உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமூர்க் கவுதமன் சாதேவனார்

530

ஆமென்

சீனர்கள் இதைக் கரும்வேதாளம் என்பர். பருவக் காற்று மழையால் இவ்வாற்றில் கோடையில் வெள்ளம் கரைபுரண்டோடும். பனிக் கட்டிகள் மே மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய உருகி விடுவதால் ஆமூர் ஆறு கப்பற் போக்குவரத்துக்கும் பயன்படுகிறது.

ஆமூர்க் கவுதமன் சாதேவனார் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயரிலிருந்து, ஆமூர் இவரது ஊராகலாம் என்று தெரிகிறது. இவருடைய ஒரே பாடல் அகநானூற்றின் 159-ஆம் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் ஆசிரியர் பெயர் சில ஏடுகளில் ஆவூர்க் காவிதிக சாதேவனார் என்றும் காணப்படுகிறது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல் பிரிவிடை வேறுபட்ட தலை மகளைத் தோழி வற்புறுத்தும் பாங்கில் அமைந்துள்ளது. இவர் தம் பாடலில் வானவன் என்னும் தலைவனை, ‘வில்கெழு தடக்கை வெல்போர் வானவன்’ என்று பாராட்டியுள்ளார். ஆமூர் கொடுமுடி என்பவனால் காக்கப்படுவதும், நெடிய மதில்களை உடையதுமாகும் என்று அதன் சிறப்பினை விளக்கியுள்ளார். காண்க: ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்.

ஆமூர் மல்லன்: பண்டைத் தமிழகத்தில் ‘முக்காவல் நாடு’ என்ற பெயரில் ஒரு நிலப்பகுதி இருந்தது. அன்றைய தமிழகத்தில் இருந்த சிறுநாடுகளுள் ஒன்றுதான் முக்காவல் நாடாகும். அம்முக்காவல் நாட்டில் ஆமூர் என்னும் ஓர் ஊர் இருந்தது. அவ்வூரில் வாழ்ந்தவன் ஆமூர் மல்லன். மல்லன் என்ற சொல் செல்வமும் வலிமையும் உடையவன் என்று பொருள் படும். வாழ்ந்த ஊரால் பெயர் பெற்ற அவன், பலரும் போற்றத்தக்க முறையில் ஆமூரில் இருந்து கொண்டு ஆட்சி நடத்தி வந்தாள். நல்லாட்சி நடத்தியதால் நாட்டில் வளம் பெருகிறது. அவனை நாடி வந்தோர் பலரும் கள்ளுண்டு களிப்பில் திளைத்தனர். அவன் நாட்டின் வளமும், அவன் உடலின் வலிமையும் திசை எட்டும் பரவின. அவன் வாழ்ந்த காலத்தில் சோழ நாட்டை ஆண்டு வந்தவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்பவனாவான். அவனுக்கும் அக்கிள்ளிக்கும் யாது காரணம் பற்றியோ பகை மூண்டது. பகை முற்றியதால் சோழன், ஆமூர் மீது படையெடுத்தான். சோழனுக்கும் மல்லனுக்கும் கடும்போர் நடந்தது. மல்லனோ போர்த்திறன் மிக்கவன் எனினும் சோழப் பேரரசனுக்குமுன் அவன் ஒரு குறுநில மன்னனே, மல்லில் வல்ல மல்லனோ பலவகை உபாயங்களையெல்லாம் பயன்படுத்திப் போரிட்டான். இறுதியில் பெருநற் கிள்ளியின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து வீழ்ந்து இறந்தான். பசித்த யானை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்பது போலப் போர் வெறி கொண்ட சோழனோ, மல்லனது தலையுங் காலும் சிதைய மோதிப் போரிட்டு வென்றான் என்று புறநானூற்றின் 80-ஆம் பாடலில் சாத்தந்தையார் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் பாடும் பொருநனாகத் திகழ்ந்தவன் ஆமூர் மல்லன் ஆவான்.

கே.நா.

ஆமூர் முதலி1 கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவர் காலத்தில் விளங்கிய வள்ளல். ஆமூரைச் சேர்ந்தவராதலின் களப்பாளன் என்னும் பெயருடைய இவர் ஆமூர்முதலி என்று வழங்கப்பெற்றார். காளமேகப் புலவர் இவரிடம் சென்று இவர்மீது வெண்பாப் பாடத் தொடங்கிப் பாதிவெண்பாப் பாடி முடிக்கு முன்னரே, தக்க பரிசளித்துச் சிறப்பித்தான். “உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற ஒருகோடி, வெள்ளங்காலந்திரித்து விட்டோமே-உள்ளபடி-ஆதூர் முதலி அமரர்கோன் இங்கிருக்கப் போமூர் அறியாமற் போய்” என்பது காளமேகம் பாடிய வெண்பாவாகும்.

ஆமூர் முதலி2 நெற்குன்றவாணர் என்னும் பெயர் கொண்ட புலவர்; நெற்குன்றூரில் வேளாண் குலத்தே தோன்றியவர்; கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றவர். திருப்புகலூர் அந்தாதி இவரால் பாடப்பட்டது. இவர் பெயர் நெற் குன்றவாண முதலியார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆமென் பண்டைய எகிப்திய நாகரிகத்தில் புதிய இராச்சியத்தின் போது (New Kingdom) அவர்களின் முக்கிய கடவுளாக விளங்கியவர். அந்தத் தேவனை வழிபாடு செய்த முக்கிய மையம் தீப்சு என்னும் ஊராகும். இது மேலை எகிப்தில் இருந்தது. ஆமென் (Amon) என்ற தெய்வத்தை எகிப்தியர்கள் ரீ (Re) என்னும் சூரிய தேவனுடன் இணைத்து. ஆமென்-ரீ-என்றனர். இத்தெய்வத்திற்கு மானுட உருவம் கொடுத்துத் தலையில் இரு இறகுகளையும் கொடுத்தனர். தலையிலிருந்து தோள்வரை நீண்டு தொங்கும் பட்டைக் கயிறு ஒன்றையும் இணைத்துக் கொண்டனர்.

ஆமென் கிரீசில் தீப்சு (Thebes) நகர்க் கோயிலிலுள்ள கடவுளாக இருப்பதோடு கார்னாக்கு (Karnak) என்னுமிடத்திலுள்ள கோயிலிலும் இவரே கடவுளாக இருக்கிறார். ஆமென், எகிப்தியர்களுக்கும் கடவுளாக இருந்தார். சூரியக் கடவுளாக இவரை எகிப்தியர் கருதினர். பாமர மனிதனைப் போல் இவருக்கு உருவம் கொடுக்கப்பட்டது. இலிபியா பாலை நிலத்தில் இவரது கோவிலொன்று இருந்தது. ஆடு இவரது வாகனமாகும். ஆமெனின் மனைவியின்