ஆர்கனாட்டுகள்
566
ஆர்சென்டினா
இசையை இயற்றிய வல்லுநர்களுள் பாக்கு (Bach) என்பவர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
ஆர்கனாட்டுகள் கிரேக்கப் புராணத்தில் வரும் வீரர்களையும், அவர்கள் தலைவன் சேசன் (Jason) என்பவனையும் குறிக்கும் சொல்லாகும். ஆர்கோ (Argo) என்னும் கப்பலில் பயணம் மேற் கொண்டதால் ஆர்கனாட்டுகள் (Argonauts) எனக் குறிக்கப்பட்டனர். அக்காலத்தில் கட்டப்பட்ட கப்பல்களுள் ஆர்கோ மிகப் பெரிய கப்பலாக விளங்கியது. இக்கப்பலில் ஏறத்தாழ 50 கிரேக்க வீரர்கள் பயணம் மேற்கொண்டு, கருங்கடற்கரையில் ஒரு பூதம் காத்து வந்த பறக்கும் செம்மறியாட்டில் பொன்மயிர்த்திரளைத் தேடிச் சென்றனர். அங்குச் சேசன், மீடியா என்னும் இளவரசியின் உதவியுடன் அத்திரளைத் கைப்பற்றினான். சேசன் மீடியாவை அழைத்துக்கொண்டு தெசாலி நாட்டுக்குச் சென்றான்.
ஆர்கான், பிரான்சு நாட்டிலுள்ள காடு; பாரிசு மாநகர் வடிநிலத்தையொட்டியுள்ளது. இக்காடுகள் 30 கி.மீ. அகலமும் 40 கி.மீ. நீளமும் கொண்டவை. ஆர்கானில் (Argonne) செங்குத்தான மலைமுகடுகளும் ஆழமான குறுகிய பள்ளத்தாக்குகளும் உள்ளன. இங்குப் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. முதல் உலகப் போரின் போது 1918-இல் இப்பகுதியில் செருமானியர் அமெரிக் கருக்கெதிராகக் கடும் போர் புரிந்தனர்.
ஆர்கிரீவ்சு,சேம்சு (கி.பி.1722-1778) ‘நூற்கும் சென்னி’ (Spinning Jenny) என்னும் நூல் நூற்பதற்குப் பயன்படும் கருவியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர். நூற்கும் சக்கரங்கள் பலவற்றைக் கொண்டு நூல்கண்டுகளை நேராக வைத்து இயக்கியமை, இந்தக் கருவியின் சிறப்பாகும். இதற்குச் சட்டம் ஒன்றையும் இணைத்து இக்கருவியை உருவாக்கினார்.
தூற்கும் சென்னி
இங்கிலாந்தில் இசுடான்ட்சில் என்னும் ஊரைச் சார்ந்த நெசவுத் தொழிலாளியாகிய ஆர்கிரீவ்சு சேம்சு (Ilargreaves James) இக்கருவியைத் தம் வீட்டிலேயே முதன் முதலாகப் பயன்படுத்தினார். இவருடைய எந்திரத்தை இயக்கி மிகுதியாக நூல் நூற்பதைக் கண்ட மற்ற நெசவாளர்கள் பொறாமை கொண்டனர். அவர்கள் ஆர்கிரீவ்சின் வீட்டிற்குள் நுழைந்து இவருடைய எத்திரத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதுடன், இவரையும் அந்நகரத்திலிருந்து விரட்டி அடித்தனர். அங்கிருந்து இவர் கி.பி. 1768-இல் நாட்டிங்காமிற்குச் சென்றார். அங்கு வளமான நூற்பாலையொன்றை நிறுவ உதவினார். இவருடைய எந்திரம் அவ்வாலையில் பயன்படுத்தப்பட்டது. ஏனைய உற்பத்தியாளர்களும் இவருக்குப் பொருள் ஏதும் கொடுக்காமல் சென்னியைப் பயன்படுத்தினர். ஆர்கிரீவ்சு தம் வாழ்நாளில் இறுதிக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தார். எலினும் இவர் கண்டு பிடித்த எந்திரத்தால் இவருக்கு மிகுந்த இலாபம் கிட்டவில்லை.
ஆர்கூசு தென்மார்க்கு (Denmark) நாட்டின் இரண்டாம் பெருநகரம்; சட்லாந்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகப்பட்டினம். ஆர்கூசு (Aarhus) வாணிகத்திற்கும் தொழிற் சாலைகளுக்கும் மையமாக விளங்குகிறது. இங்குக் கி.பி.1200-ஆம் ஆண்டில் கட்டப் பெற்ற அழகான மாதா கோவிலொன்று உள்ளது. பல்கலைக்கழகமொன்று 1928-இல் இங்கு நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தொகை 2,46,679 (1982).
ஆர்சென்டினா தென் அமெரிக்காவிலுள்ள இரண்டாம் பெரிய நாடு, அமெரிக்காக் கண்டத்தின் தெற்கில் நீண்டு அமைந்துள்ள இந்நாட்டின் வடக்கில் பொலீவியாவும், பராகுவேயும், மேற்கில் சிலியும், வடகிழக்கில் பிரேசிலும், உருகுவேயும், கிழக்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக்குக் கடலும் எல்லைகளாக உள்ளன.
செபாசுடியன் கேபாட்டு (Sebastian Cabot) என்பார் கி.பி.1526-ஆம் ஆண்டு தென் அமெரிக்கப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதிகளில் வெள்ளி இருப்பதைக் கண்டறிந்தார். அவர் கண்டறிந்த ஆற்றுக் கழிமுகப் பகுதிக்கு இரியோ-டி லா பிளாட்டா (Rio-de la Plata) எனப் பெயரிட்டார். இதற்கு வெள்ளி ஆறு (River of Silver) என்பது பொருள். இப்பகுதியினைச் சுற்றி-