உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுப் பயணம்

536

ஆய்வுப் பயணம்

ரின் கீழ் இயங்கிய அமெரிக்க ஆய்வுப் பயணமும் (கி.பி. 1838-42), சேம்சு கிளார்க்கு ராசின் (James Clark Ross) தலைமையில் இராயல் சொசைட்டியின் கூட்டு முயற்சியால் அமைந்த ஆய்வுப் பயணமும் (கி.பி. 1839-43), புதிய பகுதிகளைக் கண்டுபிடித்ததுடன் விக்டோரியாலாந்தையும் (Victoria land) பரிசோதித்தன. நாரிசு என்பவரின் (Nares) ஆணையோடு முதல் நீராவிக் கப்பல் அண்டார்டிக்கு வட்டத்தைக் கி.பி. 1875-இல் கடந்து சென்றது. இந்த ஆய்வுப் பயணம் கடலின் அகம், புறம் பற்றிய ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவிற்று. பெல்சியன் ஆய்வுப் பயணம் (கி.பி. 1897-9) செர்லாக்கியின் (Gerlache) தலைமையில் நடைபெற்றது. திட்டமிடப்பட்ட முதல் கார்கால ஆய்வுப் பயணம், பிரிட்டில் நிகழ்ந்தது. தென் சந்திப்பு ஆய்வுப் பயணம் கி.பி. 1898-1900 ஆண்டுகளில் நார்வேசியன் போர்ச்சுகிரீவிங்கின் (Norwegian Borchgrevink) கீழ்த் தோன்றிற்று.

செருமானியர் ஆய்வுப் பயணம் (1901-03), சுவிடிச எசு.போலார் (Swedish S. Polar) ஆய்வுப் பயணம் (1901-04), இசுகாட்டுத் தேசிய அண்டார்டிக்கு ஆய்வுப் பயணம், ஆர்.எப். இசுகாட்டின் (R.F. Scott) கண்டுபிடிப்பு ஆய்வுப் பயணம் (1901-04) ஆகிய ஆய்வுப் பயணங்கள் நடைபெற்றன. இசுகாட்டு என்பார் முதல் குழுவை நடத்திச் சென்று அண்டார்டிக்காவின் உட்பகுதிகளை ஆராய்ந்தார். எட்வர்டு சாக்கில்ட்டன் (Edward Shackeltan) ஆங்கிலேய அண்டார்டிக்கு ஆய்வுப் பயணத்தை (1907-09) முன்னின்று நடத்தினார். அதில் பங்கு கொண்ட பேராசிரியர் எட்சுவொர்த்து தேவிடு (Prof. Edgeworth David) முதல் தடவையாகத் தென் காந்த துருவத்தை (South Magnetic Pole) அடைந்தார். இசுகாட்டும் அவரது குழுவும் தென் துருவத்தை 1912-ஆம் ஆண்டு சனவரி 17-ஆம் நாள் அடைந்தனர். பின்னர், அவர்கள் தம் நாடு திரும்புகையில் மாண்டனர். சாக்கில்ட்டன் (Shackleton) என்பவர் 1914-16 ஆண்டளவில் அக்கண்டத்தைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவரது கப்பலாகிய எண்டியுரன்சு (Endurance) பனிக்கட்டியினால் நாசமாயிற்று.

அண்டார்டிக்காவை நன்கு கண்டறிய எடுத்த முதல் முயற்சியாக அமைந்தது. 1928-29-இல் நிகழ்த்த வில்கின்சு-கார்சுட்டு (Wilkins Hearst) அண்டார்டிக் படையெடுப்பாகும். இரிச்சர்டு பைவிடு (Richard Byrd) என்பவரால் மூன்று கட்டப்படையெடுப்புகளாக முறையே 1928-30, 1933-35, 1939-41 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டன. பைரிடு தமது முதல் படையெடுப்பைத் தென்துருவத்தின்மீது 1929-இல் மேற்கொண்டார். மற்றொரு அமெரிக்கராகிய இலிங்கன் எல்கவொர்த்து (Lincoln Ellsworth) என்பவர், 1935-இல் அண்டார்டிக்கு மீது பயணம் செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டு அண்டார்டிக்கு ஆய்வு என்னும் இயக்கத்தின் கீழ், பிரிட்டன் ஒரு முறையான ஆய்வுப் பயண நிகழ்ச்சித் திட்டத்தினால் அண்டார்டிக்காவின் பிரிட்டுப் பகுதியில் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. இந்தியக் குழு 1985-இல் நான்காம் முறையாக அண்டார்டிக்கா சென்று திரும்பியது. மீண்டும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காண்க: த.க. அண்டார்டிகா.

ஆழ்கடல் ஆய்வுப் பயணம்: கடல்களின் ஆழம், கடல் வாழ்வு ஆகியவற்றை அளந்தறிய முதன் முறையாக, கி.பி. 1872-இல் ஆய்வுப் பயணம் தோற்று விக்கப்பட்டது. இதே ஆண்டு இலண்டன் இராயல் கழகம் (Royal Society of London) கப்பல் போட்டியாளர்களுக்கு (Challengers) இயந்திர உதவிகளைச் செய்து உலகத்தின் ஆழ்கடல்கனைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்குமாறு தூண்டியது. இந்தக் கழகம் ஒரு பிரிட்டிசு அறிவியல் கழகம் ஆகும். சார்கை வைவில்லி தாம்சன் (Charles Wyville Thomson) என்னும் இசுகாட்லாந்தைச் சேர்ந்த இயற்கைவாதி. கடல் ஆய்வுப் பயணத்திற்குத் தலைமை தாங்கினார். போட்டியாளர்கள் கடலில் மூன்றாண்டுக்கும் மேலாகச் செலவிட்டுச் சுமார் 70,000 (110,000 கி.மீ.) மைல்கள் வரை பயணம் செய்தனர். குறிப்பிடத்தகுந்த இந்தப் பயண ஆய்வு, கடலைப் பற்றிய அறிவியல் ஆய்வின் வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றது.

நார்வே ஆய்வாளராகிய பிரிடிக்சாட்டு நால்சென் (Fridikjot Nansen) என்பவர் எந்த ஆழத்திலிருந்தும் கடல் நீரின் மாதிரிகளை எடுப்பதற்கும் அவற்றின் வெப்பத்தை அளப்பதற்கும் உரிய கருவிகளை 1900-ஆண்டில் தொடக்கத்தில் உருவாக்கினார். வில்லியம் பீபி (William Beebe) என்னும் அமெரிக்க இயற்கை வாதி 1934 இல் பெர்மூடாக் (Bermuda) கடலில் செங்குத்தாகப் பாய்ந்து மூழ்கிக் கடலினுள் அரைமைல் தூரம் சென்றார். இந்த முறையில் இவர் நீர் மூழ்கும் ஒரு பொறியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பொறியின் பெயர் பாத்தி இசுபியர் (Bathy Sphere) என்பதாகும். இசுவிசு (Swiss) நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞரான ஆங்னசு பிக்கார்டு (Angnste Piccard) என்பவர் கடல் ஆய்விற்குப் பொருமளவில் தம் பங்களிப்பைச் செய்தார். இவர் நீர்மூழ்கும் இயந்திரமாகிய பாத்திசு கேப்பு (Bathy scaph) என்பதைக் கண்டுபிடித்தார். பிக்கார்டு (Piccard) என்பவரின் மகள் சாக்குயிசு (Jacques) என்பவரும் அமெரிக்கக் கப்பற் படையைச் சேர்ந்த தான் வால்சு (Don walsh) என்பவரும் சேர்ந்து நீர் மூழ்கும் பொறி-