ஆயேசியசு
561
ஆர்க்காட்டு நவாபுகள்
னிகழ்ச்சி ஒப்பந்தங்களாகச் (Contingent of Contracts) கருதப்படுகின்றன.
சொத்துரிமை மாற்றுச் சட்டக் (Transfer of Properties) கட்டுப்பாடுகளின்படி, ஆயுன் காப்பீட்டு ஒப்பந்தங்கள் மாற்றம் செய்யத் தக்க ஓர் உடைமையாகும். ஆகவே, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உடைமை மாற்றம் செய்யப்படுவது உடனே காப்பீட்டாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டுவது இன்றியமையாததாகிறது.
பா.வ.
துணை நூல்கள்:
Sharma R.S., Insurance - Primiables and Practice, Bombay, 1960.
Arif Khau M., Theory and Practice of Insurance. Aligarh, 1976. The ... Insurance Act, 1938, Government of India.
Bajpal D.P.. Life Insurance, Allahabad, 1957.
ஆயேசியசு, (கி.பி. 396-454) ஓர் உரோமானியப் படைத்தலைவர். தம் வாழ்வின் தொடக்கத்தின் ஒரு பகுதியை இவர் நாகரிகம் குறைந்த ஊணர்களிடமும், கோத்துகளிடமும் பிணையக் கைதியாகக் கழித்தார். பின்னர் ஆவேசியசு (Aetius) ஏனைய நாகரிகம் குறைந்த படை வீரர்களைப் பயன்படுத்திச் சீரழிந்து வந்த உரோமானியப் பேரரசின் மேற்குப் பகுதிகளை நிலை நிறுத்த முயன்றார். இந்தாலியில் கி.பி.424- ஆம் ஆண்டில் சட்டத்தை நிலைநாட்டினார். பின்னர் இவர் கால் (Gaul) நாட்டின் படைத்தளபதியாக அமர்த்தப் பெற்றார். மேற்கில் தம் திறமையையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்திய படைத்தலைவராக இவர் மதிக்கப் பெற்றார். இவரது புதழைக் கி.பி. 451-இல் நடைபெற்ற சாலோன்சு (Chalons) என்னும் மாபெரும் போர் எடுத்தியம்பும். இப்போரில் ஊணர்களின் படையைத் தலைமையேற்று நடத்திய அட்டிலாவை, விசிகோத்துகளைக் கொண்டிருந்த ஆயேசியசின் படை தோற்கடித்தது. அடுத்த ஆண்டில் இத்தாலி மீது படையெடுத்த ஊணர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் என்ற ஐயத்திற்கு ஆளான ஆயேசியசைப் பேரரசர் மூன்றாம் வேலண்டினியன் (Valentinian III) கொன்றுவிட்டார்.
ஆர்க்காட்டு நவாபுகள் கி.பி. 18,19-ஆம் நூற்றாண்டுகளில் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரை மையமாகக் கொண்டு அரசாண்ட இசுலாமிய அரசர்கள். அரைங்கசீப்புத் தம் தக்காணப் படையெடுப்பின்போது கி.பி. 1689-ஆம் ஆண்டில் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் மராத்தியர்கள் ஆண்ட தஞ்சாவூரும், நாயக்கர்கள் ஆண்ட திருச்சியும் கைப்பற்றப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டன. மராத்தியர்களும், நாயக்கர்களும் மொகலாயரின் மேலாண்மையை ஒப்புக் கொண்டு, கப்பம் செலுத்துவதாக உறுதி அளித்தனர். புதிதாக வென்ற கருநாடகப் பகுதி, வடக்கே ஓங்கோலையும் தெற்கே செஞ்சியையும் கிழக்கே சோழமண்டலக்கரையையும் எல்லைகளாகக் கொண்டமைந்தது. பாலாற்றின் கரையில் உள்ள ஆர்க்காடு தலைநகரமாரியது. அப்பகுதி முகலாயரின் தலைநகருக்கு வெகு தொலைவில் இருந்ததால், அப்பகுதியின் தொடர்பைத் தொடர்ந்து வைத்திருக்கவும், நிலவரி முதலிய வருவாய்களைப் பெறவும், செலவினங்களை மேற்கொள்ளவும் ஆளுநர் ஒருவரை அமர்த்தினார். அவரே ‘நவாபு’ எனப்பட்டார். சுல்பிகர்கானுக்குத் துணையாக விளங்கிய தாவுத்கானால் கி.பி. 1710-ஆம் ஆண்டு சாததுல்லாகான் என்பார் நவாபாக அமர்த்தப்பட்டார். இவரது ஆட்சி அமைதியாகவும் சீராகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இவர் கி.பி.1732 வரை ஆட்சி செய்து இறந்தார். இவர் மகன் தோகத்து அலி (Dost Ali) கி.பி.1732 இல் நவாபாகப் பொறுப்பேற்றார். இவர் கி.பி.1740 வரையில் ஆண்டார். இவர் மகன் சப்தார் அலி: மருமகன் சந்தா சாகிபு. தோசுத்து அலி இவர்கள் இருவரிடமும் நவாபுப் பொறுப்பை விட்டுவிட்டுத் தாம் ஆட்சி புரியாமல் இருந்தார். சந்தா சாகிபு மராத்தியர் ஆண்ட தஞ்சையையும், நாயக்கர் ஆண்ட திருச்சிராப்பள்ளியையும், மதுரையையும் கைப்பற்றினார். மதுரையை ஆண்ட மீனாட்சி தற்கொலை புரிந்து கொண்டாள். தாம் கைப்பற்றிய பகுதிகள் எல்லாவற்றுக்கும் தாமே நாவாபு எனச் சந்தா சாகிபு அறிவித்தார்.
போரில் தோல்வியுற்ற தஞ்சை மராத்திய அரசர், பீசுவாவின் உதவியைக் கோரினார். பீசுவா, மராத்திய அரசருக்கு உதவி செய்ய இரகோசி பான்சுலே. பத்தேசிங்கு ஆசிய படைத்தலைவர்களுடன் ஒரு பெரும் குதிரைப் படையை அனுப்பிவைத்தார். மராத்தியப் படை நவாபுப் படையுடன் தமால்சேரி கணவாய் என்னும் இடத்தில் கி.பி. 1740 இல் போரிட்டுத் தோற்கடித்தது. போரில் தோசுத்து அலி இறந்து விட்டார். அவர்தம் திவானான மீர் ஆசாத்துச் சிறைப்படுத்தப்பட்டார். மராத்தியர்கள் தோசுத்து அலியின் மகனையே நவாபாக மதித்து அவருடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டனர். அதன்படி நவாபு இரகோசி பான்சுலேவுக்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்து அமைதி ஏற்படுத்தினார். மேலும், ஆண்டுதோறும் ‘சௌத்து’ எனப்படும் நான்-