ஆம்பர்
519
ஆம்பர்க்கு
ஆம்பர் இராசகத்தான் மாநிலத்தின் தலைநகர். செய்ப்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆம்பூரில் இருக்கும் சூரியன் கோயில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் உள்ள கற்றூணில் இருக்கும் கல்வெட்டு இதயைத் தனிப்பட்டவர் ஒருவர் கட்டினார் என்று கூறுகிறது. இக்கோயில் பழங்கலைக் கூறுகள் பொதிந்துள்ள கோயிலாகும். ஆம்பரில் உள்ள இலக்குமிநாராயணர் கோயில் பாலாபாய் என்னும் அரசியால் கட்டப்பட்டது. ஆம்பரின் புகழ் அக்பரின் காலத்தில் பரந்திருந்தது. அப்பேரரசர் ஆண்ட காலத்தில் மானசிங்கு என்பவர் இங்குச் செகத்சுவரவன்சி என்னும் கோயிலைக் கட்டினார். இக்கோயிலின் நுழைவாயில் கலைக் கூறுகளும், காண்போரைக் கவரும் வண்ணமும் கொண்டது. மேலும், இங்குள்ள நுட்ப வேலைப்பாட்டுடன் அமைந்த கருடனின் காட்சி மண்டபம் ஒரு சிறந்த கலைக் கூடமாகும். இங்குப் பல அரண்மனைகளும் சமணக் கோயில்களும் உள்ளன. சவாய் செய்சிங்கு மரபினரால் கட்டப்பெற்ற கண்ணாடி மாளிகையை இன்றும் கண்டு களிக்கலாம். குன்றின் மீது கட்டப்பெற்றுள்ள இம்மாளிகையைக் காண மக்கள் நாளும் ஆயிரக் கணக்கில் சென்று வருகின்றனர்.
ஆம்பரிலுள்ள கட்டடங்கள்
ஆம்பர்க்கு மேற்குச் செருமனியின் இரண்டாம் பெருநகரமாகும். இதுவே அந்நாட்டின் தலை சிறந்த தொழிற்சாலை மையமுமாகும். ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள மாபெரும் துறைமுகங்களில் ஆம்பர்க்கும் (Hamburg) ஒன்றாகும்.
ஆம்பர்க்கு மாநகரம் எல்பு ஆற்றங்கரையில், அந்த ஆறு வடகடலில் கலக்கும் நுழைவாயிலான கக்சுகேவன் (Cuxhaven) என்னும் ஊரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆம்பர்க்கின் குறுக்காக அல்சுடர் ஆறு பாய்த்தோடி, அந்நகரில் இருபெரும் ஏரிகளைத் தோற்றுவித்துள்ளது. இவ்வேரிகளைப் பினென் அல்சுடர் என்றும் அச்சன் அல்சுடர் என்றும் கூறுவர். நகரின் குறுக்கிலும் நெடுக்கிலும் பல குறுகிய கால்வாய்கள் குறுக்கிடும். ஆம்பர்க்கின் பரப்பளவு 748 ச.கி.மீ.
இரண்டாம் உலகப் போரின்போது வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான செருமானிய நகரங்களுள் ஆம்பர்க்கும் ஓன்றாகும். அப்போரின்போது அந்நகர்த் துறைமுகத்தின் பெரும்பகுதிகளும் வாணிக மையங்களும் தரைமட்டமாயின. பழைய திருச்சபைகள் பலவும் அழகான வீடுகளும் பேரழிலிற்காளாயின. போருக்குப் பின்னர்த் துறைமுகமும் வாணிக மையங்களும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.
இரசாயனத் தொழிற்சாலைகள், இரும்பு உருக்குத் தொழில்கள், மரமறுக்கும் ஆலைகள் போன்றவை ஆம்பர்க்கின் சிறப்பான தொழில்களாகும். கச்சாப் பொருள்களைப் பயன்படுத்திப்-
ஆர்பர்க்கு நகரம்