ஆப்பிரிக்கா
499
ஆப்பிரிக்கா
கனிவளம்: ஆப்பிரிக்காவில் பலவகைப்பட்ட கனிப்பொருள் கிடைக்கின்றன. அஞ்சனக்கல் (Antimony), கல்தார், பாக்சைட்டு, காசிடெக்ட்டு (Caesitexite) குரோமைட்டு (Chromite), மாங்கனீசு, பாசுபேட்டு, பிளாட்டினம், தங்க்சுடன் (Tungston). உரேனியம், துத்தநாகம் போன்ற கனிப்பொருள்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. இக்கனிப்பொருள்களுள் ஒரு சிலவற்றின் பங்கு அதன் உலக உற்பத்தியில் கணிசமானதாகும். உலகில் உற்பத்தி செய்யப்பெறும் வைரத்தில் ஐந்தில் நான்கு பங்கும், தங்கம், கோபால்ட்டு உற்பத்தியில் பத்தில் ஏழு பங்கும் ஆப்பிரிக்காவில் கிடைப்பதாக 1970-ஆம் ஆண்டு மதிப்பீடு கூறுகிறது. உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு பிளாட்டினமும், மாங்கனீசும். குரோமைட்டும் இக்கண்டத்திலிருந்து கிடைக்கின்றன. பத்தில் மூன்று பங்கு அஞ்சனக்கல், நான்கில் ஒரு பங்கு பாசுபேட்டு, ஐந்திலொரு பங்கு செம்பு போன்றவையும் இங்குக் கிடைக்கின்றன.
ஆப்பிரிக்காவில் கிடைக்கும் கனிப்பொருள்களில் பாதிக்குமேல் தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றன. குறிப்பாக, தங்கம், செம்பு, வைரம் ஆகிய மூன்று தனிப் பொருள்கள் இங்குக் கிடைக்கின்றன. செம்பும் கோபால்ட்டும் சாம்பியாவிலும், பாசுபேட்டு வட ஆப்பிரிக்கா, செனீகல் (Senegal), தோகோ (Togo), போன்ற பகுதிகளிலும், தகரம் செயிராவிலும் நைசீரியாவிலும் கிடைக்கின்றன. இக்கனிப்பொருள்களின் உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்களும் பங்கு கொள்ளுகின்றன.
மின்சாரம்: தென் ஆப்பிரிக்காவைத் தவிர ஏனைய ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் மின்சாரத்தைப் பயன்படுத்துவது மிகக் குறைவு. தென் ஆப்பிரிக்க நாடு மட்டும் ஆப்பிரிக்காக் கண்டத்தின் மின்சார உற்பத்தியில் பாதியைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆப்பிரிக்காவில் நிலக்கரியும் இரும்பும் உலக மதிப்பீட்டில் 4 விழுக்காடாகும். இங்குப் பெட்ரோலியம் 11 விழுக்காடும், இயற்கை வாயு 8 விழுக்காடும் இருப்பிருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இவற்றைப் பயன்படுத்த ஆப்பிரிக்கர்களால் இயலவில்லை. ஆப்பிரிக்கர்கள் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்தால் உலக உற்பத்தியில் 40 விழுக்காடு ஆப்பிரிக்காக் கண்டத்திலிருந்து கிடைக்கக்கூடும். ஆனால், இன்று கிடைப்பதோ ஒரு விழுக்காடு அளவு தான். கிடைக்கும் மின்சாரமும் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படவும் இல்லை.
சார்பியாவில் செம்பு உற்பத்தி
செய்பொருள்கள்: கைவினைஞர்கள் செய்யும் பொருள்களும், இக்காலத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும். பொருள்களும் இக்கண்டத்தில் உண்டு. மரபு வழியாக ஆப்பிரிக்கக் கைவினைஞர்கள் உருவாக்கும் செய்பொருள்கள் ஆப்பிரிக்காவின் எல்லாப் பகுதிகளிலும் பயன்படுகின்றன. ஆனால், தனிச் சிறப்பு வாய்ந்த செய்பொருள்கள் நகர்ப் புறங்களில் குறிப்பாக, வட ஆப்பிரிக்காவில் பெரும்பாலும் பயன் படுத்தப் பெறுகின்றன. பெரும்பாலான நாடுகளில் தொழிற்சாலைகள் இன்றும் உருவாக்கப் பெறவில்லை. வட ஆப்பிரிக்காவிலும், எகிப்திலும் சிறிதளவு உருக்குத் தொழிற்சாலைகளும் பஞ்சாலைகளும் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் தொழிற்சாலைகள் பெருவளர்ச்சி பெற்றுள்ளன.
மக்கள் தொகை: ஏறக்குறைய 48 கோடி மக்களைக் கொண்டது ஆப்பிரிக்காக் கண்டம். இக்கண்டத்தில் மக்கள் நெருக்கம் மிகக்குறைவு. இதற்குக் காரணம் இக்கண்டத்தின் மொத்தப் பரப்பில் மூன்றிலொரு பங்கு பாலைநிலமாக இருப்பதாகும். ஏனைய பகுதிகளை முட்புதர்கள் மூடியுள்ளன. ஐரோப்பா, வட அமெரிக்கா, தெற்கு ஆசியா போன்ற கண்டங்களுடன் ஆப்பிரிக்காவை ஒப்புநோக்கினால் இங்குப் பெரும்பாலான பகுதிகளில் மக்களே வாழவில்லையோ என்ற முடிவுக்கு வரக்கூடும். ஆற்று வடிகால் பகுதிகளில் மக்கள் மட்டும் நிறைய வாழ்கின்றனர். குறிப்பாகக் கீழ் நைல் ஆற்று வடிகால் பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுதி. பத்து இலட்ச மக்களைக் கொண்ட நகரங்கள் ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஒரு சிலவே உள்ளன. எகிப்தில் கெய்ரோவும் அலெக்சாந்திரியாவும், மொராக்கோவில் காசாபிளாங்காவும், தென் ஆப்பிரிக்காவில் சோகன்சுபர்க்கும் மாநகரங்களாம்.
இக்கண்டத்து மக்களை மூன்று பெரும் பிரிவின-