உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுப் பயணம்

535

ஆய்வுப் பயணம்

மையில் மூன்று கப்பல்களைப் பயணப் படையெடுப்பாக அனுப்பி வைத்தது. அவர்தம் இரண்டாம் தளபதியான இரிச்சர்டு சான்சிதார் (Richard Chancethor), ஆர்க்கேஞ்சல் (Archangel) பகுதிக்குச் சென்று பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மண்டலம் முழுவதையும் சுற்றினார். சார் இரானைச் (Czar Iran) சந்தித்து, மிசுகோவி நிறுவனம் (Muscovy Company) ஏற்படுத்துவது தொடர்பாகவும், கி.பி. 1555-இல் அது உருசியாவுடன் வாணிகத் தொடர்பு கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆர்டிக்கைப் பற்றிய முனைப்பான ஆய்வுப் பயணம் கி.பி. 1840-இல் மீண்டும் தொடங்கிற்று. இந்த முயற்சி பிரிட்டிசு ஆய்வாளர் சர் சான் பிராங்கிளின் (Sir John Franklin) முன்னின்று நடத்திய படையெடுப்பின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதாகும். சர் சான் பிராங்கிளின் வடமேற்குக் கணவாயைக் காண்பதற்காகக் கி.பி. 1845-இல் ஆர்டிக்கிற்குப் போயிருந்தார். பிராங்கிளினும் அவருடன் சேர்ந்த 129 பேரும் காணாமற் போனதால், அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகப் பல குழுக்கள் ஆர்டிக்குப் பகுதியைப் பரிசோதனைக் களமாக்கிக் கொண்டன. ஆயினும் காணாமற் போனவர்களைக் கண்டறிவதில் அவை தோல்வி அடைந்தன. ஆர்டிக்குத் தீவுகளின் வழியே-அதாவது, கனடாவின் வடக்குப் பகுதியின் வழியே, தேடிச் சென்றவர்கள் மேற்கில் தொலைதூரம் பயணம் செய்தார்கள். உரோல்டு அமுண்டுசென் (Roald Amundsen) என்பவர் 1903-1906 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கடல்வழிப் பயணம் செய்து, பசுபிக்குப் பெருங்கடலை அடைந்தார். இவரது செயற்பாடு 400 ஆண்டுக் காலமாய் முயன்று வந்த ஆய்வின் வெற்றியாக அமைந்தது; இவரே முதன் முதல் வடமேற்குக் கணவாய்ப் பகுதிகளில் பயணம் செய்தவர் ஆவார்.

ஆர்டிக்கில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் வட துருவ முனையை அடைவதற்கு மேலும் பல முயற்சிகளைத் தூண்டிவிட்டன. அமெரிக்கா ஆய்வாளராகிய இராபர்ட்டு ஈ பியரி (Robert E. Peary) என்பவர் முன்னின்று நடத்திய ஒரு குழு, 1909-இல் வட துருவத்தைச் சென்றடைந்தது. இவரது குழுவில் மேத்தியூ ஏ. என்சன் (Mathew A. Henson) என்பாரும் நான்கு எசுக்கிமோக்களும் இருந்தனர், பியரி, தமது படையெடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், மற்றோர் அமெரிக்க ஆய்வாளராகிய பிரடரிக்கு ஏ. குக்கு (Fredrick A. Cook) என்பவர், தாம் வடதுருவத்தை ஓர் ஆண்டிற்கு முன்னதாகவே (1908-இல்) சென்றடைந்து விட்டதாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். விமானக் கண்டுபிடிப்புக்குப் பின்னர் ஆர்டிக்கு, அண்டார்டிக்குப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வது என்பது எளிதாயிற்று. அமெரிக்க ஆய்வாளர்கள் இரிச்சர்டு ஈ பைர்டு (Richard E. Byrd), பிளாய்டு பெண்னெட்டு (Floyd Bennett) ஆகிய இருவரும் 1926-இல் நேரடியாகவே வட துருவத்திற்குப் பறந்து சென்றனர். பைர்டும் (Byrd) நார்வே-அமெரிக்கா விமானி பெர்ண்ட்டு பால்கெனும் (Bernt Balchen) 1929-இல் தென் துருவத்தின் மேல் பறந்து சென்றனர்.

அண்டார்டிக்கு ஆய்வுப் பயணம்: அண்டார்டிக்கு கி.பி. 1800-இன் தொடக்கத்தில் உலகில் அறியப் படாத ஒரே கண்டமாக இருந்தது. அதன் ஆய்வுப் பயண வரலாறு, தளபதி சேம்சு குக்கின் (Captain James Cook) ‘தீர்மானமும், தீரச் செயலும்’ (Resolution and Adventure) என்னும் கடற்பயணத்தோடு தொடங்குகிறது. இவருக்கு முன்பே கி.பி. 1772-75- இல் பௌவெட்டு (Bouvet). தால்ரிம்பிள் (Dalrymple) ஆகியோராலும், பிறராலும் தென் அட்லாண்டிக்குப் பகுதியைக் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தன என்றாலும் தளபதி சேம்சு குக்கின் ஆய்வுப் பயணத்தின்போது, அவர் தென் சார்சியாவிலுள்ள தீவினைக் கண்டுபிடித்தார். உருசியக் கடற்படையைச் சேர்ந்த பெல்லிங்சு ஆன்சன் (Bellings Hansen) என்பவர் 1819-21-இல் அண்டார்டிக்குக் கண்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு தென் சேண்டுவிச்சு (South Sandwich), பீட்டர் (Peter), அலெக்சாந்தர் ஆகிய இடங்களைக் கண்டுபிடித்தார், அவர் அண்டார் டிக்கின் முதன்மை நிலத்தைப் பார்வையிட்டு இருப்பார். ஆனால், அதுவொரு நிலந்தான் என்பதை அவரால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. எட்வர்டு பிரான்சுபீல்டு (Edward Brans- field), நத்தானியல் பாமர் (Nathaniel Palmer) ஆகியோரின் தலைமையின்கீழ் ஒரு படையெடுப்பு கி.பி. 1820-இல் நிகழ்ந்தது. அவர்கள் இருவரும் நீர் நாய் (Seal) வேட்டைக்காரர்கள். நீர்நாய் வேட்டையில் எதிர்பாராத விதமாய்க் கண்ணில் தட்டுப்பட்டது இந்தத் தீபகற்ப ஆய்வுப் பயணம். மேலும் நீர்நாய் வேட்டைக்காரர்களாகிய வெட்டல் (Weddell), பிசுகோ (Biscoc), கெம்ப்பு (Kemp), பெல்லினி (Beleny) போன்றவர்கள் நீர்நாய்க் குடியிருப்புப் பகுதிகளைத் தேடிச் சில இடங்களைக் கண்டுபிடித்தார்கள்.

தேசிய ஆய்வுப் பயணங்கள், தென் கண்டத்தைப் பற்றிய மனித அறிவை மேலும் வளர்த்தன. தூமாண்ட்டு டீ உர்வில்வீயின் (Dumont D' Urville), தலைமையில் நடத்தப்பட்ட கி.பி. 1837-40 கால எல்லையிலான பிரஞ்சுப் படையெடுப்பும், சார்லசு விவ்கீசு (Charles Wilkes), பிரிட்டு (Brit) ஆகியோ-