உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமோசு

531

ஆய்குடி

பெயர் முட்டு. இக்கடவுளின் இசைவினைப் பெற்றே எகிப்தியர்கள் நாட்டை ஆள வேண்டும் என்று கருதினர். இதைக் கருத்தில் கொண்டே மகா அலெக்சாந்தர் எகிப்தியரை வென்று இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

ஆமோசு பண்டைய எகிப்திய அரசர்களுள் ஒருவர். இவர் கி.மு. 1570 முதல் 1545 வரை ஆட்சி செய்தார். இவரை முதலாம் அகமாக அல்லது முதலாம் அமரசிசு என்றும் கூறுவர். ஆமோசுதாம். இக்சாசு என்ற ஆசிய நாடோடிகளிடமிருந்து எகிப்தை இறுதியில் மீட்டவர். இக்சாசு நாடோடிகள் சற்றேறக் குறைய இரண்டு நூற்றாண்டுகள் எகிப்தை வெற்றி கண்டு ஆண்டவர்கள். ஏனைய எகிப்திய அரசர்கள் மேற்கொண்டு முடிக்காமல் விட்ட பணியை ஆமோசு செய்து முடித்தார். அட்வாரட்டு என்னும் இக்சாசு நாடோடிகளின் இறுதிக் கோட்டையைக் கைப்பற்றி, படையெடுப்பாளர்களை எகிப்திலிருந்து விரட்டித் தென் பாலசுத்தீனம் வரை அவர்களைப் பின் தொடர்ந்து, அங்கு அவர்களின் படையை ஐந்தாண்டுகள் முற்றுகையிட்டு, இறுதியில் அவர்களை அழித்தார். பின்னர் ஆமோசு, பாலர்த்தீனத்தின் பெரும் பகுதியைத் தம் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து, கிழக்கு மத்திய தரைக் கடற்கரைப் பகுதி வரை எகிப்தியரின் ஆட்சியைப் பரப்பினார். பின்னர்த் தென்பகுதியின் பக்கம் திரும்பி நூபியாவை மீண்டும் கைப்பற்றிக் கொண்டார். அவரையடுத்து அவர் மகன் முதலாம் அமென்கோடப்பு என்பார் அரியணை ஏறினார்.

ஆமோநைட்டுகள் சோர்டான் நதிக்கரையில் வாழ்ந்த பழங்குடி மக்கள். இசுரேலியர்களின் எதிரிகளாக இவர்கள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவர்கள் எபிரேய மதத்தையும் நாட்டையும் பழிப்பவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்கள் தாவீது என்பவரை நண்பராகக் கொண்டவர்கள். ஆமோநைட்டுகளும் (Ammonites) இசுரேலியர்களும் கலப்பு மணம் செய்து கொண்டனர். சாலமன் அரசர் இப்பிரிவைச் சார்ந்த பெண்களைப் பெரிதும் போற்றினார். மோலக்கு (Molech) என்ற அமோநைட்டுகளின் தேவதைக்கு இவ்வரசர் கோயில் கட்டினார். இப்பிரிவினர் காலப் போக்கில் நபாதீன் அராபியருடன் இணைந்து விட்டனர்.

ஆமோரைட்டுகள் செமிட்டிய இனமக்கள்: யூதர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்; சோர்டானுக்குக் (Jordan) கிழக்கும் பகுதியில் வாழ்ந்தவர்கள். ஆமோரைட்டுகள் (Amorites) தொடக்கக்கால யூதர்களுடன் இடையறாது போரிட்டார்கள். அவர்களைச் சால் (Saul) என்பார் தோற்கடித்தார். தாவீது (David) என்பார் அவர்களைச் சரணடையச் செய்தார். எபிரேய (Hebrew) அரசு சிதறுண்டபோது மீண்டும் அவர்கள் விடுதலையடைந்தனர்.

ஆய்1 சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல்களுள் ஒருவன். அண்டிரன், ஆய் அண்டிரன் எனவும் அழைக்கப் பெற்றான். காண்க: அண்டிரன்.

ஆய்2 மைசூர்ப் பகுதியிலுள்ள திரு நாராயண புரத்தின் வாழ்ந்த ஒரு வைணவர்; தமிழும் வடமொழியும் வல்லவர்; ஆண்டாளின் திருப்பாவைக்கு ஈராயிரப்படி. நாலாயிரப்படி என்னும் இரண்டு விரிவுரைகள் (வியாக்கியானங்கள் செய்துள்ளார். ‘மாறன் மனம்’ எனப் பொருள் படும் ஆச்சாரிய இருதயம், சீவசன பூடணம் என்னும் நூல்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளார்.

ஆய் அண்டிரன் சங்க கால வள்ளல்களுள் ஒருவன். காண்க : அண்டிரன்.

ஆய் எயினன் சங்க காலக் குறுநில மன்னருள் ஒருவனும் வள்ளலுமாவான்; வேளிர் மரபினன். ‘வெளியன் வேண்மான் ஆய் எயினன்’ விரைந்து செல்லும் குதிரைகளைக் கொண்டவன்; புள்ளிற்குக் காவலாயிருந்தவன்; தன்னைப் பாடியவர்க்குப் பரிசாக யானைகளை ஈயும் இயல்பினன்.

நன்னன் என்பவன், புன்னாட்டைக் கடிந்த காலத்தில், எயினன் பாழியின்கண் ‘அஞ்சல்’ என்று கூறி, அந்நாட்டினரைப் பாதுகாத்தான். அதனால் நன்னனுக்கும் எயினனுக்கும் பகைமை தோன்றியது. இறுதியில் நன்னனுக்குத் துணையாயிருந்த மிஞிலி என்பவன், இவ்லெயினனோடு பாழிப் பறந்தலையில் போரிட்டான். அப்பொரில் எயினன் இறந்து பட்டான். அப்பொழுது பறவைகள் எயினன் உடம்பின் மேல் ஞாயிற்றின் வெப்பம் தாக்காதவாறு சிறகுகளால் வெயிலை மறைத்துப் பறந்து சுழன்றன. நன்னன் அதனைக் காணப்பொறாது மறைந்திருந்தான். எயினன் இறந்து பட்டதை அறிந்து வேளிர் மகளிர் வருந்தி அழுத பூசலை அகுதை என்பவன் தீர்த்து ஆறுதல் செய்தான்.

ஆய் எயினன் வாய்மொழி தவறாதவன்: ‘அஞ்சல்’ என்ற சொல்லினன்; ‘உயிர் கொடுத்தனனே சொல்லியதமையாது’ என்று புகழப் பெற்றவன். இவனைப் பரணர் தம் அகநானூற்றுப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார் (அகம். 142, 181, 208, 396)

த.கோ.

ஆய்குடி சங்க கால வள்ளல்களுள் ஒருவனான ஆய் என்பானது ஊர். ஆய் வள்ளலைப் பாராட்டும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அவனுடைய