ஆர்க்டிக்கு வட்டம்
565
ஆர்கன்
வல்லுநர் கி.பி. 300-ஆம் ஆண்டளவில் கப்பலில் பயணஞ் செய்து ஆர்க்டிக்கு வட்டத்திற்கு மிக அருகில் சென்று திரும்பினார். கடற்கொள்ளையர் (Vikings) கி.பி. 800-ஆம் ஆண்டளவில் இங்குக் கப்பற் பயணம் செய்து வந்தனர் என்று வரலாற்றாசிரியர் கருதுவர். ஆர்க்டிக்குப் பெருங்கடல் பக்கம் கி.பி. 1900-ஆம் ஆண்டு வரை பயணம் செய்தவர்கள் மிகக் குறைவு. ஆனால், இன்று இப்பெருங்கடல் சிறப்பான வாணிக, இராணுவச் சிறப்புத் தன்மைகள் வாய்ந்ததாக மாறி வருகிறது.
ஆர்க்டிக்கு வட்டம் கனடா, அலாசுகா, உருசியா, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளின் வட பகுதிகளில் இருப்பதாகக் கருதப்படும் ஒரு கற்பனைக் கோடு. 66.30° வட குறுக்குக் கோட்டிற்கு வடபால் உள்ள பகுதிகள் ஆர்க்டிக்கு வட்டத்திற்குள் வரும். சூரியன் அடிவானத்திற்கு மேல் ஒவ்வோர் ஆண்டும் ஒன்று அல்லது பல நாட்கள் மறையாமல் தென்படும். இது ஆர்க்டிக்கு வட்டத்தில் காணப்படும் சிறப்பியல்பாகும். ஒவ்வோர் ஆண்டும் சூன் 21-ஆம் நாள் சூரியன் மறைவதே இல்லை. இதுவே கோடைக் காலத்தின் மிக நீண்ட பகலாகும். திசம்பர் 21-ஆம் நாள் சூரியன் தென்படாத நாளாகும். குளிர்காலத்தில் இதுவே குறுகிய பகலாகும். வடதுருவத்தில் சூன் 21-ஆம் நாளுக்கு முன் 90 நாட்களும் பின் 90 நாட்களும் சூரியன் தென்படுகிறது. வானம் மேக மூட்டமில்லாமல் இருப்பின் இக்காட்சியை அங்கு உறுதியாகக் காணலாம். திசம்பர் 21-ஆம் நாளுக்கு முன்னரும் பின்னரும் அடிவானத்திற்குக் கீழ் சூரியன் தென்படுகிறது.
ஆர்கலிசு என்பது, கிரீசு (Greece) நாட்டின் வடகிழக்குப் பெலப்பனீசசுவின் (Peloponnesus) பெயராகும், இதன் வடக்கில் காரிந்தும், மேற்கில் ஆர்க் கேடியாவும் எல்லைகளாக உள்ளன. இதே பெயரில் ஒரு மாவட்டமும் உள்ளது. ஆர்கலிசு (Argolis) என்னும் வளைகுடா ஈசியக் கடலைச் சார்ந்துள்ளது. இங்கு ஆர்காசு (Argos) என் நகரமும் நாப்பிலியா (Nauplia) என்னும் துறைமுகமும் உள்ளன. நாப்பிலியா ஆர்கலிசுவின் தலைநகராகும். அங்குச் சந்தைக்கடையும் புகையிலை பதனிடும் மையமுமுள்ளன. ஆர்கலிசு கி.பி. 1830 முதல் 1834 வரை இக்காலக் கிரீசின் தலைநகராயிருந்தது. இதன் பரப்பு 2214 ச.கி.மீ. மக்கள் தொகை 88,698 (1971).
ஆர்கன், அழுத்தமான காற்றினால் இயக்கப்படும் ஓர் இசைக் கருவியாகும். இக்கருவியிலுள்ள குழாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஒலியைத் தோற்றுவிக்கும். பெர்லின் அருங்காட்சியகத்தில் காணப்படும் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் இசைக் கருவியின் உருவம், இக்காலத்து ஆர்கன் என்னும் இசைக் கருவியை ஒத்திருக்கிறது, மண்ணாலான இவ்வுருவம், சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் ஆர்கன் என்ற இசைக்கருவியுடன் இணைந்து பாடுவதாக அமைந்துள்ளது. இக்கருவியிலுள்ள குழாய்களைத் துருத்தியுடன் இணைத்து, அத்துருத்தியைத் தன் கால்களினால் அழுத்துவதால் ஒலியெழுப்புவதைப் போன்று இவ்வுருவம் காணப்படுகிறது.
உரோமானிய நாட்டில் பழக்கத்தில் இருந்து வந்த ஆர்கன், மிகுந்த வன்மையான ஒலியை எழுப்பக் கூடியதாக அமைந்திருந்தது. இது துன்பியல் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருந்ததால் திருச்சபை இக்கருவியைச் சிலகாலம் வரையில் அறவே விலக்கியிருந்தது. இசுபானியத் திருச்சபைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தும், இங்கிலாந்துத் திருச்சபைக் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்தும் இக்கருவியைப் பயன்படுத்தத் தொடங்கின.
அக்காலத்து ஆர்கள் பெட்டியில் பல குழாய்கள் இருந்தன. காற்றைத் துருத்தியால் அக்குழாய்களின் வழியே உள்ளே செலுத்தி ஒலிக்குமாறு செய்தார்கள். இக்குழாய்களில் ஏதாவது ஒருகுழாயை ஒலிக்காமற் செய்ய அதன் வாயைக் கையால் மூடிக் கொண்டு மற்றவற்றை ஒளிக்குமாறு செய்வார்கள். உலோகத்தகட்டால் குழாய்களை மூடும் வழக்கம் பின்னர் வந்தது. இதன் ஒலி நீண்ட தூரம் கேட்டது. மாதா கோவில்களில் குழு கானத்திற்கு இவ்விசைக் கருவி பயன்படுத்தப்பட்டது. பிறகு கையினால் இசைக்கும் கட்டைகளைத் தவிர காலினால் இயக்கும் மிதிகட்டைகளைப் பயன்படுத்திப் பல ஒலிகளை ஒரே காலத்தில் எழுப்பும் முறை தோன்றியது. சோசப் பூத்து என்ற ஆங்கிலேயர், காற்றின் அழுத்தத்தினால் கட்டைகளை எளிதில் இயக்கும் முறையைக் கண்டுபிடித்தார். மின்சாரத்தால் இயங்கும் கட்டைகள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வகை ஆர்கனில் சாவியை அழுத்தினால் மின்காந்தம் இயங்கத் தொடங்கிக் குழாய்கள் ஒலிக்கின்றன.
பெரும்பாலும் நான்கு கட்டைப் பலகைகளையும் (Keyboards) ஒரு மிதி பலகையையும் கொண்டதாக இக்காலத்தில் ஆர்கள் விளங்குகிறது. இது இதன் கட்டைகளிலிருந்து 64 ஒலிகளையும் மிதிபலகைகலிலிருந்து 32 ஒலிகளையும் தரக்கூடியதாக இருக்கின்றது. இங்கிலாந்தில் ஆல்பர்ட்கால் என்னும் அரங்கிலுள்ள ஆர்கன் 9,723 குழாய்களையும், 146 குழாய்த் தொகுதிகளையும் கொண்டிருக்கிறது. இதுவே மிகப் ஆர்கன் என்று கருதப்படுகிறது. இதற்கும் பெரியதாக பெரிய லிவர்பூல் என்னுமிடத்திலுள்ள மாதா கோவிலில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆர்கனுக்குத் தகுந்த