தாலும், போதுமான பொருள் வசதியின்மையால் தடைபட்ட முன்னேற்றத்துடன் இக்கண்டம் தடுமாறி நிற்கிறது. உலக வைர உற்பத்தியில் முக்கால் பகுதி, ஆப்பிரிக்காவின் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்க காடுகளில் உறுதி வாய்ந்த மரங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றுள் எபனியும் மகாகனியும் சிறப்பானவை. ஆப்பிரிக்க மக்களுள் 100 க்கு 70 பேர் கறுப்பர்கள். அவர்களை நீக்கி ரோக்கள் என்று கூறுவர்.

ஆப்பிரிக்காவை 100 ஆண்டுகளுக்கு முன் இருண்ட கண்டம் எனக் கூறினர். ஏனெனில், ஐரோப்பிய வெள்ளையர்க்கு அதன் பெரும் பகுதி தெரியாத, புரியாத புதிராக இருந்தது. இன்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைப் பற்றிய விவரங்கள் கிடைப்பது அருமையாகவே இருப்பினும், கல்வியின் தரம் உயர்வதாலும், பிற கண்டங்களிலிருந்து மக்கள் ஆப்பிரிக்காவைக்காண வருவதாலும், இப்புதிர் புரியத் தொடங்குமென எதிர்பார்க்கிறார்கள். மக்கள் பலர் வாணிகத்திற்காக ஆப்பிரிக்கா செல்கிறார்கள். ஆயிரமாயிரம் சுற்றுலாப் பயணிகள் ஆப்பிரிக்காவிற்குச் செல்கிறார்கள். அவர்கள் உலகிலேயே