ஆபிரர்கள
513
ஆபு
களையும் விளைலித்து நாட்டு மக்களிடையே புதுமுறை வேளாண்மையில் பற்றுதலை உண்டாக்கினார். சென்னை மாநில ஆளுநர், பண்டிதரின் இல்லம் வந்து தங்கிப் பயன்மிகத் தரும் பண்ணையையும், மருந்துசெய் மாபெரும் சாலையினையும், மின் அச்சகத்தையும் கண்டு வாழ்த்தினார். ஆபிரகாம் அருளாளருக்கு ‘இராவ் சாகிபு’ என்ற பட்டத்தை ஆங்கில அரசு அளித்தது.
கின்னரி (வயலின்), வீணை, வாய்ப்பாட்டு முதலிய கலைகளைத் தஞ்சையிலிருந்த நல்லாசிரியர்களிடம் பயின்று இசையதிவு பெற்றார். சாமியப்பபிள்ளை என்னும் மேதையிடம் வாய்ப்பாட்டும், அரண்மனை வீணைப் பெரியார் வெங்கிடாசல ஐயரிடம் வீணையும் கற்றுக் கொண்டார். தம் குடும்பத்தினர் யாவரும் இசை கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்து உதவினார். வழி வழியாக இசைக் குடும்பமாகப் பண்டிதர் குடும்பம் திகழ்ந்து வருகிறது. இவர் எழுதிய கருணாமிருத சாகரம் என்னும் இசையாராய்ச்சி நூலை வியந்து போற்றித் தமிழகப் புவவர் பலர் பாராட்டியுள்ளனர்.
வீ.ப.கா.சு.
ஆபிரர்கள் பண்டைக் காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்திருந்த ஓரினமக்கள், இவர்கள் கீழ்ச் சிந்து வெளியையும் மேலை இராசபுதனத்தையும் ஒட்டியிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள். பதஞ்சலி என்பார் எழுதிய மாபாடியத்திலும் பெரிபுளூசு என்னும் நூலிலும் தாலமி என்பாரின் நூலிலும் ஆபிரர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். சமுத்திர குப்தரின் வீரவெற்றிகளைக் குறிக்கும் அலகாபாத்துக் கற்றூண் சாசனத்திலும் ஆபிரர்கன் குறிக்கப்பட்டுள்ளனர். ஆபிரர்கள் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் மேலை இந்தியாவில் காகர்களுக்கும், குப்த மன்னர் சமுத்திர குப்தனுக்கும் பணியாற்றியவர்கள்.
ஆபு புகழ் மிக்க சிகரம். இது இராசசுத்தான் மாநிலத்தில் சிரோகி (Sirohi) மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ளது. இங்குள்ள ‘குரு சிகரம்’ கடல் மட்டத்திலிருந்து 1883 மீட்டர் உயரத்தில் உள்ளது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சாஞ்சிக் கல்வெட்டில் காணப்படும் ‘அபோதா’ என்ற ஊரே இக்கால ‘ஆபு’ ஆகும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். பிளினி குறித்துள்ள ‘மான்சு காப்பிடாலியா’ என்னும் ஊரும் ஆபுவையே குறிக்கும் என்று சிலர் கருதுகின்றனர். மிகுதியான மழையும் (ஆண்டுக்கு 170 செ. மீ.) அடர்ந்த காடுகளும் இங்கிருப்பதுபோல் இராசபுதனத்தில் வேறெங்கும் இல்லை. பர்கூசன் (Fergusan) என்பவர், இங்குள்ள நகிதலம் என்ற ஏரியினைப் போல் அழகான ஏரி இந்தியாவில் கிடையாது என்று கூறுகிறார். மலையின் மேல் இளவேனிற் காலத்தில் பூக்கும் காளப்பூ, பல கி.மீ. தூரம் நறுமணம் வீசும். நீலநிறமுடைய ‘காரா’ என்ற மலர், ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும். பில்லர் (Bhils) என்னும் ஆதிக்குடிகள் இங்கு வாழ்கிறார்கள். இந்தியா ஆங்கிலேய ஆட்சியின்கீழ் இருந்தபொழுது ‘ஆபு’ ஐரோப்பியரின் கோடை வாசத்தலமாக இருந்தது. ஆபுவிலிருந்து 24 கி.மீ. தொலைவில் ஆபு சாலை (Abu Road) என்ற இருப்புப் பாதை நிலையம் உள்ளது.
ஆபு, பரமார அரசர்களின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. ஆபுலில் சைவமும் சமணமும் சிறந்திருந்தன. இங்குக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் சைவம் மேலோங்கி இருந்ததாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, உச்சயினில் உள்ள சைவ மடத்தின் தலைவர் ஆபுவில் உள்ள கோட்டேசுரன் கோயிலைப் புதுப்பித்தது, தீர்த்தக் குளத்திற்குச் சுவர் கட்டியது, கற்பலகைகளை அதனைச் சுற்றி அமைத்தது. இரண்டு புதிய கோயில்கள் கட்டியது ஆகியவை பற்றிக் குறிப்பிடுகிறது. மரபுச் செய்திகள் வாயிலாகப் பழங்காலத்தில் இருந்தே ஆபு ஒரு புண்ணியத் தலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது எனத் தெரிகிறது. இங்குள்ள சீவத்தசாமி சிரீ மகாவீர சமணக் கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்று, மகாவீரர் ‘அற்புத பூமி’ என்ற இடத்திற்கு வருகை புரித்ததைக் குறிப்பிடுகிறது.
ஆபுலில் நான்கு சமணக் கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் ‘தில்வாரா’ என்ற கிராமத்தின் பெயரை வைத்துப் பொதுவாகத் ‘தில்வாராக் கோயில்கள்’ எனச் சொல்லப்படுகின்றன. இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்குள் சோலங்கியார் ஆட்சியில் கட்டப்பட்ட கோயில்களாகும். இந்நான்கு கோயில்களுள் இரண்டு கோயில்கள் ஆபுவின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன. இவ்விரண்டு கோயில்களுள் ஒன்று விமலவாசகி கோயில், மற்றொன்று உலூனவாசகி கோயில். விமலலாசசி கோயில் முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடையது. இக்கோயிலைப் பரமார அரசர் சோமசிம்மன் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1230-ஆம் ஆண்டு தேசபாலர் என்பலர் கட்டினார்.
இவ்விரண்டு கோயில்களும் ஒரே கலைப் பாணியைப் பெற்றுத் திகழ்கின்றன. இங்கும் கிடைக்கும் வெண் பளிங்குக் கல்லினால் இவை கட்டப்பட்டுள்ளன்.
விமலவாசகி கோயில் சமணக் கோயில்களிலேயே முழு அமைப்பைப் பெற்றுத் திகழும் கோயிலாகும்.