உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுப் பயணம்

534

ஆய்வுப் பயணம்

இதன்பின், கி.பி, 1450 - ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளில், ஐரோப்பியப் பயணிகளால் உலகத்தின் பெரும்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்கள் நாகரிகமாய் வாழக்கூடிய இடங்கள் பன்மடங்காக விரிவாக்கப்பட்டன. துருக்கியர்கள் கி.பி. 1453-இல் கான்சுடாண்டிநோபிள் என்னும் நகரைக் கைப்பற்றியதன் விளைவாய்க் கீழை நாடுகளுடன் ஐரோப்பா செய்து வந்த வாணிகம் தடைப்படலாயிற்று. அதனால், கீழை நாடுகளுக்குப் புது வழிகள் கண்டு பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தியாவிற்கு ஒரு கடல் பாதை கண்டுபிடிப் பதில் போர்ச்சுகல், இசுபெயின் (Spain) ஆகிய இரு நாடுகளும் மும்முரமாயின. போர்ச்சுகல் கடல் பயணத்தில் ஆர்வம் கொள்ளக் காரணமாய் இருந்தவர் ‘கடற்பயண மீகான்’ (Navigator) என்றழைக்கப்பட்ட அந்நாட்டு அரசர் என்றி ஆவார். அவர் மாலுமிகளுக்கான ஒரு பயிற்சிச் சாலையை நிறுவியதோடு கடலில் எழும் புயலையும் சமாளித்துக் கொண்டு செல்லக்கூடிய கப்பல்களையும் கட்டினார். ஆண்டுதோறும் அப்பயிற்சிச் சாலையில் தேர்ச்சி பெற்ற மாலுமிகள் அட்லாண்டிக்குப் பெருங்கடலில் பயணம் செய்து ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளைக் கண்டுபிடித்து வந்தனர்.

பார்த்தலோமியூ தயசு (Bartholomew Diaz) என்பவரால் கண்டறியப்பட்ட நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope)யையும், வாசுகோட காமரவால் அறியப்பட்ட இந்தியாவையும், கிறித்தோபர் கொலம்பசால் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவையும், எப்போகல் (Epochal) என்பவர் சாதனைகள் உள்ளடக்கி, உலகின் பரப்பை விரிவாக்கிக் காட்டின. அதோடு, உலகம் உருண்டையானது என்னும் கோட்பாட்டில் துணிகரமான துணிகரமான பயண முயற்சியை மேற்கொண்ட பெர்டினாண்டு மெக்கல்லனின் கண்டுபிடிப்பையும் கூட எப்போசலின் முயற்சி உள்ளடக்கிற்று. இசுபானிக ஆய்வுப் பயணிகளான பால் டி சாடோ (Bal De Soto), கோரோ வாடோ (Coronado) ஆகியோர், அமெரிக்காவின் பெரிய பகுதிகளைக் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கண்டறிந்தனா. சாமுவேல் டி. சாம்பளைன் (Samuel de Champlain), இலா சாலி (La Salle), உலூயிசு சோலியண்ட்டு (Louis Jollient), சேக்யுசு மாக்குட்டீ (Jacques Margcutte) போன்ற பிரஞ்சு நாட்டு ஆய்வுப் பயணிகள், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளைக் கண்டுபிடித்தனர்.

இசுபானீசுக்காரர்களுக்கும், போர்ச்சுகீசியர்களுக்கும் மட்டிலுமே உரிமை உடையதால் இருந்த புதிய வாணிக வழிகள், கீழை நாடுகளுக்கு மற்றொரு வழியைக் கண்டறியும் முயற்சிகளைத் தூண்டலாயின. இதனால், வட கிழக்குக் கணவாயும், வட மேற்குக் கணவாயும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், ஏகபோக உரிமை உடைய இசுபானீசுக்காரர் போர்ச்சுகீசியர் வழிகள், விரைவிலேயே பசுபிக்குப் பெருங்கடலில் மேற்கொண்ட ஆங்கிலேயர், தச்சுக்காரர் பயணங்களால் போட்டிக்கு உரியதாயின. திரேக்கு (Drake), தாசுமால் (Tasman), தாம்பியர் (Dampier), கூக்கு (Cook). பெரிங்கு (Bering), வான்கோன்வர் (Vonconver) போன்றோராலும் மற்றவர்களாலும் மேற்கொள்ளப்பட்ட கடற் செலவுகளின் வாயிலாகப் பசுபிக்கின் பெரும்பாலான பெரிய தீவுகளும் கடற்கரைப் பகுதியும் அறியப்பட்டன. ஆசுத்திரேலியாவின் உட்பகுதி கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் ஆய்வுக்குரியதாயிற்று. இதே நூற்றாண்டின் இறுதியில் இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

ஆர்க்டிக்கு ஆய்வுப் பயணம்: ஆர்க்டிக்கு அண்டார்க்டிக்கு ஆய்வுப் பயணம் 20-ஆம் நூற்றாண்டில் முதன்மையான சாதனையாயிற்று. எனினும் இந்த நிலங்களைப் பற்றிய முன்னோடி முயற்சிகள் பல உள்ளன. இப்போது மார்செல்லியசு (Marscilles) என்று அழைக்கப்படும் முன்னாளைய கிரேக்கத்தில் மசிலியாவைச் (Massilia) சேர்ந்த பித்தியாசு என்பவர், ஒருகால் முதல் துருவப் (Polar) பயணி என்று கருதப்படலாம். இவர் ஏறத்தாழ, கி.மு. 320-இல் நில நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து பிரிட்டனுக்கும், அதனைத் தாண்டி ஆர்க்டிக்கு நிலமாகிய தூலுக்கும் (Thule) கடல் பயணம் செய்தார். தூல் ஒரு பனிப பகுதி; ஐரீசுப் பாதிரிகள் கி.பி. 800-ஆம் ஆண்டளவில் பனிப் பகுதியில் முதன்முதலில் குடியேறினார்கள். நார்வேக்காரர்கள் பனிப்பகுதியையும், கிரீன்லாந்தையும் அடைந்து, கி.பி. 9,10-ஆம் நூற்றாண்டுகளில் அங்குக் குடியேறினார்கள்.

இதன்பின் ஆர்க்டிக்கு ஆய்வுப் பயணத்தில் இடைவெளி தோன்றியது. ஆங்கில, தச்சு வியாபாரிகளால் நின்று போயிருந்த பயணத் தொடர்பு கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆர்க்டிக்குப் பயணத்தால் அவர்கள் வடகிழக்கு அல்லது வட மேற்குக் கணவாயினைத் தேடிக் கண்டறியும் பொறுப்புக்கு உள்ளானார்கள். இத்தகைய முயற்சியால், தூரக் கிழக்குப்பகுதியைக் கண்டறிவதற்குரிய ஆர்வத்தையும் கூடப் பெற்றார்கள், இதன் விளைவாக இலண்டனில் வீரதீர சாகசக்காரர்களின் குழு ஒன்று (Company of Merchant Adventure) நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, கி.பி. 1153 - இல் சர் கியு விக்கெளலி (Sir Hugh wikoughley) என்பாரின் தலை-