ஆயுள் அட்டவணை
546
ஆயுள் அட்டவணை
ஆண்டுகள் வாழ இருப்பதைக் குறிக்கிறது. அட்டவணைப்படி, 20 ஆம் வயதைக் கடந்த பிறகு 2,618,304 குழந்தைகள் வாழ்வார்கள்.
பகுதி ஏழு: e°x - குறிப்பிடப்பட்டுள்ள இடைவெளியின் தொடக்க வயதில் (x) வாழும் ஒருவரின் மீதமிருக்கும் சராசரி ஆயுட் காலத்தைக் குறிக்கிறது. இதனை ஒருவர் வாழக்கூடிய அல்லது எதிர்பார்த்தக்கூடிய ஆயுட் காலம் (Expectation of life) எனக் கூறலாம். அட்டவணை தெரிவிப்பதைப் போல், 20-ஆம் பிறந்த நாளை அடையும் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 39.28 ஆண்டுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் அட்டவணையில் என்னென்ன பகுதிகள் காணப்படுகின்றனவோ அவை அனைத்தையும் சுருக்கப்பட்ட ஆயுள் அட்டவணையில் காணலாம். ஆனால், ஆயுள் அட்டவணையில் உள்ள qx, dx, lx எல்லாம் ஒரு வயது இடைவெளிக்காகக் கொடுக்கப்பட்டவை. மற்றவை lx, Tx, e°x அனைத்தும் இரண்டு ஆயுள் அட்டவணைகளிலும் ஒன்றுதான். qx மதிப்புகளை வைத்துக்கொண்டு ஒரு வரைபடம் (Graph) வரைந்தால் அது ஆங்கில. எழுத்து ‘U’ வடிவத்தில் அமைவதைக் காண முடியும். இவ்வடிவம் மிக இளம் வயதிலும் மிக முதிர்ந்த வயதிலும் நிகழும் மிகுதியான இறப்பைக் குறிக்கிறது.
வாழும் காலமும் வாழ்நாள் எதிர்நோக்கும்: வாழும் காலம் (Life Span) என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கும். வாழும் காலத்தை வயது வாயிலாகவே குறிப்பிட முடியும். வாழும் காலத்தைப் பொறுத்தமட்டில் இறக்கும் வயது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு நாட்கள் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பைக் கூறுவது வாழ்நாள் எதிர்நோக்கு (Life Expectancy) எனப்படும்.
ஆயுள் அட்டவணை வடிவமைத்தல்: பிறப்பு, இறப்பு, மக்கள் தொகை ஆகியவை தொடர்புடைய விவரங்கள் நிறைவுடன் கிடைக்கும்போது மட்டிலுமே ஆயுள் அட்டவணை அமைக்க இயலும், புள்ளி விவரங்களில் பின்தங்கி இருக்கும் நாடுகளுக்காக மாதிரி ஆயுள் அட்டவணை அமைக்கப்படுகிறது. பிறப்பு இறப்பு, மக்கள்தொகை ஆகியவை தொடர்புடைய விவரங்கள் உண்மையானவை என்ற அடிப்படையில் ஆயுள் அட்டவணை அமைப்பதற்குக் கணித சூத்திரங்களும் மக்கள்தொகைச் செயல்முறைகளும் (Demographic Procedures) பயன்படுத்தப்படுகின்றன. ஆயுள் அட்டவணை அமைப்பதில் சிறப்பாக ஒன்றைக் கருத்தில் கொள்ளவேண்டும். பயன்படுத்தப்படும் புள்ளி விவரங்களில் தவறுகள் இல்லாதவாறு அவை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆயுள் அட்டவணை உருவாக்கத்திற்குத் தேவையான முறையைத் தேர்ந்தெடுப்பது, தொடர்புடைய விவரங்கள் எந்த அளவிற்குப் போதுமானவையாகவும் விரும்பத்தக்கனவாகவும் உள்ளன என்பதைப் பொறுத்தது.
ஆயுள் அட்டவணையின் பயன்கள்: 1. ஆயுள் அட்டவணை இறப்புப் பகுப்பாய்வில் (Mortality Analysis) பெருமளவில் உதவுகிறது. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் இறப்பு நிலையை அளக்கப் பயன்படுகிறது. ஒவ்வொரு பிறந்த தேதியை அடையும் போதும் ஒரு குறிப்பிட்ட மக்களில் எத்தனை பேர் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. மனிதன் பிறக்கும்போது அவன் சராசரியாக எவ்வளவு காலம் வாழ்வான் என்ற எதிர்பார்ப்பை அறுதியிட்டுக் கூறுகிறது.
இது நாடுகளுக்கிடையே தத்தம் இறப்பு நிலையை ஒப்பிட்டுப் பார்க்க உதவுகிறது. இதன் காரணமாக நாட்டின் பொதுவான நல்வாழ்வு நிலையை அறிய முடியும். ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள், இந்த அட்டவணையின் அடிப்படையில் தங்கள் காப்பீட்டாளர்களுக்கான கட்டணத்தைக் கணக்கிடுகின்றன.
2. அடிப்படைப் புள்ளி விவரங்கள் (Vital Statistics) வழங்கும் பதிவேடுகளை ஆழ்ந்து பார்ப்பதற்கு ஆயுள் அட்டவணை உதவுகிறது. இதன் வாயிலாகக் கணக்கிடப்படும் வெவ்வேறு விகிதங்களைக் கொண்டு உண்மையில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு விகிதங்களோடு ஒப்பிட முடியும். பிறப்பு இறப்புத் தொடர்பான புள்ளி விவரங்களை வழங்கும் பதிவேடுகள் எந்த அளவிற்கு நம்பத்தக்கனவாக உள்ளன என்பதை அறிய முடியும். பெரும்பாலான பின்தங்கிய நாடுகளில் பெருமளவில் பிறப்பும் இறப்பும் பதிவு செய்யப்படாமலிருப்பது ஒரு பெருங் குறையாகத் தெரிகிறது. இதனைக் குறைவுப்பதிவு (Under Registration) என்று சொல்லுவர். ஆயுள் அட்டவணை வாயிலாகப் பெறப்படும் இறப்பு வீதத்தைப் பதிவு செய்யப்பட்ட இறப்பு வீதத்தோடு ஒப்பு நோக்கி, எத்தனை விழுக்காடு அளவிற்குக் குறைவுப் பதிவு நிகழ்ந்துள்ளதென்பதை அறியமுடியும்.
3. மாதிரி ஆயுள் அட்டவணையின் உதவியால் இறப்புத் தொடர்பான புள்ளி விவரங்களின் தரத்தைச் சோதித்துப் பார்க்க இயலும்.
4. நிகழும் இறப்புகளை அவற்றின் காரணங்களோடு ஒப்பிட்டுப் பகுத்து அறிந்துகொள்ள ஆயுள் அட்டவணை உதவுகிறது.
5. கருவளம், இனப்பெருக்கம் ஆகிய-