உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்ட்போர்டு

571

ஆர்டிஞ்சு

உருகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் நல்லுறவுக்கான உடன்படிக்கை செய்துகொண்டது.

இங்கு 1943-ஆம் ஆண்டு ஏற்பட்ட திடீர்ப் புரட்சியின் விளைவாக இரமோன் எசு காசுடிலோ (Ramon S. Castillo) என்னும் குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பெற்றதால், செனரல் எடில்மிரோ பெரல் (General Edelmiro- Farrell) என்பவர் பதவியேற்றார். இவர்தம் போர் அமைச்சராகவும் உதவிக் குடியரசுத் தலைவராகவும் இருந்த பெரான் (Juan Domingo Peron) என்பவர் படை உதவியுடன் ஆட்சியினைக் கைப்பற்றினார். பெரான் 1955-ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்தார். கிறித்தவக் கோயில்கள் பல 1955-ஆம் ஆண்டு நிகழ்ந்த படைக் கலவரத்தின் விளைவாகப் போனசு அயர்சில் எரிக்கப்பட்டன. பெரானின் ஆட்சி கவிழ்க்கப்படவே, அவர் ஆர்சென்டினாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

ஆர்சென்டினாவிற்கும் அச்சு நாடுகளுக்குமிடையே 1945-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் போர் மூண்டது. அவ்வமயம் இரண்டாம் உலகப் போர் முடியும் நிலையில் இருந்தமையால் ஆர்சென்டினா போரில் ஈடுபடத் தேவையில்லாமல் போயிற்று. பெரான் ஆட்சியில் ஆர்சென்டினாவில் முன்னேற்றங்கள் பல ஏற்பட்டன. செனரல் அலிசென்ரோ ஏ லானூசு (General Alejandro A Lanusse) என்பவரின் அழைப்பிற்கிணங்கப் பெரான் இசுபெயினிலிருந்து 17 ஆண்டுகள் கழித்து ஆர்சென்டினா திரும்பினார். இவர் தம் ஆதரவாளர்கள் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றினார்.

துணை நூல்கள்:
Whitakar, Arthur, P., Argentina, Englewood Cliffs, N.J., 1964.
Fitzgibbon, Russell, H., Argentina: A Chronology and Fact Book, Dobbs Ferry, New York, 1973.

ஆர்ட்போர்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கனக்டிகட்டு (Connecticut) மாநிலத்தின் தலைநகரும், இரண்டாம் பெரிய நகரமுமாகும். இம்மாநிலத்தில் இதைவிடப் பெரிய நகரமாக விளங்குவது பிரிட்சுபோர்ட்டு (Bridgeport) என்னும் நகரமாகும். ஏறத்தாழ 50 ஆயுள் காப்புக் கழகங்களின் மையமாக ஆர்ட்போர்டு (Hartford) விளங்குகிறது. இதனை ஆயுள் காப்பீடு நகரம் (Insurance City) என்பர். செய்தொழில்களின் மையமாகவும் இந்த ஊர் விளங்குகிறது. கனக்டிகட்டு ஆற்றின் மேலைக்கரை நகரமாக இது பாசுட்டனுக்கும் (Baston) நியூயார்க்கு மாநகருக்கும் இடையிலுள்ளது. நெதர்லாந்து நாடு கி.பி. 1633-இல் ஆர்ட்போர்டு பகுதியில் வாணிகத்தலம் ஒன்றை அமைத்தது. தாமசு ஊக்கர் (Thomas Hooker) என்பவரின் தலைமையில் மசாசு செட்சுவைச் சார்ந்த ஆங்கிலக் குடியேற்றவாதிகள் கி.பி. 1636-இல் ஆர்ட்போர்டை நிலைநாட்டினர். எர்ட்போர்டு (Hertford) என்னும் ஆங்கில நகரத்தின் நினைவாக இந்நகரம் ஆர்ட்போர்டு எனப் பெயரிடப்பட்டது.

ஆர்ட்போர்டின் பரப்பளவு 52 ச.கி.மீ. இங்கு ஆர்ட்போர்டு பல்கலைக்கழகமும், மேற்கு ஆர்ட்போர்டில் புனித சோசப்புக் கல்லூரியும் அமைந்துள்ளன.

ஆர்டிஞ்சு என்னும் பெயருடைய இருவர் இந்தியாவின் அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர்.

முதலாம் ஆர்டிஞ்சு (1785-1856): இவர் கி.பி. 1844 முதல் 1848 வரை இந்தியாவின் அரசப்பிரதிநிதியாக இருந்தார். என்றி ஆர்டிஞ்சு (Henry Hardinge) என்பது இவரது இயற்பெயர். இவர் 14-ஆம் வயதிலேயே படையில் திறம்பட விளங்கினார். ஐரோப்பாவில் நடைபெற்ற தீபகற்பப்போரில் பங்குகொண்டு சில வெற்றிகள் பெற்றார். ‘சர்’ என்னும் பட்டத்தைக் கி.பி. 1815-ஆம் ஆண்டில் பெற்றார். இவர் ஆங்கில அரசில் பல உயர் பதவிகளைப் பெற்றுத் திறம்பட விளங்கினார். முதலாம் சீக்கியப் போர் இவரது காலத்தில் (கி.பி. 1845-46) நடந்தது. கல்விக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்தினார்; இராணுவச் செலவைக் குறைத்து நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார். இங்கிலாந்தின் படைத்தலைவராகக் கி.பி.1852-இல் அமர்த்தப்பட்டார். இவர் கி.பி. 1856-ஆம் ஆண்டு காலமானார்.

இரண்டாம் ஆர்டிஞ்சு (1858-1944): இவர் முதலாம் ஆர்டிஞ்சின் பேரர். இவரது முழுப்பெயர் சார்லசு ஆர்டிஞ்சு (Chartes Hardinge). இவர் 1910 முதல் 1916 வரை இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக இருந்தார். இவர் கி.பி.1858-ஆம் ஆண்டு சூன் மாதம் 20-ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள ஐகேட்டு (High Gate) என்னுமிடத்தில் பிறந்தார். இங்கிலாந்தின் அரசரான ஐந்தாம் சார்சு மன்னரின் (King George V) முடிசூட்டு விழாவினை, இந்தியாவில் 1911-ஆம் ஆண்டு தில்லியில் ‘தர்பார்’ ஒன்றைக் கூட்டிக் கொண்டாடினார் வங்கப் பிரிவினையைத் தடுத்து நிறுத்தினார். இவர் இந்தியாவின் தலைநகர் மாற்றும் விழாவிற்கு ஒரு யானையின் மீது பவனி சென்ற பொழுது, இவர் மீது குண்டு வீசப்பட்டது. அதிலிருந்து தப்பிய ஆர்டிஞ்சு இக்குற்றந்தை அவத்பிகாரி, அமிர்சந்து, பால் மோகந்து